Saturday, July 5, 2008
சத்தம் போடாமல் ஒரு புதிரா, புனிதமா???
கே ஆர் எஸ்ஸுக்குப் போட்டியா ஒரு புதிரா, புனிதமா பாணியில் கொஞ்சம் கூட இல்லாமல் சில கேள்விகள் மட்டுமே கேட்டிருக்கேன். பதில் சொல்றவங்க தான் உண்மையான குண்டர், சீச்சீ, இல்லை, தொண்டர்னு தெரிஞ்சுடும்!
1.தொலைபேசி அழைப்பிலே அழுகை! ஏன், யாரிடம், எதுக்காக?
2.அம்பியை நேரிலே பார்த்தப்போ கூட அம்பியும் ஒரே வருத்தம்! ஏன்? எதுக்காக, யாரிடம்?
3.ரசிகன் இந்தியா வந்ததும் தொலைபேசியில் தன்னோட வருத்தத்தை யாரிடம் தெரிவித்தார்? ஏன், எதுக்காக, யாரிடம்?
4.கோபிநாத், சாட்டும்போது யாரிடம் ஒரு குரல் அழுதார்?? ஏன், எதுக்காக, யாரிடம்???
5.மதுரையம்பதியை வெறுப்படைய வைத்தது எது? பல நாட்களாய்ப் போராடுவது எதற்கு?
ஏன் எதுக்காக, யாரிடம்??
6.யாரைக் கண்டாலே அபி அப்பா ஓடி ஒளிஞ்சுக்கறார்? ஏன் , எதுக்காக, யாரிடம்?
7.இ.கொ. திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன், என்று சபதம் எடுத்தது ஏன், எதுக்காக, யாரிடம்?
8.மருத்துவர் ராமநாதன் தன்னோட சுட்டிகள் லிஸ்டிலே இருந்து யாரோட பதிவின் சுட்டியை நீக்கி உள்ளார்?? ஏன் எதுக்காக, யாரிடம்???
9.வலை உலகே என்ன ஆச்சோ எப்போ நிலைமை சீரடையுமோனு கவலையில் ஆழ்ந்திருப்பதாய்ச் செய்தி! ஏன் எதுக்காக, யாரிடம்???
10.இதெல்லாம் எதைக் குறிச்சுனு யாருக்காவது யூகம் செய்ய முடியுதா??
மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் திங்களன்று இந்திய நேரப்படி, 00-00 மணிக்கு வெளிவரும். அதுவரைக்கும் பதில்களை உங்கள் ஊகப்படி இங்கே பின்னூட்டமாய்த் தெரிவிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
//அம்பியை நேரிலே பார்த்தப்போ கூட அம்பியும் ஒரே வருத்தம்! ஏன்? எதுக்காக, யாரிடம்?
ReplyDelete//
என்ன சென்னையிலிருந்து சுமார் 20 கி.மி தள்ளீ இருக்கும் அம்பதூருக்கு நான் வரலை, அது தானே? அடுத்த தடவை கண்டிப்பா வரேன். அரை கிலோ ரவைவாங்கி வைங்க. :p
5. மதுரையம்பதி இன்னும் தாமிரபரணி மகாத்மியம் தரலையா? வெரி குட், வெரி குட். :))
ReplyDelete5. மதுரையம்பதி இன்னும் தாமிரபரணி மகாத்மியம் தரலையா? வெரி குட், வெரி குட். :))
ReplyDelete@அம்பி, ஒரு கேள்விக்குக் கூட பதில் சரியில்லை, உங்களுக்கு மதிப்பெண் ஒண்ணும் இல்லை, நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் பட்டீர்கள்! :P :P :P
ReplyDeleteஅரை கிலோ ரவை தானே கட்டாயமாய் வாங்கி வைக்கிறேன், பருத்திக்கொட்டையை வாங்கி சன்னமா ரவை மாதிரி உடைச்சும் வச்சுடறேன். ஓகே?? :P :P
ReplyDelete//7.இ.கொ. திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன், என்று சபதம் எடுத்தது ஏன், எதுக்காக, யாரிடம்?//
ReplyDeleteஎடுத்த சபதம் முடிப்பேன்!!
//5. மதுரையம்பதி இன்னும் தாமிரபரணி மகாத்மியம் தரலையா? வெரி குட், வெரி குட். :))//
ReplyDeleteஇதைக் கவனிக்காமல் போயிருக்கேன், அம்பி, நல்ல ஆள் பார்த்துத் தாமிரபரணி மகாத்மியம் புத்தகத்தைக் கொடுத்தீங்க, போங்க, இது நிச்சயம் பழிவாங்கற வேலைதான், மெளலி கிட்டே இருந்து, கூகிளில் ஏதாவது விஷயத்துக்கு லிங்க் வாங்கறதே பெரிய விஷயம்!! தரவே மாட்டார், மனசே ஆகாது, புத்தகத்தை வேறே கொடுத்துட்டீங்க, என்னமோ போங்க! :P :P :P
@இ.கொ. முடிங்க, முடிங்க, பார்க்கலாம்!!!! :P :P
ReplyDeleteநாங்களும் சபதம் போடுவோமில்ல??
மங்கம்மா கூடத் தோத்துப் போவா! :P
//நல்ல ஆள் பார்த்துத் தாமிரபரணி மகாத்மியம் புத்தகத்தைக் கொடுத்தீங்க, போங்க, இது நிச்சயம் பழிவாங்கற வேலைதான், மெளலி கிட்டே இருந்து, கூகிளில் ஏதாவது விஷயத்துக்கு லிங்க் வாங்கறதே பெரிய விஷயம்!! தரவே மாட்டார், மனசே ஆகாது, புத்தகத்தை வேறே கொடுத்துட்டீங்க, என்னமோ போங்க!//
ReplyDeleteசொல்லிட்டீங்கல்ல....இன்னுமே அம்பிக்கே கூட கிடைக்காது அந்த புத்தகம்...உங்களுக்கு அது கிடையாது, கிடையாது, கிடையாது.. :)
ஏன் - தெரியாது
ReplyDeleteஎதுக்காக - தெரியாது
யாரிடம் - இது மட்டும் தெரியும்
தலைவி...தலைவி....தலைவி ;))
\\4.கோபிநாத், சாட்டும்போது யாரிடம் ஒரு குரல் அழுதார்?? ஏன், எதுக்காக, யாரிடம்???\\
ReplyDeleteஇது எப்போ!!!!!
இந்த கேள்விகள் யாவையும் ஒரு தொலைக்காட்சித் தொடர் பற்றியவை என கருதுகிறேன்... முடிந்தால் இந்த அரிய கண்டுபிடிப்புக்கு மதிப்பெண் வழங்கவும் ... இல்லையேல்...இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை... லேசாக தலை சுற்றுகிறது....:-)..... நீங்கள் கொடுத்துள்ள குகை புகைப்படங்கள் அருமை...எனக்கு அவற்றை பார்க்கும் பொழுது... மனதில் அமைதி படர்கிறது.... மௌனமாக இருக்க தூண்டுகிறது தியானத்தின் சுவையை உள்ளம் கேட்கிறது...வாழ்த்துக்கள்
ReplyDeleteகீதா அவர்களே மன்னிக்கவும் இப்போது புரிகிறது நான் உங்கள் பெயரில் க்ளிக் செய்து அங்கே வந்துவிட்டேன் இனிமேல் கமென்ட் பதிவு செய்யும் போது எந்த ப்ளாகுக்கு சம்பந்தப்பட்ட நபர் வர வேண்டும் என நினைக்கீறீர்களோ அந்த ப்ளாகின் யூசர் ஐடி மூலமாக sign in செய்து கமென்ட்ஸ் பதிவு செய்யவும்..சரியான ப்ளாகிற்கு வர வசதியாக இருக்கும்..தங்கள் ராமாயண ப்ளாகை தேடிக்கொண்டிருந்தேன் கொடுத்தமைக்கு நன்றி...அதை பற்றி அந்த ப்ளாகில் பதிவு செய்கிறேன்..நன்றி..
ReplyDelete@மதுரையம்பதி, நீங்க கொடுத்தால் தான் ஆச்சரியமா இருக்கும் எனக்கு! :P :P
ReplyDelete@கோபிநாத், இன்னுமா புரியலை?? இவ்வளவு அப்பாவியா நீங்க??
@ரமேஷ் சதாசிவம், உங்க பதிவிலே பதில் சொல்லிட்டேன், என்னோட தவறுக்கு மீண்டும் மன்னிப்புக் கேட்கின்றேன், நன்றி, வந்ததுக்கும், வாழ்த்தியதுக்கும்!
எந்த திங்கள் ந்னு சொல்லலை இல்லியா?
ReplyDeleteசுத்தம்.
நான் பத்தாவது கெள்விக்கு சரியான பதில் சொல்றேன் பாருங்க!
//10.இதெல்லாம் எதைக் குறிச்சுனு யாருக்காவது யூகம் செய்ய முடியுதா??//
முடியலை!
:-)))))))))))))))))))))
@திவா,
ReplyDeleteரொம்பவே சுறுசுறுப்பு போங்க, இப்படி சுறுசுறுப்பா இருந்தால் எப்படி ஊகம் செய்ய முடியும்?? முடியவே முடியாது! :P