Tuesday, April 19, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

சிதம்பரத்திலே அம்மையையும், அப்பனையும் கண்டு மகிழ்ந்த வள்ளலார் சிவகாமி அம்மையின் மேல் பத்துப் பதிகங்கள் கொண்ட, “அம்மை திருப்பதிகம்” பாடி அருளினார். அங்கேயே ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து அனைவரும் ஓய்வு எடுத்துக்கொண்ட வேளையில் பண்ணையார் போன்ற தோற்றமளிக்கும் ஒருவர் அவர்களிடம் வந்தார். வள்ளலாரைக் கண்டதும் பணிவோடு வணங்கி நின்றார். அவரிடம் வள்ளலார் அவர் வந்த காரியம் என்ன என வினவ, அவரும், தாம், அருகிலுள்ள வடலூர் என்னும் ஊருக்கருகே உள்ள கருங்குழி என்னும் கிராமத்து மணியக்காரர் என்றும், தம் பெயர், வேங்கட ரெட்டியார் என்றும் தெரிவித்தார். மேலும், வள்ளலாரைப் பற்றி நிறையக் கேட்டிருப்பதாகவும், அவரைத் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்லவே அங்கே வந்திருப்பதாகவும், வள்ளலார் வர இசைவு தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு நின்றார். அப்போது வள்ளலார், தாமும் அங்கே அருகில் உள்ள கிராமங்கள் எதிலாவது தங்கிக்கொண்டு அடிக்கடி சிதம்பரம் வந்து ஆடல்வல்லானைத் தரிசிக்க நினைத்ததாகவும், கருங்குழிக்கு வேங்கட ரெட்டியாரோடு வர ஆக்ஷேபணை எதுவும் இல்லை என்றாலும் தம்முடன் கூட நான்கைந்து சீடர்களும் வந்திருப்பதால் அவர்களைத் தனியே விட்டுத் தாம் மட்டும் வரமுடியாது எனத் தெரிவித்தார். ஆனால் வேங்கட ரெட்டியாரோ அனைவருமே வரலாம் எனக் கூறி, அனைவருக்குமே அழைப்பும் விடுத்தார்.




ஆனால் அவர்களோடு வந்திருந்த வேலாயுத முதலியாருக்குத் தாம் இங்கே வந்து பலநாட்கள் ஆகிவிட்டபடியால், இன்னமும் இங்கே இருக்க முடியாது என்றும், மேலும் தாம் வள்ளலாரோடு தங்கினால் அவருடைய ஞான வாழ்க்கைக்குத் தனிமை கிட்டாது என்றும் கூறினார். வள்ளலாரும் யோசித்து அவர்கள் விருப்பத்துக்கு உடன்பட, சென்னையிலிருந்து வந்த அன்பர்களும், வழியில் அவர்களோடு சேர்ந்து கொண்டவர்களும் வள்ளலாரை விட்டுப் பிரிந்தனர். அவர்களுக்கு அன்போடு விடை கொடுத்து அனுப்பிய வள்ளலார், வேங்கட ரெட்டியாரைப் பார்த்துத் தாம் கிளம்பும் முன்னர் தமக்குத் தனி அறை கிடைக்குமா என நிச்சயம் செய்துகொள்ள விரும்புவதாய்க் கூற, அவ்வாறே தனி அறை ஏற்பாடு செய்து தருவதாய் வேங்கட ரெட்டியார் உறுதி அளித்தார். இருவரும் சிதம்பரத்திலிருந்து கிளம்பி கருங்குழியை வந்தடைந்தார்கள். கருங்குழியில் தமது பரம்பரை நடத்தி வந்த விநாயகர் கோயிலுக்கு முதலில் வள்ளலாரை அழைத்துச் சென்றார் வேங்கட ரெட்டியார். அங்கே குருக்கள் வள்ளலாரைக் கண்டதும் அவர் யார் எனத் தெரிந்து கொண்டு மனமகிழ்வோடு வழிபாடுகள் நடத்திக் கொடுத்தார். வள்ளலார் அந்த விநாயகர் மேல் “கணேசத் திரு அருள் மாலை” என்னும் பத்துப் பதிகம் பாடி அருளினார். பின்னர் இருவரும் வேங்கட ரெட்டியாரின் வீடு நோக்கிச் சென்றனர். ரெட்டியாரின் மனைவியின் பெயர் முத்தியாலு என்பதாகும். அந்த அம்மையார் வள்ளலாரின் வரவால் மகிழ்ச்சி அடைந்தாள்.



அறையை முத்தியாலு அம்மையார் தயார் செய்து வைத்திருந்தார். அங்கே அவர் தங்குவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் அம்மையார் செய்து வைத்திருந்தார். அன்றிலிருந்து வள்ளலாரின் கருங்குழி வாசம் தொடங்கியது. இங்கே இருக்கும்போதே “திரு அருட்பா” எழுதப் பட்டது. மேலும் தல தரிசனங்களும் தொடர்ந்தன. திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருவதிகை வீரட்டானம், திருவண்ணாமலை ஆகிய இடங்களைத் தரிசித்துக்கொண்டு மீண்டும் கருங்குழிக்கு வந்த வள்ளலாரைக் காண அவர் அண்ணாவான சபாபதிப்பிள்ளை வந்திருந்தார். அவரிடம் வீட்டில் அனைவரின் க்ஷேமலாபங்களைக் கேட்டறிந்த வள்ளலார் தம் அண்ணியார் தேக அசெளக்கியத்தைக் குறித்தும், வள்ளலாரைப் பிரிந்ததால் அவருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தைக் குறித்தும் அண்ணன் சொல்லக் கேட்டு வருந்தினார். தமையனைத் தேற்றினார். பின்னர் அண்ணனோடு அருகே இருந்த குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் சிங்கபுரி கந்தர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அங்கே சுப்பராய சுவாமிகள், கோல சுவாமிகள் இருவரையும் கண்டு தரிசித்தார். அவர்கள் இருவரிடமும் தன் அண்ணன் குடும்பத்தின் நலனுக்காகப் பிரார்த்தித்து ஆசிகளை வேண்டினார். அண்ணன் திரும்ப ஊருக்குச் சென்றார். வள்ளலாரோ தமக்காக ஒரு சீடர் காத்திருப்பதை ஞான திருஷ்டியால் உணர்ந்து அவரைத் தேடிச் சென்றார்.

அருட் பெரும்சோதி!, தனிப்பெரும் கருணை!

சிதம்பரத்திலே அம்மையையும், அப்பனையும் கண்டு மகிழ்ந்த வள்ளலார் சிவகாமி அம்மையின் மேல் பத்துப் பதிகங்கள் கொண்ட, “அம்மை திருப்பதிகம்” பாடி அருளினார். அங்கேயே ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து அனைவரும் ஓய்வு எடுத்துக்கொண்ட வேளையில் பண்ணையார் போன்ற தோற்றமளிக்கும் ஒருவர் அவர்களிடம் வந்தார். வள்ளலாரைக் கண்டதும் பணிவோடு வணங்கி நின்றார். அவரிடம் வள்ளலார் அவர் வந்த காரியம் என்ன என வினவ, அவரும், தாம், அருகாமையிலுள்ள வடலூர் என்னும் ஊருக்கருகே உள்ள கருங்குழி என்னும் கிராமத்து மணியக்காரர் என்றும், தம் பெயர், வேங்கட ரெட்டியார் என்றும் தெரிவித்தார். மேலும், வள்ளலாரைப் பற்றி நிறையக் கேட்டிருப்பதாகவும், அவரைத் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்லவே அங்கே வந்திருப்பதாகவும், வள்ளலார் வர இசைவு தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு நின்றார். அப்போது வள்ளலார், தாமும் அங்கே அருகாமையில் உள்ள கிராமங்கள் எதிலாவது தங்கிக்கொண்டு அடிக்கடி சிதம்பரம் வந்து ஆடல்வல்லானைத் தரிசிக்க நினைத்ததாகவும், கருங்குழிக்கு வேங்கட ரெட்டியாரோடு வர ஆக்ஷேபணை எதுவும் இல்லை என்றாலும் தம்முடன் கூட நான்கைந்து சீடர்களும் வந்திருப்பதால் அவர்களைத் தனியே விட்டுத் தாம் மட்டும் வரமுடியாது எனத் தெரிவித்தார். ஆனால் வேங்கட ரெட்டியாரோ அனைவருமே வரலாம் எனக் கூறி, அனைவருக்குமே அழைப்பும் விடுத்தார்.



ஆனால் அவர்களோடு வந்திருந்த வேலாயுத முதலியாருக்குத் தாம் இங்கே வந்து பலநாட்கள் ஆகிவிட்டபடியால், இன்னமும் இங்கே இருக்க முடியாது என்றும், மேலும் தாம் வள்ளலாரோடு தங்கினால் அவருடைய ஞான வாழ்க்கைக்குத் தனிமை கிட்டாது என்றும் கூறினார். வள்ளலாரும் யோசித்து அவர்கள் விருப்பத்துக்கு உடன்பட, சென்னையிலிருந்து வந்த அன்பர்களும், வழியில் அவர்களோடு சேர்ந்து கொண்டவர்களும் வள்ளலாரை விட்டுப் பிரிந்தனர். அவர்களுக்கு அன்போடு விடை கொடுத்து அனுப்பிய வள்ளலார், வேங்கட ரெட்டியாரைப் பார்த்துத் தாம் கிளம்பும் முன்னர் தமக்குத் தனி அறை கிடைக்குமா என நிச்சயம் செய்துகொள்ள விரும்புவதாய்க் கூற, அவ்வாறே தனி அறை ஏற்பாடு செய்து தருவதாய் வேங்கட ரெட்டியார் உறுதி அளித்தார். இருவரும் சிதம்பரத்திலிருந்து கிளம்பி கருங்குழியை வந்தடைந்தார்கள். கருங்குழியில் தமது பரம்பரை நடத்தி வந்த விநாயகர் கோயிலுக்கு முதலில் வள்ளலாரை அழைத்துச் சென்றார் வேங்கட ரெட்டியார். அங்கே குருக்கள் வள்ளலாரைக் கண்டதும் அவர் யார் எனத் தெரிந்து கொண்டு மனமகிழ்வோடு வழிபாடுகள் நடத்திக் கொடுத்தார். வள்ளலார் அந்த விநாயகர் மேல் “கணேசத் திரு அருள் மாலை” என்னும் பத்துப் பதிகம் பாடி அருளினார். பின்னர் இருவரும் வேங்கட ரெட்டியாரின் வீடு நோக்கிச் சென்றனர். ரெட்டியாரின் மனைவியின் பெயர் முத்தியாலு என்பதாகும். அந்த அம்மையார் வள்ளலாரின் வரவால் மகிழ்ச்சி அடைந்தாள்.



அறையை முத்தியாலு அம்மையார் தயார் செய்து வைத்திருந்தார். அங்கே அவர் தங்குவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் அம்மையார் செய்து வைத்திருந்தார். அன்றிலிருந்து வள்ளலாரின் கருங்குழி வாசம் தொடங்கியது. இங்கே இருக்கும்போதே “திரு அருட்பா” எழுதப் பட்டது. மேலும் தல தரிசனங்களும் தொடர்ந்தன. திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருவதிகை வீரட்டானம், திருவண்ணாமலை ஆகிய இடங்களைத் தரிசித்துக்கொண்டு மீண்டும் கருங்குழிக்கு வந்த வள்ளலாரைக் காண அவர் அண்ணாவான சபாபதிப்பிள்ளை வந்திருந்தார். அவரிடம் வீட்டில் அனைவரின் க்ஷேமலாபங்களைக் கேட்டறிந்த வள்ளலார் தம் அண்ணியார் தேக அசெளக்கியத்தைக் குறித்தும், வள்ளலாரைப் பிரிந்ததால் அவருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தைக் குறித்தும் அண்ணன் சொல்லக் கேட்டு வருந்தினார். தமையனைத் தேற்றினார். பின்னர் அண்ணனோடு அருகே இருந்த குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் சிங்கபுரி கந்தர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அங்கே சுப்பராய ச்வுஆமிகள், கோல சுவாமிகள் இருவரையும் கண்டு தரிசித்தார். அவர்கள் இருவரிடமும் தன் அண்ணன் குடும்பத்தின் நலனுக்காகப் பிரார்த்தித்து ஆசிகளை வேண்டினார். அண்ணன் திரும்ப ஊருக்குச் சென்றார். வள்ளலாரோ தமக்காக ஒரு சீடர் காத்திருப்பதை ஞான திருஷ்டியால் உணர்ந்து அவரைத் தேடிச் சென்றார்.



திருநறுங்குன்றம் என்னும் சின்னஞ்சிறு ஊரில் ஒரு குன்றின் மேல் தங்கி ஞான வாழ்க்கை நடத்திவந்தார் கல்பட்டு ராமலிங்க மூர்த்தி சுவாமிகள் என்பவர். அவர் சில நாட்கள் முன்னர் தம் ஊர் மக்களிடம் தம்மைத் தம் குருநாதர் வலிய வந்து ஆட்கொள்ளப் போவதாய்த் தெரிவித்திருந்தார். இப்போதோ மூன்று தினங்களுக்கும் மேலே குன்றை விட்டு இறங்காமல் அன்ன ஆகாரம் இல்லாமல், தாக சாந்தி கூடச் செய்து கொள்ளாமல் இடைவிடா தியானத்தில் இருந்துவந்தார். உடலோ தேஜோமயமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலேயே ஒரு அமைதியும், பொலிவும் வந்து கூடி இருந்தது. மக்கள் செய்வதறியாது தவித்தனர். யார் அந்த குருநாதர்? எப்போது வருவார்? கல்பட்டு ராமலிங்க சுவாமிகளின் தியானம் கலையுமா? இப்படியே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கையில் தூரத்திலே வெண்ணிற ஆடையை அணிந்த வண்ணம் துறவி ஒருவர் வருவது தெரிந்தது. யார் அந்தத் துறவி? இவர் தான் கல்பட்டு ஐயாவின் குருநாதரோ? அனைவரும் பாறையை விட்டு இறங்கி வந்து கொண்டிருந்த துறவியை எதிர்கொண்டனர்.



வந்தவர் வேறு யாருமில்லை. நம் வள்ளலாரே. அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தார்.ஆசிகளை வழங்கினார். தாம் சிதம்பரம் இராமலிங்க அடிகள் என்றும், கருங்குழி தம்முடைய இப்போதைய வாசஸ்தலம் என்றும், கல்பட்டு ராமலிங்க மூர்த்தி ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்திருப்பதாகவும் கூற, அனைவருக்கும் வியப்பு, மகிழ்ச்சி. இவர் தான் அந்த குருநாதர். சந்தோஷத்தோடும், பக்திப் பெருக்கு மீதூறவும் அனைவரும் கல்பட்டு ஐயாவிடம் நம் வள்ளலாரை அழைத்துச் சென்றனர். அருள் கொண்ட முகத்தோடு வள்ளலார் அவரைக் காணவே தாம் இங்கே வந்திருப்பதாகத் தெரிவித்தார். கல்பட்டு இராமலிங்க மூர்த்தி சுவாமிகளிடம் போய் வள்ளலார், “ஐயா, ஐயா, கல்பட்டு ஐயா, ராமலிங்க மூர்த்தி சுவாமிகளே! தங்கள் தியானம் எந்த நோக்கத்தால் செய்யப் படுகிறதோ அதை நிறைவேற்ற ஆண்டவன் அருளியவண்ணமே அடியேனை அனுப்பிக் கொடுத்திருக்கிறான். கண்திறந்து பாருமையா!” என வேண்டினார். கல்பட்டார் கண் திறந்தார். அடிகளாரைக் கண்டார். எண்சாண் உடலும் கீழே பட விழுந்து நமஸ்கரித்தார். “ குருதேவா, என் குருதேவா, வந்துவிட்டீர்களா? என்னை ஆட்கொள்ள வந்துவிட்டீர்களா? எனப் புலம்பினார். குருநாதரின் பேரருளுக்குப் பாத்திரனாக விளங்கியதில் ஆனந்தம் கொண்டார். ராமலிங்க அடிகள் கல்பட்டு அடிகளை ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் ஈடுபட்டு, சமய பேதங்களை விலக்கி ஆன்மீகத் தொண்டாற்றத் தம்மோடு அழைத்துச் சென்றார். வள்ளலார் ராமலிங்க அடிகளும், கல்பட்டு இராமலிங்க சுவாமிகளும் ஊர்மக்கள் அனைவரிடமும் விடை பெற்று அங்கிருந்து சென்றனர்.

Tuesday, April 5, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை! 7

ஒருநாள் காலையில் கோயில் மண்டபத்தில் அனைவரும் கூடி இருந்த வேளையில் தம் எண்ணத்தைச் சொல்ல விழைந்தார் அடிகளார். நண்பர்கள் அனைவருக்கும் அரசல் புரசலாக எற்கெனவே விஷயம் ஒருவாறு புரிந்திருந்தது. என்றாலும் இது உண்மையாய் இருக்கக் கூடாது என்றே அவர்கள் நினைத்தனர். அடிகளார் வந்தார். அனைவரையும் பார்த்தார். தம் அணுக்கத் தொண்டர்களான வீராசாமி முதலியார், சபாபதி முதலியார், திருவாவடுதுறை ஆதீன வித்வான், சோமு செட்டியார் போன்றவர்களை எல்லாம் பிரிந்து செல்லப் போவதாய் அறிவித்தார். அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது. வேலாயுத முதலியாரால் தாங்க முடியவில்லை. “எங்களால் முடியாதே ஸ்வாமி, துயரம் மேலிடுகிறதே? உம்மைப் பிரிந்து எவ்வாறு இருப்போம்? முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.” என்று அனைவரின் சார்பாகவும் வேண்டினார். அடிகளார் சிலகாலமாகவே தமக்குச் சென்னையின் ஆரவார வாழ்க்கை வெறுத்துவிட்டதாகவும், அலங்கோலமாயும் ஆடம்பரமாயும் இருக்கும் இந்த வாழ்வை விட்டு விலகித் தொலைதூரம் செல்ல விரும்புவதாயும் கூறினார். அப்போவே அப்படி இருந்தால் இப்போ பார்த்தால் என்ன சொல்லுவாரோ? மேலும் குடும்பத்தாரோடும் தமக்குத் தங்கி இருக்கப் பிடிக்கவில்லை என்றும் தமிழ்ப் பண்டிதனாகவும் இருக்க விருப்பமில்லை என்றும் ஞான வாழ்க்கையைத் தேடிச் செல்லப் போவதாயும் அறிவித்தார்.



செல்லுமிடமானும் கூறும்படி அனைவரும் வற்புறுத்தவே அதன் பேரில் தாம் பிறந்த ஊரான மருதூருக்கு முதலில் செல்லப் போவதாயும், அங்கிருந்து அடுத்தடுத்த தலங்களில் வழிபாடுகள் செய்யப் போவதாயும் பின்னர் முடிவாய்த் தங்குமிடத்தைச் சிந்திக்கவேண்டுமென்றும் கூறினார். இந்தத் தல யாத்திரையில் தம்முடன் சிதம்பர சுவாமிகள், சடைச்சுவாமிகள், வீராசாமி நாயக்கர், வேலாயுத முதலியார் ஆகியோரை மட்டுமே அழைத்துச் செல்லப் போவதாயும் கூறினார். ரத்தின முதலியார், முடிந்தபோதெல்லாம் சென்னைக்கு வந்து போகும்படிக் கேட்டுக் கொள்ள முடிந்தால் வருவேன் என்று சுவாமிகள் சொன்னார். ஈசன் சித்தம் எப்படியோ அப்படி முடிந்தவரை முயற்சிப்பதாயும் கூறினார். பின்னர் நண்பர்கள் அனைவருக்கும் ஆசிகளை வழங்கி விடைபெற்று உடன் வருபவர்களை அழைத்துக் கொண்டு சென்னையை விட்டுப் புறப்பட்டார். வண்டிப்பாதையிலேயே சென்ற அடிகளார் இடை இடையே இருந்த தலங்களைத் தரிசித்துக் கொண்டு பாண்டிச்சேரிக்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டுப் பின்னர் தான் பிறந்த ஊரான மருதூருக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ஈசன் சிவயோகியாக வந்து நடந்து ஆரூடம் சொன்ன அந்தத் திருவீதியில் நடக்கும்போதே மெய் சிலிர்த்தது அடிகளாருக்கு. அங்கே இருந்த ஊர் மக்களிடம் தாம் பிறந்த வீட்டை விசாரித்தறிந்தார். வீடு இப்போது வேறொருவருக்குச் சொந்தமாகி இருந்தது. என்றாலும் உள்ளே அனுமதிக்கப் பட்டு தாம் பிறந்த வீட்டைக் கண்டு களித்து மெய்ம்மறந்து பின்னர் அங்கிருந்து கிளம்பி தற்போது வைத்தீசுவரன் கோயில் என்று அழைக்கப் படும் புள்ளிருக்குவேளூரை அடைந்து, அங்கேயும் தரிசனம் செய்து கொண்டார். தலத்தில் முருகனுக்கு உள்ள தனிச்சிறப்பை எடுத்துரைத்த அடிகளார் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கும் முறையையும் விளக்கிச் சொல்லி இருக்கிறார்.



செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கும் முறை:



திங்கள் அன்று இரவில் பலகாரம் செய்து, செவ்வாயன்று சூரியன் உதிக்கும் முன்னேயே எழுந்து, இறை உணர்வோடு அங்க சுத்தி,, தந்த சுத்தி செய்து, திருநீறு அணிந்து கொண்டு, நல்ல நீரில் குளித்து, விபூதியை நீரில் குழைத்து அவரவர் வழக்கப்படி தரித்துக் கொள்ளவேண்டும். கணபதியை நினைத்து முதலில் வணங்கிவிட்டுப் பின்னர் ஐந்தெழுத்தான சிவ பஞ்சாக்ஷரத்தை நூற்றெட்டு முறை ஜபிக்கவேண்டும். சிவனையே நினைத்து தியானம் செய்யவேண்டும். எழுந்து வாயிலுக்கு வந்து உதயமாகி இருக்கும் சூரியனைப் பார்த்து “ஓம் சிவ சூரியாய நம” என்று சொல்லி சூரிய நமஸ்காரம் செய்து பின்னர் அங்கேயே நின்றுகொண்டு, கோரிக்கைகளை மனதில் நினைத்து முடித்துக் கொடுக்கவேண்டுமென ஸ்ரீவைத்திய நாதரையும், தையல் நாயகியையும் வேண்டிக்கொள்ளவேண்டும். பின்னர் “ஓம் வைத்தியநாதாய நம” என்று நூற்றெட்டு அல்லது ஆயிரத்தெட்டு முறை ஜபித்துவிட்டுப் பின்னர் ஒரு பலம் மிளகு எடுத்துக் கொண்டு துண்டிலோ, அல்லது ஒரு துணியிலோ முடிந்து கொண்டு வைத்தியலிங்கார்ப்பணம் என்று சொல்லி அதைத் தனியாக ஓர் இடத்தில் வைக்கவேண்டும். சிவனடியார் எவரேனும் வருகின்றாரா எனப் பார்த்து அவரை அழைத்து சகலவிதமான உபசாரங்களோடு அமுது செய்வித்து அனுப்பவேண்டும். பின்னர் தாம் பச்சரிப்பொங்கல் மட்டும் அரையாகாரம் செய்யவேண்டும். அன்று மாலையில் சிவ தரிசனம் செய்யவேண்டும். இரவு படுக்கும்போது பாயிலோ அல்லது சயனக்கொட்டையிலோ படுக்காமல் மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்திரம் கேட்கவேண்டும். வாசனாதித் திரவியங்கள், சந்தனம், புஷ்பம், தாம்பூலம், சுகம், பெருந்தூக்கம் போன்றவையை விட்டுவிடவேண்டும். இதுதான் செவ்வாய்க்கிழமை விரதமுறை என்று அனைவருக்கும் விரதம் இருக்கும் முறையைக் கற்றுத் தந்தார் அடிகளார்.



பின்னர் அங்கிருந்து செல்லக் கிளம்பியவரை வைத்தீசுவரன் கோயிலின் கட்டளைத் தம்பிரான் எதிர்கொண்டு அழைத்துச் சென்று சுவாமிகளை வைத்தியநாதரை மீண்டும் தரிசனம் செய்ய வைத்து வைத்தியநாதர் மீது பதிகங்கள் பாடி அருளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.



“இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்

இலஞ்சிபூம் பொய்கையருகாய்

ஏற்றசந் திரகாந்த மேடையா யதன்மேல்

இலங்குமர மியவணையுமாய்த்

தளவேயு மல்லிகைப் பந்தராய்ப் பால்போற்

றழைத்திடு நிலாக்காலமாய்த்

தனியிளந் தென்ரலாய் நிறை நரம் புளவீணை

தன்னிசைப் பாடலிடமாய்

களவேக லந்தகற் புடையமட வரல்புடை

கலந்த நய வார்த்தையுடனாய்க்

களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடி

கழனிழற் சுகநிகருமே

வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிககா

மணியுலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற

வளர் வைத்தியநாதனே.”



இதன் பின்னர் சுவாமிகள் அங்கிருந்து திருவாரூருக்குச் சென்றார். அங்கே பத்துப் பாடல்களைக் கொண்ட திரு ஆரூர்ப்பதிகமும் பாடினார். அங்கிருந்து வைணவத் தலமான திருக்கண்ணமங்கை வந்தடைந்து, அபிஷேகவல்லியையும், பெருமாளையும் சேவித்துவிட்டு அங்கே இருக்கும் சிற்ப அற்புதங்களையும் கண்டு மகிழ்ந்துவிட்டுச் சிதம்பரம் நோக்கிச் சென்றார். சிதம்பரத்தின் அனைத்துச் சிறப்புக்களையும் பட்டியலிட்டு நண்பர்களுக்கு விளக்கிய அடிகள் நடராஜர் சந்நிதிக்கு வந்து தீப ஆராதனையைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார். தம் சிறு வயதிலேயே, பால் உண்ணும் பருவத்திலேயே சிதம்பர ரகசியம் இதுவெனத் தமக்குக் காட்டித் தந்த இறைவன் இவனே எனப் போற்றிப் பாடினார் அடிகளார்.



“தாய்முதலோரொடு சிறிய பருவமதில் தில்லைத்

தலத்திடையே திரைதூக்கத் தரிசித்தபோது

வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்

வெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே

காய்வகை இல்லாதுளத்தே கனிந்த நறுங்கனியே

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியா களிப்பே

தூய்வகையோர் போற்றமணி மன்றில் நடம்புரியும்

சோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே!”

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!! 6

திருமண பந்தத்தில் இருந்து அத்தோடு விடுபட்ட அடிகளார் இதன் பின்னர் ஒழிவில் ஒடுக்கம் என்னும் நூலைப் பதிப்பித்தார் . திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால் உரை செய்யப் பட்ட அந்த நூலைப் பதிப்பித்து சமய உலகுக்கு அடிகள் அளிக்கும்போது அவரின் வயது இருபத்தி எட்டே ஆகும். அந்த வயதிலேயே சிறந்த ஞான நூல்களைப் படித்து ஆராய்ந்து அவற்றைப் பதிப்பிக்கும் ஆற்றலும் பெற்றிருந்தார். இதன் பின்னர் சென்னையிலிருந்து சாஸ்திர விளக்கச் சங்கத்தைச் சேர்ந்தவர்களால் மனுநீதிச் சோழன் வரலாற்றை விவரித்து சிறுவர்கள் படிக்கும் வண்ணம் ஓர் உரைநடை நூல் எழுதும் பணி அடிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. அதையும் சிறப்பாக எழுதித் தந்தார் அடிகளார். பெரிய புராணத்தில் சேக்கிழார் எழுதி இருக்கும் மனுநீதிச் சோழனின் வரலாற்றை விவரித்து ,”மனுமுறை கண்ட வாசகம்” என்ற பெயரில் வள்ளலார் எழுதிய உரைநடை நூல் அனைவர் மனதையும் கவர்ந்தது. அதிலும் முக்கியமாக அதிலே மனுநீதிச் சோழன் தன் மகனின் செயலால் செங்கோல் வளைந்தது எனப்புலம்பி அழும் இடத்திலே, மனுநீதிச் சோழன் இதற்கெல்லாம் காரணம் தான் செய்த பாவம் எதுவோ எனப் புலம்பிப் பட்டியல் இடும் இடத்தில் அனைவரும் உண்மையாகவே வாய் விட்டு மனம் விட்டு அழும் வண்ணம் அடிகளாரின் எழுத்து அமைந்தது. அடிகளார் பட்டியலிட்ட பாவங்களில் சில கீழே;



“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ!

தானங்கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சிநேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரியுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ்செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ்செய்தேனோ

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!

ஆசை காட்டி மோசஞ்செய்தேனோ!

வரவு போக்கொழிய வழியடைத்தேனோ!

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!

கோள் சொல்லிக் குடும்பங்குலைத்தேனோ!

நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!

கலங்கி யொளிதோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!

காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!

கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!

கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!”



வள்ளலார் இவற்றை எல்லாம் பாவம் எனக் கூறி இருப்பதில் இருந்து அக்கால வாழ்வு முறையின் நெறிகள் வலுவான அடிப்படைகளில் இயங்கிக் கொண்டிருந்ததைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இதை அடுத்து படிக்காசுப்புலவர் பாடியுள்ள தொண்ட மண்டல சதகம் அடிகளாரால் பதிப்பிக்கப் பட்டது. அதில் தொண்ட மண்டலம் என்பது சிலரால் தொண்டை மண்டலம் என வழங்கப் படுவது சரியல்ல என ஆணித்தரமாக மறுத்திருப்பார் அடிகளார். ஆதொண்டன் என்னும் மன்னனால் ஆளப்பட்ட இருபது காத எல்லை வட்டமான நாட்டின் வளப்பத்தைக் குறித்த நூறு செய்யுட்பாக்களால் ஆன அந்தப் பாடல்களை தொண்ட மண்டல சதகம் என்றே சொல்ல வேண்டும் என்றும் ஆதொண்டன் தன் ஆட்சிக் காலத்தில் கட்டிய கோயில்களில் அவன் பெயரும் இலச்சினையும் இடம் பெற்றிருக்கும் கல்வெட்டுக்களும் காணப்படும் என்று உறுதியும் செய்தார். அந்தக் கோயில்கள் திருவலிதாயம், வடதிருமுல்லைவாயில் ஆகியன ஆகும். அந்தக் கோயில்களுக்கும் தம் அன்பர்களோடு சென்று தரிசனம் செய்து வரத் திருவுளம் கொண்டார் அடிகளார்.



திருவலிதாயம் கோயிலில் வலிதாயநாதரையும், தாயம்மையையும் வழிபடச் சென்றிருந்த போது வலிதாய நாதருக்குக் கந்தைத்துணி ஒன்றைச் சார்த்தி இருக்கவே அடிகளார் மனம் பதறித் துடித்தது. ஈசன் யாருமற்றவனாய்ப் போய்விட்டானோ? அவனுக்கே கந்தைத் துணியா எனக் கதறியவண்ணம் உருகிய அடிகளாரின் நாவில் அந்நிகழ்ச்சி ஒரு பாடலாக உருப்பெற்றது.



“மெல்லிதாயவிரைமலர்ப்பாதனே

வல்லி தாயமருவிய நாதனே

புல்லிதாய இக்கந்தையைப் போர்த்தினால்

கல்லிதாய நெஞ்சம் கரைகின்றதே!’

என்று உள்ளம் கரைந்து சுவாமிகள் பாடிய பாடலைக் கேட்ட அங்கு தரிசனம் செய்ய வந்த அன்பர்கள் கோயிலின் தலைமை குருக்களிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, வந்திருப்பது அடிகளார் என்பது தெரிந்த குருக்கள் புத்தம்புதிய வஸ்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து, வலிதாய நாதருக்குப் புது வஸ்திரம் சார்த்தினார்.



இதன் பின்னர் அவரின் மனம் திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரரைத் தரிசிக்க ஆவல் கொண்டது. அதன்படியே சென்னையை விட்டுப் புறப்பட்டு திருமுல்லைவாயிலுக்கு வந்து சேர்ந்தார். முல்லைக்காடாக இருந்த இந்த இடத்தில் தொண்ட நாட்டு மன்னன் ஒருவனால் முல்லைக்கொடிகளுக்கு அடியில் இருந்த சிவலிங்கம் கண்டு பிடிக்கப் பட்டதையும், மன்னன் காட்டை அழித்துக் கோயில் கட்டியதையும் தம் கூட வந்த நண்பர்களுக்குச் சொல்லி அருளினார். முல்லைக்கொடிகளை வெட்டும்போது இறைவனுக்கு வெட்டுப்பட்டுக் குருதி வந்ததாகவும், அதனால் இறைவனுக்கு வெட்டுத் தாங்கி ஈஸ்வரர் என்னும் பெயரும் உண்டென்றும் கூறினார் அடிகளார். மேலும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இந்தக்கோயில் மாசிலாமணீஸ்வரர் பேரில் ஒரு பதிகம் பாடி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அடிகளாரும் பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் ஒன்றை அந்தத் தலம் மீது பாடி அருளினார்.

“தில்லை வாய்ந்த செழுங்கனியே திரு

முல்லை வாயில் முதல் சிவ மூர்த்தியே

தொல்லையேன் உன் தன் தூய்திருக்கோயிலின்

எல்லை சேர இன்றெத்தவம் செய்ததே”

என்று ஆரம்பித்துப் பத்துப் பாடல்கள் கொண்ட பதிகத்தைப் பாடினார் ஸ்வாமிகள்.



அங்கிருந்து அடுத்து அடிகள் சென்ற கோயில் “திரு எவ்வுள்” என்னும் திருவள்ளூர் ஆகும். அனைவருக்கும் ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். முருக உபாசகர், சிவநேசச் செல்வர், தம்மையே சிவனின் குழந்தை யாம் எனக் கூறிக்கொள்பவர் திருமால் எழுந்தருளியுள்ள கோயிலுக்கு வந்திருக்கின்றாரே? வியப்புத் தான் அனைவருக்குமே. அப்போது அடிகளார் அரியும் சிவனும் ஒண்ணு என்னும் சொலவடையைக் குறிப்பிட்டு, ரூபம் வேறாயினும் தான் வழிபடும் ஈசனே இங்கும் இருப்பதாய்க் குறிப்பிட்டுச் சொன்னார். ஆழ்வார்கள் அழகுத் தமிழில் பாசுரங்கள் பாடித் துதித்ததையும் எடுத்துச் சொல்லி வீரராகவப் பெருமாளையும் தரிசனம் செய்து கொண்டு அவர் மேல் ஒரு பாடலையும் பாடினார்.



“தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி

வண்ணமாமணியே போர்றி மணிவண்னத்தேவா போற்றி

அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி

விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”



இதன் பின்னர் அடிகளார் பதிப்பித்த மற்றொரு புத்தகம் சின்மய தீபிகை. இது விருத்தாசலம் குமாரதேவ சுவாமிகள் ஆதீனம் முத்தைய சுவாமிகளால் அருளப் பெற்றது. இதற்குப் பின்னர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதி நூலுக்குச் சாற்றுக்கவியும் எழுதிக் கொடுத்தார். பின்னர் “குடும்பகோஷம்” என்னும் நூலை எழுதும்போது பத்தொன்பது படலங்களாக விவரித்து அடிகள் எழுதிய முறையைக் கவனித்த அவரது நண்பர் குழாம் தம் வரலாற்றையே வேறு பெயர்களை வைத்து அடிகள் எழுதுகின்றாரோ என்னும் ஐயம் கொண்டார்கள். அந்தக் கால கட்டத்தில் தான் சுவாமிகளுக்கு ஞான வாழ்க்கையைத் தேடிச் செல்லவேண்டுமானால் சென்னை வாசம் சரிப்பட்டு வராது என்னும் எண்ணம் ஏற்பட்டது. சென்னையை விட்டுவிட்டுத் தொலை தூரம் செல்லவேண்டும் என எண்ணினார்.