Thursday, October 8, 2009

என் மேனி அழகைப் பாதுகாப்பது குப்பைமேனியே!


என் மேனி அழகைப் பாதுகாப்பது னு ஆரம்பிச்சு எல்லா நடிகைகளும் ஒவ்வொரு சோப்பைச் சொல்றாங்க. இதிலே ஒரு சோப்பின் விளம்பரத்தில் பாதி முகத்துக்கு ஒரு சோப்பும், மற்றப் பாதி முகத்துக்கு விளம்பர சோப்பும் பயன்படுத்தச் சொல்றாங்க. விளம்பர சோப் பயன்படுத்தும் பாதிமுகம் ஜொலிக்குமாமே. அப்படிங்கறாங்க. நம்பிடுவோமில்ல! மத்தப் பாதி முகத்தைப் பார்த்து பயந்துக்கவும் பயந்துக்குவாங்களோ? ஹிஹிஹி, ஆனால் இது எதுவுமே இல்லாம நமக்கும் பாதி முகம் ஜொலிச்சுட்டும், பாதி முகம் இருட்டாவும் இருந்ததில்ல!! நல்ல வேளையா யாரும் அப்போப் பார்க்கலை! பயந்து போயிருப்பீங்க! போனவருஷம் நம்ம முகத்தைப் பார்த்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். முகத்தின் இரு பக்கங்கள், முக்கியமாய் மூக்கு, கறுப்பு சீச்சீ, கறுப்பு இல்லை, கருநீலம்??? ஆமாம், கருநீலமாய் மாறிட்டதை பார்த்துட்டு, நான் ஏதோ கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி இருக்கேனோனும் நினைச்சுட்டுச் சிலர் கேட்காமலும், சிலர் தைரியமாய்க் கேட்டும் பார்த்தனர். நம்ம ரங்க்ஸோ கழுதைக்கு மூக்கு வெள்ளினு கேள்விப் பட்டிருக்கேன், உனக்கு என்ன நீலம்னு கேட்டுட்டு இருந்தார். (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எல்லாருக்கும் நம்ம ஒரே பதில், ஆசைப்பட்டுட்டுத் தான் இப்படி மாத்திட்டிருக்கேன்னு. பின்னே என்ன சொல்றது?எனக்கு photo allergy, வெயிலில் இப்படி மாறிடுது. எனக்கு அலர்ஜி இருக்கு. அப்படினு சொன்னா ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்க. இது என்ன புதுசானும் சிலர் கேட்கிறாங்க. நமக்கு எல்லாமே புதுசு புதுசா வரச்சே இது மட்டும் என்ன பழசாவா இருக்கும்??? இப்போவும் காமிராவை எடுத்துட்டுக் கல்யாணங்களிலே, மற்றப் பொதுவிழாக்களிலே வீடியோ வந்துச்சுனா நான் எழுந்து போயிடுவேன். எழுந்துக்க முடியாத இடத்திலே உட்கார்ந்திருந்தா முகத்தை மூடிடுவேன். எரிச்சல் தாங்காது!

என்னோட மருத்துவர் பார்த்துட்டு, இது என்ன முகத்தை இப்படி வச்சிட்டு இருக்கே? வெயிட்டைத் தான் குறைக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறே, போய் முகத்தைச் சரி பண்ணிட்டு வானு தோல் மருத்துவருக்கு எழுதிக் கொடுத்துட்டார். தோல் மருத்துவர் கிட்டேயும் போனேன். அப்போப் பார்த்து கீழே விழுந்து, எழுந்து ஒரே அமர்க்களமா?? கையிலேயும் கட்டு. இருந்தாலும் விடுவோமா?? அங்கேயும் போய் அவங்களைப் பார்த்தேன். நடுத்தர வயசுனு சொல்லலாமா?? தெரியலை. ஆனால் அவங்க என்னோட முகத்தைப் பார்த்துட்டு இது மாதிரி இது வரை யாருக்கும் வந்து பார்க்கலைனு ஒரேயடியா சரண்டர் ஆயிட்டாங்க. அப்புறமா மருந்துகளை பரிசோதனை முறையில் கொடுக்க ஆரம்பிச்சாங்க. என்ன கொடுமைடா சரவணா இது??? முகம் மட்டுமில்லாமல் கழுத்து வரைக்கும் தீயில் வெந்தாப்போல் ஆயிடுச்சே? என்னைப் பார்க்கனு பணம் செலவழிச்சுட்டு வந்த என்னோட பெரிய நாத்தனார், அவங்க மறுமகள், மாமியார் எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி, இது நானா? இல்லை வேறே யாராவதானு? போற போக்கிலே என் மாமியார் பேசாம குப்பைமேனியை அரைச்சுத் தடவ மாட்டியோனு சொல்லிட்டுப் போனாங்க.

என்றாலும் நாம அந்த மருத்துவரை விடறதாயில்லை. அவங்களும் விடறதாயில்லை. ஸ்டீராயிட் கொடுத்தால் முகம் பளபளப்பா ஆகுமாமே? நமக்குத் தெரியாது. ஆனால் அவங்க அதையும் ஒரு முயற்சி செய்யலாம்னு சொன்னாங்க. நானும் எத்தனையோ மருந்துகள் (ஒண்ணொண்ணும் குறைந்த பக்ஷ விலையே 500ரூ) முயன்று பார்த்துட்டேன். இப்போ ஸ்டீராய்ட் முயன்று பார்க்கலாம். உங்களுக்கு ஆஸ்த்மா இருக்கிறதாலே அதுக்கும் நல்லது என்றார். என்னோட மருத்துவரோ ஆஸ்த்மாவுக்கு நான் எடுத்துட்டு இருந்த ஸ்டீராயிடை எல்லாம் நிறுத்தி இருந்தார். அவரோட ப்ரிஸ்கிரிப்ஷனையும் காட்டினேன். என்றாலும் அவங்களுக்கு ஆசை விடலை. நீங்க போய் ரத்த அழுத்தம் செக் பண்ணிட்டு வாங்க, ரத்த அழுத்தம் சரியா இருந்தால் கொடுக்கிறேன். இல்லாட்டி வேண்டாம்னாங்க. என்ன ஆச்சரியம்? அன்னிக்குப் பார்த்து ரத்த அழுத்தம் சென்னை வெயிலைவிட அதிகமா இருக்க அவங்க இரு கையையும் கூப்பி, “அம்மா, தாயே, நான் ஃபெயிலாயிட்டேன்.” என்று கண்ணில் நீர் வழியத் தான் தோத்துட்டதை ஒத்துண்டாங்க. கொஞ்ச நாட்கள் எதுவுமே முகத்தில் போடாமல் வெறும் காலமைன் லோஷன் மட்டுமே தடவினேன். மாமியார் சொல் தட்டாத மறுமகளாய் அவங்க சொல்லிட்டுப் போன குப்பைமேனி மருத்துவத்தைப் பயன்படுத்த முடிவு செஞ்சேன். பயமுறுத்தறாப்பல இல்லாமல் ஓரளவுக்குப் பரவாயில்லைனு தெரிஞ்சது. மருந்தின் தாக்கம் உடம்பிலிருந்து போயிருக்கும்னு நிச்சயம் ஆனதும், தோட்டத்துக்குப்பைமேனியைப் பறிச்சு, துளசியோட வச்சு(அட, துளசி இலைங்க, நம்ம பதிவர் துளசி இல்லை) அரைச்சு முகத்தில், கையில் னு தடவ ஆரம்பிச்சேன். இப்போ கறுப்புத் திட்டுகள் அவ்வளவாத் தெரியலை. அதோட என் மூட்டு வலிக்கும் இது பயன் தருது. இப்போப் பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் இதைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சாச்சு. என் மேனி எழிலுக்குக் குப்பைமேனி தான் என்று நானும் உறுதியாச் சொல்லிக்கலாம் இல்லை??? இப்போ நம்ம ரங்ஸ் எங்கே போனாலும் கை நிறையப் பை நிறையக் குப்பைமேனியைக் கொண்டு வந்து நமக்குக் காணிக்கை செலுத்திடறார்.

17 comments:

  1. maami...
    aloe vera thadavi parkarthu thaane??? kuppai meni is very effective in allergy....

    ReplyDelete
  2. :-)))))))))))))))))))))))
    கலக்கல்!

    ReplyDelete
  3. சொட்டு நீலம் டோய், மாதிரி நீங்க குப்பைமேனி டோய் அப்படின்னு பாடறா மாதிரி கற்பனை செய்து பார்த்தேன்...ஆஹா! :)

    ஆமாம், அதென்ன எல்லா இடத்திலும் மறுமகள் அப்படின்னே எழுதியிருக்கீங்க?...'மருமகள்' என்றே படித்திருக்கிறேன்...நீங்க எழுதியிருப்பதைப் பார்த்தால் இதுதான் சரின்னு தோணுது..

    ReplyDelete
  4. கருநீலத்துக்கொரு குட்பை:-)

    துளசியால் பயன் இல்லைன்னு யாராவது இனி சொல்லட்டும்!!!

    மேனி எழிலுக்குக்

    கு
    ப்
    பை

    மேனி...

    டிவி விளம்பரம் ஒன்னு கொடுத்துறலாமா கீதா?

    நமக்கும் இப்படி போட்டோ சென்ஸிடிவ் ஸ்கின்னு சொல்லிட்டாங்க. வெயிலில் போகக்கூடாதாம். இங்கே அதைவிட்டா வேறு என்ன இருக்கு(-:

    புதுசா ஒரு குடை வாங்கிவச்சுருக்கேன்.

    ReplyDelete
  5. நீங்க வேறே டிடி அக்கா, எங்கே ரயிலில் போனாலும் இதோ இதுதான் முகத்திலே தேச்சுக்கிறதுனு நம்ம ரங்ஸ் காட்டுவார். ரயில்லே இருந்து குதிச்சா எடுத்துண்டு வரமுடியும்? நம்ம வீட்டுப் பக்கம் அந்தக் கத்தாழைச் செடிகளே இல்லை. என்ன ஒரு சோகம் போங்க! :)))))))))

    ReplyDelete
  6. ஹிஹிஹி திவா, மருத்துவர்களையே து.கா.து.கானு ஓட அடிப்போமில்ல??? :)))))))))))

    ReplyDelete
  7. ஹிஹிஹி, மெளலி, இப்போ மட்டும் பாடலைனா நினைக்கறீங்க??? அதெல்லாம் பாடுவோமே! அப்புறம் மறு மகள் தானே மருமகள். அதனாலே அது தெரியறதுக்காக மறுமகள்னே எழுதறேன். மாற்றுப் பெண் தானே மாட்டுப் பெண்ணாக்கிட்டீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))))))))))))))

    ReplyDelete
  8. வாங்க துளசி, எழுதி இருக்கிறதே விளம்பரத்துக்குத் தானே! ஆனாலும் நல்ல எஃபெக்ட் போங்க, உங்க வீட்டுப் பக்கம் இல்லைனா கீரைக்காரியைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்க, பொரியல், கூட்டும் செய்து சாப்பிடலாம். அதுவும் நல்லது உடம்புக்கு. அடுத்து வரப்போகுது பாருங்க வேறே ஒண்ணு! டண்டடண்ட டண்ட டய்ய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

    ReplyDelete
  9. புலி, வாங்க, என்னங்க இது? இப்போவே வாய் திறக்க மாட்டேங்கறீங்க?? இதெல்லாம் தெரிஞ்சு வச்சுண்டால் தானே தங்ஸுக்கு உபயோகமா இருக்கும்?? :P:P:P

    ReplyDelete
  10. ஹாஹா :D சூப்பர் அம்மா!

    குப்பை மேனி வாழ்க!

    ReplyDelete
  11. இதனால் சகலருக்கும்
    தெரிவிப்பது என்னவென்றால்.மேனியில் படர்ந்த குப்பையை அகற்றும் திறன் வாய்ந்த குப்பை மேனி இலையை இனிமேல் யாரும் இழிவாகக் கருதக் கூடாது.இது நம்ம கீதாசாம்பசிவம் இடும் அன்பு வேண்டுகோள்.டண் டணா டண்

    ReplyDelete
  12. என் மேனியின் இளமை ரகசியம் குப்பை மேனி இலையில் இருக்காக்கும்...

    ஐயோ!!!தோட்டத்திலே குப்பை மேனி இலை பறிக்க அனுப்பினேனே என்ன இலைன்னு சொல்லலியே...

    ReplyDelete
  13. அருமையான மூலிகை மருந்து.
    நன்றி கீதா

    ReplyDelete
  14. வாங்க கவிநயா, நன்றிம்மா. ஆனாலும் அனுபவம் என்னமோ உண்மைதான்.

    ReplyDelete
  15. வாங்க கோமா, குப்பை மேனி இலைனு சொல்லி அனுப்பியும் என்ன இலைனு தெரியலையா?? சரியாப் போச்சு போங்க! :P:P:P

    ReplyDelete
  16. வந்ததுக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி கோமா.

    ReplyDelete