Sunday, November 22, 2009

வஸ்த்ரகலா வந்தாச்சு! ராமலக்ஷ்மிக்கு நன்றி!

கஞ்சி வரதப்பரைப் பத்தி எழுதும்போது இது என்ன மொக்கைனு கேட்காதீங்க. போன வாரம் அம்பி திடீர்னு தொலைபேசியில் அழைத்தப்போ எனக்கும் என்னடானு ஆச்சரியமா இருந்தது. கடைசியிலே பார்த்தால், (முதல்லே இருந்துதான்) ராமலக்ஷ்மியோட வேலை அது. வல்லி சிம்ஹனோட பதிவிலே நான் அவங்களைச் சமாதானப்படுத்த அம்பி வாங்கித் தரப் போற வஸ்த்ரகலாவைப் பத்திச் சொன்னேனா? அதை அம்பி பார்க்கவே இல்லையா? ராமலக்ஷ்மி வேலை மெனக்கெட்டு(ஹிஹிஹி, வீட்டிலே சமையல் ரங்ஸாம், சொன்னாங்க:P) அதை எல்லாம் ஜி3 பண்ணி(ஜி3 நான் உங்களை நினைக்கவே இல்லை, ரொம்ப நாளாச்சேனு பீலிங்ஸா இருந்துச்சு இல்லை, இப்போ சரியா) அம்பிக்கு அனுப்பி இதை எல்லாம் கண்டுக்கறதே இல்லையானு கேட்டிருக்காங்க. அதான் அம்பி தொலைபேசியில் அழைச்சிருக்கார். அதுவும் சொந்தத் தொலைபேசியா? எங்கே?? அம்பியாவது? சொந்தத் தொலைபேசியில் பேசறதாவது? எல்லாம் மாமனார் வீட்டுத் தொலைபேசிதான்.

அப்புறமா ஒருவழியா அம்பியை வஸ்த்ரகலா வாங்கித் தர ஒத்துக்க வச்சுட்டேன். எனக்கும், வல்லிக்கும் முதல்லே வந்துடும். அப்புறமா மத்தவங்களுக்கு. நாங்க ரெண்டு பேரும்தான் அம்பியோட பதிவை எத்தனை மொக்கையாய் இருந்தாலும் ஆதரிச்சு இத்தனை பிரபலமா ஆக்கி இருக்கோமே. அதுக்கான நன்றி அறிவிப்புத் தான் இந்த வஸ்த்ரகலா. அம்பி நான் கேட்ட நீலம் அல்லது க்ரே கலர் எனக்கு. வல்லி என்ன கலர் கேட்டாங்க தெரியலை. பச்சையோ மஞ்சளோ எனக்கு வேண்டாம். அதையே பார்த்துப் பார்த்து அலுத்துப் போச்சு!

17 comments:

  1. நீல கலர் ஜிங்குசா க்ரே கலர் ஜிங்குசா வா? அம்பி! எங்களுக்கெல்லாம் ஒரு கர்சீப் ஆவது உண்டா?
    :-))

    ReplyDelete
  2. ஹிஹிஹி, வாங்க திவா,கர்சீப் வாங்கப் பணம் மிச்சம் இருந்தால் அம்பி வாங்கிக் கொடுப்பார், வாங்கிக்குங்க, என்ன அம்பி சரிதானே? :)))))))

    ReplyDelete
  3. அம்மா நீலக் கலரே வாங்கிக்கோங்க :) கண்ணன் கலராச்சே!

    ராமலக்ஷ்மி! இப்படில்லாம் சமூக சேவை பண்றீங்கன்னு தெரியாம போச்சே! அப்டியே எனக்கும் ஒண்ணு ப்ளீஸ்! BTW, அம்பிதான் வாங்கணும்னு கட்டாயம் இல்லை! ஹி...ஹி.. :)))

    ReplyDelete
  4. //வேலை மெனக்கெட்டு//

    ஹி, பின்னே.. நீங்களும் ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் ஒவ்வொரு கனவு கண்டு.. எனக்கே சங்கடமாயிடுச்சுல்ல:))?

    நீலக்கலர் வஸ்தரகலாவை அணிந்து கொண்டு, 'நன்றி அம்பி' என மறுபடி கன்ஃபர்ம்டா ஒரு பதிவை சீக்கிரமே எதிர்பார்க்கிறேன்:)! [அம்பி, இனி நீங்க தப்பிக்கவே முடியாது:)!]

    கவிநயா, அங்க சுத்தி இங்க சுத்தி என் ஹாண்ட்பேக்கில் கை வைக்கிறீங்களே, நியாயமா:))?

    ReplyDelete
  5. அம்பி,

    என்னையும் லிஸ்ட்டில் சேர்த்துக்கணும். அம்மாந்தூரத்துலே இருந்து வந்துருக்கேன்.



    முதல்முதலா என்னைச் சந்திக்க, நீங்கள் வரும்போது என்ன வாங்கிட்டு வரலாம் என்ற கவலை தீர்ந்தது உங்களுக்கு:-)

    நீலக்கலர் எனக்கும் ஓக்கே. எனக்கப்புறம் என் பொண்ணுக்காச்சு.

    ReplyDelete
  6. ஸ்வாமி!! போச்சு!! இனிமே Mr Ambi .. Nei..Nei
    Mr அடிகளார்!! உங்களுக்கு( காஷாயம் , கமண்டலமு! TELUGU STYLE, ருத்ராக்ஷம் சகிதம் ) காசிக்கு போ...கும் சன்யா..சி.. உன் குடும்பம் என் ஆஹும் நீ.. யோ..சி .. டொய்ங்க் ...டொய்ங்க் தான் :((( "அம்மா!!" நீங்களுமா !!:))
    ராஷ்மி (சுருக்கமா) தான் தீக்ஷை ஆரம்பிச்சு வச்சிருக்காங்கனா!!!!

    ReplyDelete
  7. வஸ்த்ரகலான்னா என்ன? சசிகலா மாதிரி ஏதும் ஆள் பெயரா? :p

    //அம்பிதான் வாங்கணும்னு கட்டாயம் இல்லை! ஹி...ஹி.. //

    @கவிநயா அக்கா, ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க போங்க. :))

    @துளசி டீச்சர், ஆஹா, நீங்களும் ஜோதில ஐக்கியம் ஆயாச்சா? :))

    @திவாண்ணா, முடியல... :p

    @ரா ல, நாரதி! வந்த வேலை முடிந்ததா? :))

    @ஜெயஸ்ரீ அக்கா, செம குஷி மூடுல இருக்கீங்க போல. :))

    ReplyDelete
  8. தாங்கீஸ் கவிநயா, கூப்பிட்டதும் உடனே வந்ததுக்கு நன்னிங்கோ, நல்லவேளையா ராமலக்ஷ்மியைக் கேட்டுட்டீங்க, பிழைச்சேன்.

    ReplyDelete
  9. ஹிஹிஹி, ராமலக்ஷ்மி, வாங்க, வாங்க, உங்களைக் கூப்பிடலையேனு நினைச்சேன், வந்துட்டீங்க, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ், என்னதான் இதுக்கு அடிலே கொஞ்சமே கொஞ்சம் உங்களுக்குச் சேரவேண்டிய அத்தைசீர் பத்தின கவலை இருந்தாலும், எனக்காக அம்பிகிட்டே பேசினதுக்கு தாங்கீஸோ தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  10. வாங்க துளசி,நீங்க தான் இங்கே வரச்சே வஸ்த்ரகலாவைக் கட்டிப் பார்த்துட்டுத் திருப்தி அடைஞ்சுக்கறேன்னு சொன்னாப்பல இருந்ததே! :P க்ர்ர்ர்ர்ர் பெண்ணுக்குக் கொடுக்கப் போறீங்க?? அஸ்கு புஸ்கு!

    ReplyDelete
  11. வாங்க ஜெயஸ்ரீ, நீங்களும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டீங்க கிட்டத் தட்ட, அடுத்து அடுத்த வருஷம் என்னனு பார்ப்போம், நீங்களும் லிஸ்டிலே உண்டு, ஓகேவா? :))))))

    ReplyDelete
  12. வாங்க அம்பி, எல்லாரோட லிஸ்டையும் பத்திரமா வச்சுக்கோங்க, கரெக்டா வந்து சேரணும், ஆமா, சொல்லிட்டேன், ஏற்கெனவே கணேசன் என் கிட்டே தனி மெயில்லே சொல்லிட்டான். நீங்க வாங்கி வச்சிருக்கிறதை!

    ReplyDelete
  13. //நல்லவேளையா ராமலக்ஷ்மியைக் கேட்டுட்டீங்க, பிழைச்சேன்.//

    கேட்டுட்டு எங்கே அம்பி பார்வைக்கு நம்ம சம்பாஷணை படாமல் போன மாதிரி ஆயிடக் கூடாதேன்னு, ரொம்பக் கவனமா இங்கே அனுப்பியும் வச்சுட்டாங்க கவிந்யா:)))!

    ReplyDelete
  14. //கவிநயா, அங்க சுத்தி இங்க சுத்தி என் ஹாண்ட்பேக்கில் கை வைக்கிறீங்களே, நியாயமா:))?//

    எங்கேயும் சுத்தலப்பா! நேரே உங்ககிட்டதான் :))) நீங்க ரொம்ப நல்லவுங்களாமே! :)))

    ReplyDelete
  15. அந்த கலாவை இங்கிட்டும் ஒரு பார்சேல் பண்ண கூடாதா அம்பி! பை தி பை எனக்கு கிளி பச்சைன்னா இஷ்ட்டம்( நீங்கலா கட்டிக்க போதீங்கன்னு கேட்கப்பிடது):-))

    ReplyDelete
  16. அப்பாடா, வஸ்த்ரகலானதும் எத்தனை பேர் வந்துட்டீங்க??

    அபி அப்பா,
    //இஷ்ட்டம்( நீங்கலா கட்டிக்க போதீங்கன்னு கேட்கப்பிடது):-))//

    உங்களுக்குக் கிடையவே கிடையாது போங்க, முதல்லே எழுத்துப் பிழை இல்லாம எழுதுங்க, அப்புறம் பார்க்கலாம், வஸ்த்ரகலாவெல்லாம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்காகவே மாயவரம் வந்து உங்க தமிழ் ஆசானை நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிறாப்போல் கேள்வி கேட்கணும்னு பார்க்கிறேன், எங்கே சதி இல்லை நடக்குது என்னை வரவிடாம?? :P:P:P:P:P:P:P:P:P

    ReplyDelete
  17. //எங்கேயும் சுத்தலப்பா! நேரே உங்ககிட்டதான் :))) நீங்க ரொம்ப நல்லவுங்களாமே! :)))//

    ஹிஹிஹி, ஆமாம், ஆமாம், அதெல்லாம் கரெக்டா வாங்கிக் கொடுத்துடுவாங்க, ரா.ல. ரா.ல. மறந்துடாதீங்க!

    ReplyDelete