Friday, December 11, 2015

மறுபடி கன்யாகுமரிக்கு வாங்க! இங்கே இருந்து பார்க்கலாம்!

டிடியைத் தவிர வேறே யாரும் இங்கே வரலை. அதனால் பரவாயில்லை. நான் தொடர வேண்டியது தான் என நினைக்கிறேன். கொஞ்சம் தீவிரமாக முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும். அதான் முடியமால் போகிறது. போகட்டும்!

கன்யாகுமரியைப் பத்திக் கடைசியா எழுதிட்டு இருந்தேன். இல்லையா? கன்யாகுமரியின் சில படங்களைப் போடுகிறேன் இங்கே. அங்கேயும் போட்டிருந்தாலும் இங்கேயும் பார்த்துக்கலாமே!ம்ம்ம்ம்! படங்களை ஆல்பத்திலேருந்து எடுக்கிறது கொஞ்சம் கஷ்டமாப் போச்சு! அப்புறமா எப்படியோ ஒரு மாதிரியா எடுத்திருக்கேன். :)

முதல்முறை கன்யாகுமரி வந்தப்போ அங்கே கீழே தெரியும் மண்டபத்தில் இறங்கிப் பார்த்திருக்கோம். இப்போ அந்த வழி அடைக்கப்பட்டிருக்கிறது.


மண்டபத்திற்கு இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள். இது சரியாகக் கோயிலில் அம்மன் குடியிருக்கும் இடத்துக்கு நேரே வரும். இங்கே ஒரு வாயில் உண்டு. இதன் வழியாகத் தான் அம்மனின் மூக்குத்தி ஒளிவிடுவதைப் பார்ப்பார்கள் எனச் சொல்வது உண்டு. இப்போது இந்த வாயில் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. 



கோயிலின் கோபுரம் கொஞ்சம் தூரத்திலிருந்து! பக்கத்தில் தெரியும் மண்டபத்தின் வழியாகத் தான் நுழையணும்.