Friday, December 19, 2008

நீங்க க.கை.நா.??? இதைப் படிங்க முதல்லே!

அப்படி ஒண்ணும் பெரிசா தொழில் நுட்பம் தெரியாது தான். ஆனால் அதுக்காக ஒரேயடியா மட்டம்னும் இல்லை. என்றாலும் சில விஷயங்கள் புரியலை பதிவுகள் எழுத ஆரம்பிச்சப்போ. இந்த அம்பி பிடிவாதமா எனக்கு எதுவுமே சொல்லித் தரலை.(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஆனால் அதுக்காக மத்தவங்க சும்மா இல்லை. முக்கியமா சூடான் புலியும், உ.பி.ச.வும் நிறையவே உதவி செய்தாங்க. அதிலேயும் புலி நிறையவே உறுமிட்டுப் போயிருக்கு. ஆனால் இந்த டாடா இண்டிகாம் காரங்க உதவினாப் போல இருக்குமா என்றால் இல்லைனு தான் சொல்லணும்.

எந்த வேளையில் இந்த சேவையை எடுத்துக் கொண்டேனோ தெரியலை, முதலில் எல்லாம் ஒழுங்காவே போயிண்டிருந்தது. பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் நானும் ஒரு தலைவியாக ஆகி, பிரசித்தி பெற்ற எழுத்தாளியாக மாறி இலக்கியம் படைக்க ஆரம்பிச்சதும் எங்கே இருந்தோ சதிவேலைகள் துவங்கிட்டன. முதல்லே 06-ம் வருஷம் எக்ஸ்பி ரீ இன்ஸ்டால் பண்ணதில் ஆரம்பிச்சது பிரச்னை. அப்புறமா ஒரு மாசம் இணையம் இல்லாமல், போதும், போதும்னு ஆயிடுச்சு. வாடிக்கையாளர் சேவை மையம் இருப்பது ஹைதராபாதில், சேவை கொடுப்பது சென்னையில். எங்க ஏரியாவுக்கான செர்வர் இருப்பது பக்கத்துத் தெருவில், அதுவும் நாங்க ரொம்பவே அடிக்கடி புகார் செய்யறோம்னு மாத்தினாங்க. அந்த வீட்டுக்காரர் டாடா செர்வரிலேயே அவங்க வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு நினைவா செர்வரையும் ஆஃப் செய்து வச்சுடுவார். இது தெரியாம நாங்க இங்கே லபோ திபோ னு அலறுவோம். வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொலைபேசினால் எல்லா நேரமும் எடுப்பாங்கனு சொல்லவும் முடியாது.

முதல்லே அவங்க கொடுத்த நம்பரைப் போட்டு அழைக்கணும். வரவேற்பு கொடுத்ததுக்குப் பின்னர் நமக்கு ஒன்று, இரண்டு கத்துக் கொடுப்பாங்க. அதைக் கத்துக்கிட்டதும் தான் நமக்கு தொழில் நுட்ப சேவையின் நம்பரே வரும். உடனே எடுத்துப் பேசினால் உங்க அதிர்ஷ்டம். லோகல் செர்வர் வீக்குன்னா அவங்க எடுக்கவே மாட்டாங்க. "All the Executives are busy. Please stay on the line or try later"அப்படினு recorded message வந்தாலே சரி ஏதோ முக்கியமான பிரச்னை, இப்போ எடுக்க மாட்டாங்கனு புரிஞ்சுடும். அப்பாடா, எப்படிப் பாருங்க, ஒரே வரியிலே புரிய வைக்கிறாங்க. இதிலே சொல்லிக் கொடுக்கும் அவங்க திறமைசாலியா, கத்துக்கும் நாம திறமைசாலியானு சந்தேகமே வரும். அப்படி ஒண்ணும் இல்லைனா தொலைபேசியை எடுத்துச் சமயங்களில் குயில் கூவும், இல்லைனா மயில் அகவும். ஹிஹி, புரியலையா?? குயில் போலக் கொஞ்சிக்கொஞ்சி யாராவது ஒரு பெண்ணோ, மயில் போல அகவிக் கொண்டு யாராவது ஒரு ஆணோ பேசுவார்கள். நமக்கு இணைப்பு வரலைனதும் அவங்க படற வருத்தத்தைப் பார்த்து நமக்குக் கண்ணீரே வந்துடும். ஆஹா, இவ்வளவு வருத்தப் படறாங்களே, உடனே நம்ம சேவையைக் கவனிப்பாங்கனு நீங்க நினைச்சால். அது உங்க மடத் தனம்.

உங்களோட அடையாளச் சொல் கேட்டுக் கொண்டு, எங்கே இருந்து பேசறீங்க, உங்க மாற்று அடையாள மெயில் ஐடி என்ன, தொலைபேசி எண் இதுதானா என்று எல்லா உறுதிகளும் செய்து கொண்டு (இது ஒவ்வொரு முறையும் கேட்கப் படும். இப்போ எனக்கு என்னோட பேரே மறந்துடுச்சு, இந்த யூசர் ஐடிதான் நினைவிலே இருக்கு) அப்புறமாச் சொல்லுவாங்க, "மேடம், உங்க மோடத்திலே/ரவுட்டரிலே எல்லா லைட்டும் எரியுதா?? எரியுது அல்லது இல்லை, அல்லது விட்டு விட்டு எரியுது, அல்லது கண் சிமிட்டிட்டே இருக்குனு நீங்க சொன்னதும்

சேவை மையம்:"ரீ ஸ்டார்ட் பண்ணுங்க மேடம்"

நாம்: பண்ணிட்டேனே, பலமுறை.

சேவை: அப்படியா, சாரி மேடம், இப்போ நீங்க என்ன செய்யறீங்க ஸ்டார்டிலே போய் ரன் என்று ஒரு ஆப்ஷன் இருக்குமே அதை க்ளிக் பண்ணி கமாண்டிலே போய்"..........

நான்: ping தானே போடச் சொல்றீங்க? போட்டுப் பார்த்துட்டேனே, பைட்ஸே போகவும் இல்லை, வரவும் இல்லை.

சேவை: அடடா, மேடம், இப்போ என்ன செய்யறது?? ம்ம்ம்ம்? இந்த alternative gateway னு ஒண்ணு இருக்கு, அதிலே.....

நான்: properties போய் அதையும் போட்டுப் பார்த்தாச்சே, லோகல் ஏரியா கனெக்ஷனையும் ஒரு தரம் ஆப் பண்ணிட்டுத் திரும்ப ஸ்டார்ட் பண்ணி எல்லாம் பண்ணிட்டேனே??

சேவை: அப்போ ஒண்ணு செய்யுங்க, அந்த கேபிள் வயர் தொங்குதே உங்க கணினிக்கு மேலே தொங்குதா, வெளியே இருக்கா அதிலே, ஒரு வெள்ளைக் கலர் பாக்ஸ் இருக்கும்.

நான்: ஜங்ஷன் பாக்ஸ்தானே? அதை ஆஃப் செய்து லூப்பிலே போட்டு, பின்னாடி லைனுக்கு மாத்தி, கேபிளை எல்லாம் மீண்டும் பிட் பண்ணி எல்லாம் செய்து பார்த்துட்டேன்.

சேவை: சரி மேடம், (வேறு வழியில்லை, பல்லைக் கடிப்பாங்கனு நினைக்கிறேன்.) கொஞ்ச நேரம் காத்திருக்க முடியுமா? உங்க புகாரைப் பதிவு செய்து கொண்டு, உங்களுக்கு நம்பர் தரேன்.

நான்: வேறே வழி?? கொடுங்க, காத்திருக்கேன்
.

ஒரு சகிக்க முடியாத, காதால் கேட்க முடியாத கொடுமையான சங்கீதம் ஒலிபரப்பப் படும். சில, பல நிமிடங்களுக்குப் பின்னர், குயில் மீண்டும் கூவும். "மேடம், இதுதான் உங்கள் புகார் எண். இந்த நிமிடத்தில் இருந்து 24 மணி நேரம் கணக்கு. அதுக்குள்ளே உங்க புகார் சரி செய்யப் படும். அப்படி இல்லைனா நீங்க மீண்டும் எங்களை எப்போ வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். எங்களோட எண் .............. Good Day Madam. We are here to serve you. தொலைபேசி வைக்கப் படும். இப்படியாகத் தானே, நான் ஒரு தொழில் நுட்ப நிபுணியாகிவிட்டேன், இப்போ டாடா இண்டிகாம் தயவாலே. செர்வர் சரியில்லைனா யுபிஎஸ்ஸுக்கு பாட்டரி மாத்தினீங்களானு அவங்களையே இப்போக் கேட்டுட்டு இருக்கேன்.

24 மணி நேரத்துக்குள்ளே சரி செய்யலைனா என்ன நடக்கும்கிறதை இன்னொரு பதிவாத் தான் எழுதணும். இன்னிக்குத் தான் கிட்டத் தட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் கொஞ்சமாவது வருது இணையம். வேறே வேலை இருக்கு, அதை எல்லாம் முடிக்கணும், வர்ட்டாஆஆஆஆஆஆ??????

11 comments:

  1. ரொம்ப டெக்னிக்கல் சமாச்சாரமா இருக்கு. ஒண்ணியும் பிரியலை!

    ReplyDelete
  2. ஹிஹிஹி, கொத்து, இது, இது, இதைத் தானே நினைச்சோம்! :))))))))))

    ReplyDelete
  3. நீங்க எழுதி எழுதியே தலைவி(வலி) ஆனதுக்கு நானும் ஒரு காரணம் என்று போட்டு கொடுக்குற மாதிரி இருக்கு...

    :)))

    ஆனாலும் இந்த call Centre மக்கள் நமக்கு ஏதுமே தெரியாது என்ற எண்ணத்திலே டீல் பண்ணுவாங்க அது தான் கடுப்பாகும். எனக்கு Dish Tv, Airtel உங்களுக்கு டாடா :)

    ஆனா நல்ல டைம்பாஸ் :)

    ReplyDelete
  4. டாடா செர்வெரில் இப்போதும் இப்படி பிரச்சினை உள்ளதா?
    டாடா ஸ்கை டிஷ் ஆண்டெனா எப்படியிருக்கு?

    ReplyDelete
  5. தொடர்கதையாக பல முறை படிச்சிட்டோம்...இப்போ அதையே ஒரு முழுநிள படமாக போட்டு காட்டுறிங்க...;))

    எப்படி தலைவி உங்களாக மட்டும் இப்படி எல்லாம் முடியுது ;))

    இனி டாடாவுக்கு பிரச்சனை வந்தால் உங்களை தான் கூப்பிடுவாங்க.

    ReplyDelete
  6. வாங்க புலி, கூப்பிட்டதை மதிச்சு வந்ததுக்கு முதல்லே நன்னியோ நன்னி! எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன் பாருங்க! :P :P

    ReplyDelete
  7. @தேவன்மயம், ப்ராட்பாண்ட் இணைப்புத் தொல்லையே தாங்க முடியலை, இந்த அழகிலே டிஷ் வேறே டாடா ஸ்கை வாங்கச் சொல்றீங்களா? நான் தொலைக்காட்சி பார்க்கிறதே செய்திகளுக்கும், சில சங்கீதக் கச்சேரிகளுக்கும் தான். அதனாலே கேபிள் இணைப்பே அதுக்கு அதிகம்! :))))))))

    ReplyDelete
  8. @கோபிநாத், அவங்களுக்குப் பிரச்னை வருதோ இல்லையோ, என்னோட திரும்பத் திரும்பச் சொல்லப் பட்ட குற்றச் சாட்டாலே இப்போ என்னைப் போல முன்பணம் கட்டி இணைப்பு வாங்கிக்கிறவங்களுக்கு எத்தனை நாள் இணைப்பு கிடைக்கலையோ அத்தனை நாட்கள் நீட்டிப்புக் கிடைக்குது. அதோட இங்கே இருக்கும் பிஎஸெனெல் இணைப்பை விட இது வேகமாயும் இருக்கு. அதையும் பார்த்தேன்!

    ReplyDelete
  9. அட, தொழில் நுட்ப நிபுணி ஆனது தெரியவே தெரியாதே! எனக்கு இங்கே ஒரு பிரச்சினை......

    ReplyDelete
  10. @ரங்கதிவா, ம்ம்ம்ம்ம்., உங்க பிரச்னை என்ன பெரிசா இருக்கப் போகுது?? இங்கே பாருங்க, கமெண்ட் போட்டாலோ, கமெண்டுக்குப் பதில் சொன்னாலோ அவ்வளவு தான்!

    ReplyDelete
  11. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு !!

    பழைய பதிவுகளை படிப்பதே ரொம்ப சுவாரசயமாக தான் இருக்கிறது மேடம்

    ReplyDelete