Wednesday, September 2, 2009

"அ"தர்மமிகு சென்னையே தான்! :(

கொஞ்சம் , கொஞ்சம்னு கூட இல்லை, அதிகக் களைப்படைந்துவிட்டேனோ?? ஆமாம், அப்படித் தானு நினைக்கிறேன். 23-ம் தேதி பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிச்சு அதிக அலைச்சல். ஓய்வு கம்மி. இந்த அழகிலே எல்லா இடத்துக்கும் போகும் ஆசைனு ம.பா. சொல்லுவார். போகலைனா தப்பாவும் நினைக்கறாங்க. அதுவும் புகுந்த வீட்டு மனிதர்கள் வீட்டு விசேஷம். எந்தக் காரணத்தைக் கொண்டும் விடமுடியாது. ஆகையால் போய்த் தான் ஆகவேண்டி இருக்கு. அங்கே சாப்பிடும் ரசம் சாதமும், அப்பளமும் வீட்டிலே இன்னும் நிதானமாய்ச் சாப்பிடலாம்தான். நாம் போகலைனா நம்ம வீட்டு விசேஷத்துக்கு ஒரு குஞ்சு, காக்கை கூட வராது. அதையும் பார்த்துக்கணும். அதுவும் இப்போ மறுபடியும் நேரே வந்து அழைக்கும் பழக்கம் வேறே ஆரம்பிச்சிருக்கா? நேரேயே வந்து கூப்பிட்டுடறாங்களே. என்ன காரணமோ, கொஞ்சமே கொஞ்சம் அசந்துதான் போயிருக்கேன். தூங்கலை, கொஞ்சம் அசட்டையாய் இருந்துட்டேன். அதுக்குள்ளே ஆட்டோ பறந்துடுத்து ஆர்யகெளடா ரோடு வரைக்கும்.

ஆட்டோ ஓட்டுநரிடம் நேரே ஏன் போறீங்கனு கேட்டதுக்கு, சைடிலே வர ரோடிலே திரும்பினால் ஹெல்த் செண்டர் கிட்டம்மா என்று பதில் வந்தது. ஒருவேளை அது கிட்டே இருந்துட்டா??? மாம்பலத்திலேயே குறுக்குச் சாலைகள் தானே நிறைய?? சரினு பொறுத்தேன். பார்த்தா ஜூபிலி ரோடு வருது. அட, இது எங்கே வருதுனு பார்த்தா? ஆர்யகெளடா ரோடு வந்துடுச்சு. எனக்கு ஏதோ தில்லுமுல்லு நடக்கப் போகுதுனு புரிஞ்சு போச்சு. உடனேயே சத்தம் கொடுத்து (கொஞ்சம் வேகமாவே)ஆட்டோவை நிறுத்திட்டு ஹெல்த் செண்டர்னு தானே கூட்டிட்டுப் போங்கனு சொன்னேன், இங்கே ஏன் கூட்டிட்டு வந்தீங்கனு கேட்டுட்டுக் கைப்பையில் வைத்திருந்த என்னோட கைத் தொலைபேசியை எடுத்துத் தம்பியைக் கூப்பிட்டேன். அதுவரையிலும் நான் எந்தவிதத் துணையுமில்லாமல், வழியும் தெரியாத ஒரு கிராமத்துக்காரினு நினைச்ச ஆட்டோ காரர் கைபேசியில் தம்பியிடம் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்ததுமே பேச்சை மாற்றினார். ஹெல்த் செண்டர்னு எங்கே சொன்னீங்க? அது இங்கே இருந்து ரொம்ப தூரத்திலே இருக்கு! அங்கே கொண்டு விடறதுனா இன்னும் 100ரூ அல்லது 200 ரூ ஆகும். அதோட நீங்க சொன்ன தெரு இதுதான் அப்படினு ஒரே அடியா அடிச்சுட்டார்.

ஒருவேளை நம்ம முகத்திலே படிக்காத நிரட்சர குட்சினு எழுதி வச்சிருக்கோனு எனக்கே சந்தேகம் வந்துடுச்சு. அதுக்காக பீட்டரா விடமுடியும்? ஒரு முடிவுக்கு வந்து தம்பி கிட்டே நான் எம்சிசி பாங்க் வாசலில் நிக்கறேன். யாரையாவது அனுப்புனு சொன்னேன். ஆட்டோவை விட்டு ஆட்டோக்காரரே எதிர்பார்க்காவண்ணம் இறங்கிட்டு பணத்தை அவர் வாங்க மாட்டேன்னு சொல்லியும் ஆட்டோவிலேயே வச்சுட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அந்த ஆட்டோக்காரர் கிட்டே பேசின பணத்தைக் கொடுத்தால் வாங்கவே இல்லை. சத்தம் போட ஆரம்பித்தார். நான் யோசித்துவிட்டு மறுபடி தம்பியைக் கூப்பிட்டு, நான் நடந்து அயோத்யா மண்டபம் பக்கம் வந்துட்டே இருக்கேன். அந்தப் பக்கமா வரச் சொல்லுனு சொல்லிட்டு அங்கே நிற்காமல் நடக்க ஆரம்பித்துவிட்டேன். பின்னால் துரத்திட்டு வருவாரோனு கொஞ்சம் உள்ளூர பயம் தான். ஆனால் நடமாட்டம் அதிகம் இருந்ததாலும், நான் கொஞ்சம் பயத்தை வெளிக்காட்டாமல் சென்றதாலும் வரலைனு நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் அன்னிக்குப் பணமும் போச்சு, இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிடாமல் நடையும் அதிகம், அதோடு என்னை அழைத்துவரத் தம்பியின் பையருக்குப் பெட்ரோலும் ஆச்சு. ஆக அன்னிக்கு நஷ்டக் கணக்கே ! ஆனாலும் இதிலிருந்து என்ன தெரியுதுனா சாதாரணமாய் உடை உடுத்திட்டுப் போனால் ஒண்ணும் தெரியாதுனு ஏமாத்தறாங்க. ரொம்ப க்ராண்டாக உடை உடுத்திட்டுப் போனால் பைசா நிறையக் கறக்கலாம்னு ப்ளான் போடறாங்க. காலையிலே என் கணவரோட துணையோட போனப்போவும் வடக்கு மாடவீதிக்குப் பதிலா தெற்கு மாடவீதிக்குக் கொண்டு விட்டாங்க. கடவுளே, என்ன நடக்கிறது இந்தத் தருமமிகு சென்னையிலே???

இனிமேலே குடும்ப ஆட்டோக்காரரைத் தவிர மத்தவங்களைக் கூப்பிடக் கூடாதுனு முடிவு பண்ணியாச்சு. தி.நகர், மயிலைனு போக நேர்ந்தால் பேருந்தே சரியானதுனு தோணுது. என்ன உட்கார இடம் கிடைக்காது. கூட்டம், நெரிசல் அதிகம், எனக்கு மூச்சுத் திணறல் வரும். அதுக்குத் தான் ஆட்டோ, கீட்டோ எல்லாம் வேண்டி இருக்கு. ஆனால் எல்லா ஆட்டோக்காரங்களும் நல்லவங்களா இருக்கிறதில்லை. இது எப்போ மாறும்??? :((((((((((( பிப்ரவரியில் குஜராத் போனப்போ பேட் துவாரகா, மெயின் துவாரகாவில் இருந்து 30 கிமீக்கும் மேல். அப்படி இருந்தும், நாங்க ஏற்கெனவே உள்ளூர்க்காரங்க கிட்டேயும், தங்கின ஹோட்டலிலும் விசாரித்து வச்சிருந்த பணத்துக்கு ஐம்பது ரூ குறைவாகவே கொடுத்தோம். பரோடாவிலே கேட்கவே வேண்டாம். மச்சினர் வீட்டிலே இருந்து ரயில்வே ஸ்டேஷன் போக மினிமம் உள்ள பத்து ரூக்கு மேல் எடுத்துக்கறதில்லை. ஒருநாள் பத்துரூபாயாக இல்லைனு 20ரூ நோட்டைக் கொடுத்தோம், மிச்சம் பத்து ரூ இரண்டு ஐந்து ரூ நாணயங்களாக நாணயமாய்த் திரும்பி வந்துவிட்டது. அங்கேயும் விலைவாசி இதே தான்! பெட்ரோல் விலையும் இதே மாதிரித் தான். இங்கே மட்டும் ஏன் இப்படி? ஏன் இப்படி?? அதிலும் கடந்த ஒருமாதமாக இது மூன்றாவது முறையான அனுபவம். அனுபவம் கொஞ்சம் கடுமையாக இருந்ததால் எல்லாரும் தெரிஞ்சுக்கணும்னு எழுதினேன். :(((((((

14 comments:

  1. //நிரட்சர குட்சினு //

    New word...?

    ReplyDelete
  2. ஆமா, எனக்கும் சென்னைல ஆட்டோல போக ரொம்ப தயக்கமா இருக்கும்.

    மீட்டரும் கிடையாது. கிமீக்கு இவ்ளோன்னு ஒரு தெளிவான விபரமும் கிடையாது. :(

    காவல் துறை தான் சில வரைமுறைகளை வகுக்கனும்.

    ReplyDelete
  3. ஜூப்ளி ரோட்ல இருந்து அயோத்யா மண்டபம் எல்லாம் ஒரு தூரமா?

    இதுக்கு தான் டி.ஆர்.சி சார் மாதிரி டெய்லி வாக்கிங்க் போகனும்னு சொல்றது. :)))

    ReplyDelete
  4. Neenga sollara maathiri auto madras la konjam jaasthi than. Mudhalil uyira kaiyil piduchundu than Rayapetta road la ellam peek hour la pona pohavendiyirukku. Pechum mariyadhaiyum sila neram rombave kuraivu. Veettukku vara auto kaararukku nammaithavira vaithu puzhaippukku school children, odd sawari ellam vera irukke. Namba ninaicha neraththukku avaa kidaikkanum. Pongal samayaththula oru nanna kudichavaroda autola erindu adayar to annanagar ore buk buk than. SEETI PAATUNU thadabudala PADINDU NUNGAMPAKKAM PAKKATHILA VANDIYA NIRUTHITTU PONAVARAI KAANUM NU PAATHTHA AUTOKKU PINNALA MANNAI KUMICHCHU VACHCHUKKONDU OO NNU AZHUDHUNDU IRUKKAR. IRUTTARA NERAM. nadamaatamum kuraiva irukku. Ura vittu poi 20 varusham aachu . Autokkararai paththalum paavama irukku. Kudiya ullathu vedhanaya nu theriyalla. Orupadiya en mama veedu poi senthu ellaridamum akshathai vanginden. Onakku oru car a vaichundu varamudiyathamanu. Venumna seyyarome. Enna lesson ithellam nu sila samayangalla puriyaththan illai.

    ReplyDelete
  5. ஆட்டோவை விட கால் டாக்ஸி பரவாயில்லைன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. சென்னை வரும்போதெல்லாம் நாந்தான் ஏமாறுகிறேன்னு நினைத்தேன்...

    அங்கேயே இருப்பவர்களுக்கும் இதான் கதின்னு இப்போத்தான் தெரியுது..நமக்கே இப்படின்னா தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர் கதி என்னன்னு நினைச்சா ரொம்பவே சங்கடமா இருக்கு.... :(

    இன்னும் ஏன் "தருமமிகு" அடைமொழியெல்லாம், வேண்டாம் விட்டுடுங்க அதை.....

    ReplyDelete
  7. அம்பி, இருங்க ம்ம்ம்ம்??? ஒண்ணும் தெரியாதங்கற அர்த்தத்திலே சொல்றது!

    ReplyDelete
  8. //காவல் துறை தான் சில வரைமுறைகளை வகுக்கனும்.//

    ஹிஹீஹி, முக்கால்வாசி ஆட்டோச் சொந்தக்காரங்க அவங்க தான். :D

    ReplyDelete
  9. //இதுக்கு தான் டி.ஆர்.சி சார் மாதிரி டெய்லி வாக்கிங்க் போகனும்னு சொல்றது. :)))//
    க்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் போறோம், அன்னிக்கு இருந்த அலுப்பிலே நடக்கிறதே ஒரு வித்தையா இருந்தது! நீங்க வேறே! :P

    ReplyDelete
  10. நீங்க சொல்லுவது முற்றிலும் சரி ஜெயஸ்ரீ, என்னதான் குடும்ப ஆட்டோவாய் இருந்தாலும் இப்படியும் எங்களுக்கும் நடந்திருக்குதான். அது சரி, அந்தக் குடிகாரன் கிட்டே இருந்து தப்பினீங்களே, அதுவே பெரிசு! :(

    ReplyDelete
  11. வாங்க திவா, கால் டாக்ஸி இந்தக் குறைந்த தூரத்துக்கு வராது. :(

    ReplyDelete
  12. வாங்க மெளலி, சென்னை ஆட்டோக்காரங்க கிட்டே ஏமாறதவங்க அந்த ஆட்டோக்காரங்க மட்டுமே. வேறே யாரும் இல்லை. எல்லாரும் ஏமாந்திருப்பாங்க. நான் சொல்லறேன், மத்தவங்க சொல்றது இல்லை. பயமோ??? ஆட்டோ வந்துடும்னு? :D

    ReplyDelete
  13. தலைவி...இதுக்கு தான் கட்சி தொண்டர்கள் கிட்ட சொல்லிட்டு போனோங்கிறது ;)) என்ன உங்களுக்கு விளம்பரம் பிடிக்காது.

    \\குடும்ப ஆட்டோக்காரரைத் தவிர மத்தவங்களைக் கூப்பிடக் கூடாதுனு\\

    குட்...நாங்க இதை தான் செய்துக்கிட்டு இருக்ககோம் ;))

    ReplyDelete
  14. வாங்க கோபி, பின்னூட்டத்தை இப்போத் தான் படிச்சேன், ஹிஹிஹி, எனக்குக் கொஞ்சம் இல்லை நிறையத் தன்னடக்கம், அதான் சொல்லிக்கலை! :)))))))

    குடும்ப ஆட்டோக்காரர் ஒரு நாள் பூராவுக்கும் வரதுனா யோசிப்பாரே? தவிர ஆட்டோவை விலைக்கு வாங்கிட்டு நீங்களோ ஓட்டிக்குங்கனு சொல்லிட்டா?

    ReplyDelete