
ஹம்பி! அடிக்கடி கேட்டிருக்கும் ஒரு பெயர் இல்லையா?? சரித்திரப் பாடங்களிலும் படிச்சிருக்கோம். இதைப் பற்றி ஆராயப் போனால் ராமாயண காலத்துக்கே போகணும். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆம், ராமாயணத்தில் பம்பா நதிக்கரையில் கிஷ்கிந்தாவில் ராமர் சுக்ரீவனுடனான நட்பை ஏற்படுத்திக்கொண்டதாய்ப் படிச்சிருக்கோம். அந்தப் பம்பா நதி தான் இன்றைய துங்க பத்திரா நதி. கிஷ்கிந்தை என அழைக்கப் படும் இடமும் மலைகளுக்கு இடையே துங்க பத்திரை நதிக்கரையில் காணக்கிடைக்கும். அங்கே வாலியை வதம் செய்த இடமும், ராமர் கிஷ்கிந்தையின் மழைக்காலத்தில் தங்கி இருந்த குகையும் காணலாம். வாலி மறைந்துவிட்டான் என எண்ணி சுக்ரீவன் மூடி விட்டு வந்த குகையும் அங்கே உள்ளது. அந்தக் குகைக்கு நாங்க போகமுடியலை. ஆனாலும் ராமர் தங்கின குகையைப் பார்த்தோம். எந்த இடத்தில் இருந்து ராமர் அம்பை எய்திருப்பார் என்பதையும் பார்த்தோம். இப்போ ஹம்பியும், கிஷ்கிந்தையும் ஒன்றாகவே கருதப் படுகின்றன என்றே சொல்லலாம். ஹம்பியின் சரித்திர ஆதாரங்கள் கி.,மு. முதல் நூற்றாண்டுக்கும் முன்னால் செல்கிறது.
பெரும்பாலோர் இதை விஜயநகரத்துடன் சம்பந்தப்படுத்திக்கொண்டு இதுதான் விஜயநகரம் எனவும் நினைக்கின்றனர். அல்ல. விஜயநகரம் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டது. விஜயநகரத்தின் ஒரு சிறு கிராமமே ஹம்பி எனலாம். ஹம்பியில் விஜயநகரக் கட்டிடக் கலையின் சான்றுகளும், அதன் அழிவுகளும் காணக்கிடைப்பதால் இதை விஜயநகரம் என்றே நினைக்கின்றனர்.

இனி ஹம்பியைச் சுற்றித் தோன்றிய விஜயநகரத்தையும், அதன் சாம்ராஜ்யத்தையும் பற்றி அறிவோமா??
கண்ணீர் கதையை படிக்க ரெடி !
ReplyDeleteஅட?? புலி??? ஞாபகம் வச்சிட்டிருக்கீங்க??? நல்வரவு, படிக்கிறதுக்கும் நன்னிஹை!
ReplyDeleteபடிக்க ஆவலாகிறேன். விஜயநகர சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிற இடம் ஹம்பி.
ReplyDeleteதொடருங்கள். ஹரிஹரா - புக்க ராய சகோதரர்கள் பற்றியும் எழுதுங்கள். விக்கிபீடியாவில் விபரங்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள்!!
வாங்க ஜகந்நாதன், முதல் வரவுக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி.
ReplyDeleteசுஜாதா நைலான் கயிறு முதல்முறையாகச் சிறுகதையாக எழுதினப்போ கடைப்பிடித்த உத்தி உங்கள் காலடியில் இருக்கும்போது என் பதிவுக்கும் வந்து என்னைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. விக்கியை விட The Forgotten Empire புத்தகம் கிடைச்சால் இன்னும் நல்லது. பார்க்கலாம்!
அருமை மாமி
ReplyDeleteநன்றி எல்கே.
ReplyDelete