
சாப்பாடு நல்லவேளையாகக் கையில் எடுத்துக் கொண்டு போயிருந்தோம். வாங்கியவர்கள் சாப்பிட முடியாமல் தவித்ததைக் காண முடிந்தது. அவ்வளவு காரம் எனச் சொன்னார்கள். சின்னக் குழந்தைக்குக் கொடுக்கும் சர்க்கரைத் தண்ணீர் போல காஃபி, டீ போன்றவை. தயிரும், மோரும் கொஞ்சம் பரவாயில்லை, விலை அதிகமானால் கூட. ரயில்வே கொடுக்கும் உணவின் தரத்தை உயர்த்தி இருப்பதாய்ச் சொல்லும் லாலுவோ, அல்லது சக மந்திரிகளோ, அல்லது அதிகாரிகளோ ரயிலில் பயணிக்கப் போவதில்லை. பயணித்தாலும் தனியாக அனைத்தும் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப வழங்கப் படும். சாமானியர்களின் கஷ்டம் அவர்களுக்குப் புரியப் போவதில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் லாலுவைப் பாராட்டியே ஆகவேண்டும். நாங்கள் சோம்நாத் சென்றிருந்த போது தரிசனம் முடிந்து வெளியே வந்து, அங்கே இருந்த நடமாடும் கழிப்பறை வசதிக்குப் பொறுப்பாக இருந்தவர்களிடம் கஷ்டப் பட்டு நாங்கள் ஹிந்தியில் கேட்க, அவங்க குஜராத்தியில் மறுமொழி சொல்ல பேட்டி கண்டு கொண்டிருந்த சமயம் சைரன் ஒலிக்க ஒரு வண்டி வந்தது.
யாருனு பார்த்தால் திருவாளர் லாலுவே தான். ஆஹா, நம்ம சுற்றுப் பயண விபரம் தெரிந்து தான் நம்மைச் சந்திக்க வந்திருக்கார் போலிருக்கு. இல்லைனா ரயிலில் நாம சண்டை போட்டது தெரிஞ்சு சமாதானம் சொல்லத் தேடிட்டு வந்திருக்கார்னு நினைச்சேன். :P:P:P:P கடைசியில் பார்த்தால், (முதல்லே இருந்தே தான்) லாலு சோம்நாத் கோயில் தரிசனத்துக்கு வந்திருந்தாராம். ஒரு வண்டியில் லாலுவும், மற்றொரு வண்டியில் மாநிலக் காவல் துறையின் பாதுகாப்புக்களும், லாலுவுக்காக ஒரு ஆம்புலன்ஸும் ஆக மொத்தம் மூன்று வண்டிகளையே பார்த்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் மயக்கமே வந்துடுச்சு. அட, அதான் போகட்டும், அவரோட கட்சிக் கொடியையாவது பறக்க விடக் கூடாதா? ம்ஹூம், பறக்கவே இல்லைங்க, இது என்ன அநியாயம்னு புரியலை. ஆனால் இந்த அநியாயம் தமிழ்நாடு தாண்டினதும் ஆந்திராவில் இருந்தே ஆரம்பிக்குது.


போன்ற நதிக்கரைகளிலும் அப்படித் தான் இருக்கு. என்ன மக்கள் போங்க! ஒரு துணி துவைக்கிறது, குளிக்கிறது, லாரியைக் கழுவறது, மாட்டு வண்டிகளைக் கழுவறதுனு பார்க்க முடியாமல் நொந்து போயிட்டேன் போங்க!

கிருஷ்ணா நதியைக் கடக்குமிடம், விஜயவாடாவுக்கு அருகே! ஆகாயத் தாமரைக் கொடிகளோ, மற்ற செடி, கொடிகளோ காண முடியவில்லை. நீரும் கொள்ளிடம், காவிரி போலக் கறுப்பாய் இல்லை. நாம் எப்போ அப்படி மாறப் போறோம்????????? அங்கங்கே செக் டாம்கள் எனப்படும் தடுப்பணைகளும், அவை விவசாய நிலங்களுக்குச் செல்லத் தோதான கால்வாய்களையும், குடியிருப்புகளுக்குச் செல்லுமிடங்களில் நீர் இறைக்கும் பம்ப்செட்களும் காணப் படுகின்றன. எல்லாவற்றிலும் முக்கியமானது ஆளில்லா லெவல் க்ராசிங் ஆனாலும் மக்கள் நின்னு ரயில் போகும் வரையில் காத்திருந்து பின்னர் கடக்கின்றனர். பொதுவாக வட இந்திய மக்கள் பேச்சும், பழக்கமும் நம்மைப் போன்ற தென்னிந்தியருக்கு அலட்சியம் கலந்தும், பொறுப்பில்லாமையாகவும் தெரியும்.
ஆனால் அப்படி இல்லைனு பழகினாலோ, அல்லது நெடுநாட்கள் அங்கே தங்கி இருந்து பார்த்தாலோ புரியும். எங்களோட குஜராத்தில் 25 வருடங்களுக்கு மேலாக இருந்து தொழில் புரியும் ஒரு தொழிலதிபரும் பயணித்தார். அவர் சொன்னது எல்லாமே ஆச்சரியமாகவே இருந்தது. 24 மணி நேரம் மின் விநியோகம், குடி நீர் விநியோகம். செளராஷ்ட்ரா, கட்ச் பகுதியில் தண்ணீருக்கு மக்கள் கஷ்டப் படாமல் இருக்க ஏராளமான ஏற்பாடுகள். வேலை வாய்ப்பில் இந்தியாவிலேயே முதன்மைத் தகுதி வாய்ந்த மாநிலம். இந்த விஷயம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் 15-ம் தேதியிட்ட பதிப்பில் தலைப்புச் செய்தியாகவும் வந்துள்ளது. தொழில் தொடங்குவோருக்குத் தடையில்லாத உள்கட்டமைப்பு வசதிகள். மக்களுக்குத் தொந்திரவில்லாமல் இடம் வாங்கிக் கொடுப்பது தொழில் முனைவோருக்கு. அதில் இரு தரப்பினரும் மோத முடியாத அளவுக்குக் கவனமாக இடத்தைத் தேர்ந்தெடுத்தல் என்று சாமானியர்களைக் கவனத்தில் வைத்து முடிவுகள் எடுக்கப் படுகின்றன. அந்த அளவுக்கு மாநில முதலமைச்சர் உழைத்திருக்கின்றார் என்றால் மக்கள் அனைவருமே அவருக்குத் தோள்கொடுக்கின்றார்கள். இது ஒரு குழுவாகச் செயல்படுவதன் வெற்றி என்றே தோன்றுகின்றது. இன்னும் சோம்நாத், துவாரகை, டாக்கூர், பரோடா, போன்ற ஊர்களில் உள்ள சாமானிய மனிதர்களான ஆட்டோ ஓட்டிகளில் இருந்து துணிக்கடைக் காரர்கள், பலவிதமான வியாபாரிகளிடமிருந்து பேசியதில் குஜராத் நிஜமாகவே முன்னேறிக் கொண்டிருக்கின்றது புரிய வந்தது. ஆனால் வேறு சில மாற்றங்களும் உண்டு.