Thursday, March 12, 2009

என்னைக் காண ராகுல் காந்தி வந்தாரே!

பரோடா திரும்பினால் ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பிச்சு, வீடு போய்ச் சேரும் வரையில் ஒரே போலீஸ், மத்திய காவல் துறை எனப் பாதுகாப்புச் செய்துட்டு இருந்தாங்க. சரிதான், நாம வந்திருக்கிறது தெரிஞ்சு போய் இத்தனை காவலும், பாதுகாப்பும் போட்டிருக்காங்கனு நினைச்சேன். ராகுல் காந்தி வராராம், அதுக்காக இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள்னு சொன்னாங்க. சரிதான், சோம்நாத்தில் பார்த்த லாலு சொல்லி ராகுல் இங்கே வந்திருக்கார், வரப் போகிற பொதுத் தேர்தலில் கூட்டணி பற்றிப் பேசி முடிவு பண்ணனு நினைச்சுக்கிட்டேன். :D ஆஹா, நமக்கு எவ்வளவு முக்கியத்துவம்னு பூரிச்சுப் போயிட்டேன்.

ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் ஐந்து கி.மீ. இருக்கிறது. இந்த ஐந்து கி.மீட்டருக்கு ஆட்டோவில் 20ரூதான் வாங்கறாங்க. எப்போவானும் அதிசயமா 25ரூ. கேட்கிறாங்க. ஏனென்றால் விமான நிலையத்துக்கு எதிரே இருக்கும் விமான நிலையக் குடியிருப்பு உள்ளே கொஞ்சம் தள்ளி இருக்கு. ஆகையால் சிலர் 5 ரூ அதிகம் கேட்கிறாங்க. இங்கே சென்னையிலே, அம்பத்தூரிலே எங்க வீட்டில் இருந்து அம்பத்தூர் ஓ.டி. என்னும் பேருந்து நிலையம் ஒன்றரை கி.மீதான் இருக்கும். சாதாரணமாய் நடக்கும் தூரம் தான். ஆனாலும் ஊர்களுக்குப் போயிட்டுக் கையில் மூட்டை, முடிச்சோடு வந்துட்டால், ஐம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஆட்டோக்காரங்க கேட்கிறாங்க. ரொம்பப் பேரம் பேசினால் 40-45 ரூதான். அதுக்குக் குறைச்சு வரவே மாட்டாங்க. உள்ளே வரும் பேருந்தும் ஒரு மணிக்கு ஒண்ணுதான். வர நேரமும் சரியாச் சொல்ல முடியாது. எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? வேறே வழியில்லாமல் கொடுப்போம். அதோடு வரும்போது என்னமோ நாங்க தான் முனிசிபாலிட்டியையே நிர்வாகம் செய்யறதா நினைச்சு ஆட்டோக்காரர் எங்களைத் திட்டுவார், சாலை எல்லாம் குண்டும்,குழியுமா இருக்குனு. நம்ம மாநிலத்திலே இதெல்லாம் எப்போ மாறும்னு தோணுது.

சொல்லப் போனால் குஜராத்தில் இருந்து தமிழ்நாடு வரவே என்னைத் தவிர யாரும் இஷ்டப் படலை. நான் தான் இங்கே என்னமோ வசதிகள் அதிகம்னு சொல்லிட்டு இருப்பேன். வெயிலின் அருமை நிழலில் தானே தெரியுது. பரோடாவில் முக்கியமாய்ச் சொல்லவேண்டிய ஒன்று சாலை அமைப்புகள். சாலைகள் மிக அகலமாயும், போக்குவரத்துக்கு வசதியாயும் இருக்கிறது. சாலையில் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்தவெனத் தனியாய் ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். நடைபாதைக் கடைகள் இல்லை. ஆகவே நடைபாதை நடக்க மட்டுமே மிக வசதியாய் இருக்கின்றது. நடைபாதைக்கு மறுபுறமாய் வாகனங்கள் நிறுத்தும் இடம். அது தாண்டி ஒரு சின்ன நடை, அது தாண்டி வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள். அனைத்திலும் வாகனங்கள் நிறுத்த வசதியாக ஏற்பாடுகள். தெருக்களில் பசுமாடுகள், கன்றுகள் தன்னிச்சையாய்ச் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்றாலும் சாணத்தைப் பார்க்க முடியலை. மாடுகள் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு அது பாட்டுக்குப் போகும் போது, பின்னே வரும் கன்றுகளுக்காகச் சற்றே நின்று ஓரக் கண்ணால் கன்று வருகின்றதா எனப் பார்த்துவிட்டு வரலைனாலோ, கன்று வேறே ஏதானும் விஷமத்திலோ, மேய்ச்சலிலோ ஈடுபட்டிருந்தால், "அம்மா" எனக் குரல் கொடுப்பதும், திரும்பக் கன்றும் குரல் கொடுத்துவிட்டு உடன் செல்வதும் பார்க்கவே அழகான கவிதையாய் இருக்கு. விழுதுகளோடு கூடிய பெரிய, பெரிய ஆலமரங்கள், அரசமரங்கள், அவற்றின் கீழ் அங்கங்கே சில குறிப்பிட்ட இடங்களில் அமர ஆசனங்கள், பேருந்துக்காகக் காத்திருப்போருக்கு அழகான நிரந்தர ஷெட்கள் என திட்டமிட்டுச் செய்யப் பட்டிருக்கின்றது.

ஒரே ஒரு குறை எங்கேயும் போஸ்டரோ, பானரோ, தெருக்களில் குழி தோண்டிக் கம்பங்கள் நட்டிருப்பதோ பார்க்கவே முடியலை. அதான் ஊரா இதுனு வருத்தமாப் போச்சு!

6 comments:

 1. அது எப்படிங்க சரியா தேர்தல் நேரத்தில் ஒரு பயணம் போயிட்டு வந்து கூட்டணி பேச்சு வார்த்தைனு சமாளிக்குறீங்க ...

  அது சரி நீங்களும் அடிக்கடி பயணம் போற ஆளு, நம்ம ஊரிலும் தேர்தல் அடிக்கடி வருது. என்னத்த பண்ண

  ReplyDelete
 2. புலி, எங்கே இருக்கீங்கனே தெரியறதில்லை, ஆனால் கமெண்ட்ஸ் மட்டும் வருது, போஸ்ட் வருது. :((((

  //அது எப்படிங்க சரியா தேர்தல் நேரத்தில் ஒரு பயணம் போயிட்டு வந்து கூட்டணி பேச்சு வார்த்தைனு சமாளிக்குறீங்க//
  உபிச லீவிலே இருக்கிறதாலே தலைவியைப் பார்த்து சமாளிக்கறீங்கனு சொல்றீங்க??? புகை விடாதீங்க புலி! :P:P:P:P

  ReplyDelete
 3. தலைவி! ராகுல் கேட்ட தொகுதியை கொடுத்தீங்களா இல்லியா? இல்லைன்னா பொடியன் சஞ்சய் தீ குளிப்பான் எங்க சார்பா!

  ReplyDelete
 4. ஹிஹி, ராகுல் கேட்ட தொகுதியைக் கொடுக்கும் முன்னாடி, பொதுக்குழுவைக் கூட்டி முடிவு பண்ண வேண்டி இருக்கு,

  இந்தத் தீக்குளிக்கிற வேலை எல்லாம் வச்சுக்க வேண்டாம்னு சொல்லிடுங்க, அதெல்லாம் ஒரு பைசா தர மாட்டேன், தியாகினு சொல்லி!

  ReplyDelete
 5. mmm! என் அண்ணன் பரோடாலே சில பல வருஷங்கள் இருந்தார். ஒரு வீட்டை வாங்கி போட்டு இருக்கக்கூடாது?

  ReplyDelete
 6. //ஒரு வீட்டை வாங்கி போட்டு இருக்கக்கூடாது?//

  அதே, எங்க பையரும், மூணு வருஷங்கள் இருந்தார்! ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்யறது??

  ReplyDelete