கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகிறது இந்தப் பக்கத்துக்கு வந்து. சமையல் பதிவுகளையும், "எண்ணங்கள்" பக்கமே பகிர்வதால் இங்கே வரவே இல்லை. இனி கொஞ்ச நாட்களுக்கு எண்ணங்களை ஒதுக்கி வைக்கணும்னு எண்ணம். இப்படித் தான் கிறுக்குத் தனமா ஏதேனும் தோணும்! சில சமயம் கணினியில் இருந்தே விலகி இருப்பேன். புத்தகங்கள் படித்துக் கொண்டு, தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துக் கொண்டு என்று. நேற்றைய மின்வெட்டில் புத்தகங்களை அடுக்கலாம் என்று முடிவு செய்து சிறிது நேரம் ஒழுங்கு படுத்தினேன். அப்படி ஏதேனும் வேலையை ஏற்படுத்திக் கொள்ளணும். சும்மா உட்கார முடியாது! பல விஷயங்கள் ஆரம்பித்துப் பாதியில் நிற்கிறது. எச்சில், பத்து பத்தி ஆரம்பிச்சேன். பாதியிலே இருக்கு! கல்யாணங்கள் குறித்த பதிவில் இன்னும் இரண்டோ, மூன்றோ போட்டால் முடிஞ்சிருக்கும்! அதுவும் சப்தபதியோட நிற்குது!
கொளஞ்சியப்பர் கோயில் பதிவும் பாதியிலே! கன்யாகுமரிப் பதிவும் பாதியிலே! இப்படி எல்லாமும் பாதியிலே நிறுத்திட்டு வேறே ஏதேனும் போடும்படியா ஆயிடுது! ஆகவே கொஞ்ச நாட்களுக்கு எண்ணங்கள் பதிவுக்குப் போகாமல் இங்கேயே "என் பயணங்களில்" பக்கத்தில் அதை எல்லாம் நிறைவு செய்யலாமா என யோசனை! ஆரம்பத்திலிருந்தே பயணங்களை மட்டும் இங்கேயே எழுதி வந்திருக்கணும். இங்கே யாருமே வரதில்லைனு அங்கேயே எழுதப் போனால் நடு நடுவில் வேறே பதிவுகள் போடறாப்போல் ஆகிறது! :) இனி இங்கே சில நாட்களுக்கு எழுதலாம்னு எண்ணம். பார்ப்போம். கொஞ்ச நாட்களுக்குக் கணினியில் இருந்து விலகி நிற்கவும் விருப்பம். ஒரேயடியாக முடியாது தான். தனிப்பட்ட முறையில் வரும் மடல்களைப் பார்க்கவாவது வந்தாகணும். ஆனால் இந்தப் பதிவுகளை எழுதுவது, முகநூல் பக்கம், ஜி+ எல்லாத்தையும் ஓரம் கட்டலாம்னு நினைக்கிறேன். ஒரு மாதிரியான மனச்சோர்வு! யாருமே இல்லாமல் தனியாக இருப்பது போன்றதொரு உணர்வு!
இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்க நினைக்கும் மனம்! வேறென்ன சொல்ல!