Friday, March 13, 2009

பிட்டுப் பிட்டு வைக்கிறேன்!

எங்க மாமியாருக்கு கிராமத்திலே இருந்தவரைக்கும் வீட்டு வேலைகளிலேயே பொழுது போயிடும். இங்கே சென்னை வந்ததும் என்னதான் வீட்டு வேலை இருந்தாலும் கிராமம் மாதிரி இல்லையே. புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சாங்க. ஆரம்பிச்சாங்கனா சும்மாவா?? எல்லாம் ஒரு முடிவோடத் தான். தினசரி பேப்பர், துக்ளக், ஜூனியர் விகடன், ரிப்போர்டர் என்று அரசியல் செய்திகள் வரது தான் படிப்பாங்க. சரிதான், நம்மளோட போட்டி போடுவாங்க போலிருக்கேனு நினைச்சேன். பின்னே? ஒரு வீட்டிலே ஒரு தலைவி தானே இருக்க முடியும்? மெதுவா அவங்க பரோடா போனப்புறமா அங்கே படிக்கப் புத்தகமெல்லாம் கிடையாதே! என்ன பண்ணி இருக்கப் போறாங்களோனு நினைச்சோம்.

அங்கே போகும்போது நானும் இந்த முறை புத்தகங்கள் கொண்டு போக முடியலை. ஏற்கெனவே எடை அதிகம், அட, எனக்கில்லைங்க, நாங்க கொண்டு போன சாமான்களோட எடையைச் சொல்றேன். மூ.தூ. மு. அண்ணாவாய் எப்போவும் போல் அவரே தூக்க வேண்டாம்னு இந்த முறை புத்தகங்களைத் தியாகம் செய்துட்டு, ஒரே ஒரு புத்தகத்துடன் போனேன். அங்கே தொலைக்காட்சியும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியும் தான் ஒரே பொழுது போக்கு. ஒரு நாள் மத்தியானம், மாமியாரும் உட்கார்ந்திருக்கும்போது என் டி டிவி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்க மாமியாரும் புரியுதோ, இல்லையோ ஆங்கிலச் செய்திகள், ஹிந்திச் செய்திகள், தமிழ், மலையாளம், தெலுங்கு னு எல்லாமே பார்ப்பாங்க. அப்போ மன்மோஹன்சிங்கை சிபு சோரன் சந்திக்க வந்த பழைய ஃபைல் ஒளிபரப்பு ஒண்ணு எதுக்கோ வந்தது. உடனேயே என் மாமியாரின் கமெண்ட்:"சிபுசோரன் தேர்தலிலே தோத்துப் போயாச்சு போலிருக்கே?? மன்மோஹன் சிங்கிட்டே அது பத்திச் சொல்லத் தான் வந்திருக்காரா?" ஆடிப் போயிட்டேன் நான்.

அடுத்து வந்தது தமிழ்நாட்டு முதலமைச்சர்:" இவருக்கு ஆப்பரேஷனாமே, முதுகுத் தண்டில்? முடிஞ்சாச்சா?? தயாநிதி மாறனோட ஒத்துப் போயிட்டாங்களாமே?" அடுத்த ஷாக் எனக்கு.அடுத்தாப்போல் ஒரு கேள்வி கேட்டாங்க பாருங்க. நிஜமாவே ஆடிப் போயிட்டேங்க!
திருமங்கலம் தேர்தலைப் பத்தி தேர்தல் கமிஷனர்கள் எல்லாம் ரொம்பவே வருத்தப் பட்டாங்களாமே? காஷ்மீர் தேர்தல் கூட நல்லா நடந்ததாமே?' னு சரமாரியாக் கேட்கிறாங்க. மும்பை நிகழ்ச்சியின் போது நான் அங்கேதானே இருந்தேன். அப்படினு வேறே கூட ஒரு கொசுறு நியூஸ்!

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?? நம்ம பதவிக்கே வேட்டு வைச்சுடுவாங்க போல னு பயம் வந்துடுச்சு எனக்கு. வெளியே காட்டிக்காமலேயே அசடு வழிந்தேன்! வேறே வழி?

7 comments:

  1. உங்க மாமியார் ஆச்சே. இது கூட இல்லாட்டி எப்படி...

    என் புல் சப்போர்ட் அவங்களுக்கு உண்டுனு சொல்லிடுங்க ...

    அவங்களை பதிவு எழுத வச்சு உங்களுக்கு ட்ப் பைட் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்குறீங்க

    ReplyDelete
  2. புலி, இப்படி ஒரேயடியாக் கட்சி மாறுவீங்கனு எதிர்பார்க்கலை, பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், ஆரஞ்சு, வெள்ளை, கறுப்பு, ஊதா என அனைத்துக் கலர்களிலேயும் துரோகம் பண்ணறீங்க கட்சிக்கு. ம்ம்ம்ம்ம்ம்??? உடனடி நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப் படுகின்றது.

    ReplyDelete
  3. //அவங்களை பதிவு எழுத வச்சு உங்களுக்கு ட்ப் பைட் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்குறீங்க//

    ரீப்பிட்டே!!!

    ReplyDelete
  4. சரி, தமிழகத்து வார, மாத சஞ்சிகைகள் கிடைக்காம எப்படி இவ்வளவு தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டாங்களா?....அதச் சொல்லுங்க...

    ReplyDelete
  5. மெளலி, வழக்கம்போல் ரிப்பீட்டே தானானு கேட்க வந்தேன், கீழே இன்னொரு கமெண்டைப் பார்த்துட்டுப் பேசாம இருக்கேன்.

    எப்படி இவ்வளவு விஷயம் தெரிஞ்சுண்டாங்கனு சின்னக் குழந்தை கூடச் சொல்லுமே, மெளலி! :)))))))))))

    ReplyDelete
  6. அதான் அவசர அவசரமா திரும்பிட்டீங்களா?
    என்னடா இவ்வளோ நல்லா இருக்கிற ஊர்கள்ளே தங்கிடலாமேன்னு நமக்கே தோணுது இவங்க சீக்கிரம் திரும்பிட்டாங்களேன்னு நினைச்சேன்!

    ReplyDelete
  7. திவா,

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete