Wednesday, January 14, 2009

ரெங்க ராமனா? ரெங்கமன்னாரா?? மாமனார் வீடே சொர்க்கம்!

ஹிஹிஹி, ஹெஹ்ஹே, ஹெஹ்ஹே! எல்லாம் நம்ம அம்பியைப் பத்தித் தான்! நேத்திக்குப் பாருங்க, திடீர்னு சீக்கிரமே brunch முடிச்சுட்டு, (breakfast+lunch=brunch) பேப்பரைப் புரட்டலாமா? இல்லைனா வந்திருக்கிற புத்தகமா? இல்லை கணினியா? இல்லை தொலைக்காட்சியா? இல்லைனா என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேனா?? அப்போப் பார்த்து, தொலைபேசி அழைப்பு! எடுத்தால் யாருங்கறீங்க?? என்ன ஆச்சரியம்? என்ன ஆச்ச்ச்ச்சரியம்?? வழக்கமா சென்னைக்கு வந்தால் ஓசைப் படாமல் வந்துட்டு, ஓசைப்படாமல் திரும்பியும் போயிட்டு எப்போவோ பதிவு எழுதும்போது மட்டுமே அதைக் குறிப்பிடும் அம்பிங்க தொலைபேசியிலே. என்னடா இது?? பெரிய, பெரிய ஆளுங்க எல்லாம் நம்மளை நினைப்பு வச்சுட்டுக் கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்களேனு ஒரே பயமாப் போச்சு! என்ன பேசறது, எப்படிப் பேசறதுனு ஒண்ணும் புரியலை!

அம்பியா, அவர் பாட்டுக்கு, என்னமோ அவரோட குரலினிமை நமக்குப் புரியாத மாதிரி அல்ட்டிக்கிட்டே இருக்கார். அப்புறமா கேட்டேன் பாருங்க ஒரு கேள்வியை! என்ன மாமனார் வீடா? மாமனார் தொலைபேசியானு! அசடு வழிய ஆமாம்னு ஒத்துக்கிட்டார் அம்பி. எப்படித் தெரியும்னு வேறே ஆச்சரியம்! அதான் இத்தனை நேரம் பேசறீங்களே! உங்க தொலைபேசினாலோ, பங்களூரில் இருந்து பேசினாலோ உடனேயே வச்சுட மாட்டீங்க?னு ஒரு கேள்வியைக் கேட்டேன், பதிலே இல்லை! அதிசயமாப் பொங்கல் வாழ்த்தெல்லாம் சொல்லி, (ம்ம்ம்ம்ம்ம் ஒரு தீபாவளி, புது வருஷம், பிறந்த நாள் வாழ்த்துக் கூடச் சொல்லமாட்டார்) திடீர்னு எனக்கு வந்த அதிர்ஷ்டத்திலே பிரமிச்சுப் போயிட்டேன். அதிலேயும் எதுக்குக் கூப்பிட்டாருனு நினைக்கிறீங்க. இந்த முறையும் அம்பத்தூருக்கு வரலைனு சொல்றதுக்காக. அவர் எங்கே நம்ம வீட்டுக்கெல்லாம் லேசிலே வரப்பட்ட மனுஷனா??? நானும் எதிர்பார்க்கலை, விட்டுட்டேன்! அடுத்த முறைனு சொல்லி இருக்கார். அதுவும் தினத்தந்தியிலே சிந்துபாத் முடிஞ்சாத் தான் நிச்சயம்னு தெரிஞ்சு போச்சு! பெரியவங்க கூப்பிட்டுப் பேசினதே பெரியவிஷயம்னு நினைச்சேன். அதையே நினைச்சுட்டு இருந்தால், என்ன அதிசயம்?? இன்னிக்குக் காலம்பர வழக்கமா ஆறரை மணிக்கு வரவேண்டிய வேளுக்குடி ஏழு மணிக்கு வந்தார்.

வந்ததும் என்ன சொன்னார்னு நினைச்சீங்க?? மாமனார் வீட்டிலே இருக்கிறது தான் சொர்க்கம்னு முதமுதல்லே கண்டு பிடிச்சதே அந்த ரங்கமன்னார் தானாம். எந்த ரங்கமன்னார்?? எல்லாம் பாற்கடலிலே பள்ளி கொண்டிருக்காரே அவரே தான்! பூவிருந்த வல்லியிலே வல்லியைக் கல்யாணம் செய்துட்டு அங்கேயே மாமனார் வீட்டோடு தங்கிட்டாராம் ரங்கமன்னார். சரிதான், ரங்கன்னு பேர் வச்சாலே இப்படித் தான் போலிருக்குனு நினைச்சேன். நீங்க என்ன சொல்றீங்க?? பெருமாளே இப்படி மாமனார் வீடே கதினு இருந்தால் அம்பி என்ற ரெங்கராமன் வேறே என்னத்தைச் செய்ய முடியும்? அதான் அம்பி மாமனார் வீட்டுக்கு வந்திருக்கார் லீவுக்காகத் தானே, பெருமாள் மாதிரி இல்லையேனு நினைச்சுக்கிட்டேன். அம்பி கல்யாணத்துக்கு நான் மொய் எழுதலையாம், அதனால் எங்க வீட்டுக்கு வரலைனு புரளி கிளப்பிட்டு இருக்கார். அவரோட கல்யாணத்துக்கு எனக்கு வந்து சேரவேண்டிய ரிவர்சிபிள் புடவையோ, போன வருஷம் தீபாவளிக்கு வரவேண்டிய நகாசு பட்டுப் புடவையோ இன்னும் வந்து சேரவே இல்லை. என்னத்தை மொய் எழுதறது? கணேசனுக்குக் கல்யாணம்னால் முன்னாலேயே சொன்னால், யு.எஸ். போக டிக்கெட் எடுத்து வச்சுப்பேன், வசதியா இருக்கும்னு சொல்லி வச்சிருக்கேன். இப்போ கணேசன் கல்யாணத்துக்காக வாங்கற பரம்பரா பட்டும் சேர்ந்து மூன்று புடவையா வரணும் அம்பி! நினைவில் இருக்கட்டும்.

10 comments:

  1. அட தம்பிக்கு கல்யாணமா? எப்ப?

    நான் கூட ரங்கதிவா ன்னு பேர் மாத்தி வெச்சுக்கலாமான்னு யோசிக்கிறேன்.

    அப்புறம் தங்கமணி மாதிரி பேர் யோசிக்கிறப்ப ஏன் ரங்கமணின்னு வெச்சாங்கன்னு இப்ப இல்லே புரியுது!

    ReplyDelete
  2. பொங்கல் நல்வாழ்த்துக்கள் கீதாம்மா...

    ReplyDelete
  3. அட ரங்கதிவா, வாங்க, வாங்க, ஏது இந்தப் பக்கமெல்லாம் வந்திருக்கீங்க?? ஆச்சரியமா இருக்கே!

    ReplyDelete
  4. வாங்க மெளலி, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். நன்றி, வந்ததுக்கு!

    ReplyDelete
  5. என் மொய்யை என் ஜுனியர் வந்து உங்க கிட்ட கேக்கற மாதிரி வெச்சுக்காதீங்க!ன்னு சொன்னேனே அதையும் எழுத வேண்டியது தானே? :p

    @ரங்கதிவாண்ணா, தம்பிக்கு இன்னும் ரெண்டு அல்லது மூணு வருஷம் கழிச்சு தான். இவங்க சும்மா புரளிய கெளப்பறாங்க. :)

    ReplyDelete
  6. //அட தம்பிக்கு கல்யாணமா? எப்ப?
    //

    திவாண்ணா,
    கல்யாணம்லாம் ஒன்னும் இல்லை,தலைவி புரளியை களப்புகிறார்...:) உங்க ஆசீர்வாதம் இல்லாம என்னோட கல்யாணமா??????

    தம்பி

    ReplyDelete
  7. //@ரங்கதிவாண்ணா, //

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., அக்கிரமமா இருக்கே! அவர் மட்டும் அண்ணாவா?? :P:P:P:P:P


    //என் மொய்யை என் ஜுனியர் வந்து உங்க கிட்ட கேக்கற மாதிரி வெச்சுக்காதீங்க!ன்னு சொன்னேனே அதையும் எழுத வேண்டியது தானே? :p//

    சொன்னீங்களா என்ன?? ம்ம்ம்ம் இருக்கும், இருக்கும், நான் தான் காதிலே வச்ச பஞ்சை எடுக்கவே இல்லையே! :P:P:P:P

    ReplyDelete
  8. //திவாண்ணா,//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம், அடிக்குது, திவாவுக்கு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    //உங்க ஆசீர்வாதம் இல்லாம என்னோட கல்யாணமா??????//

    ஹிஹிஹி, ரங்கதிவா, நோட் தி பாயிண்டு! ஒன்லி ஆசீர்வாதம், நோ மொய்! அண்டர்ஸ்டாண்டினதா?? :P:P:P

    தம்பி, இப்போவே சொல்லிடுங்க, யு.எஸ்.ஸுக்கு டிக்கெட்டுக்குச் சொல்லிடறேன்! :P:P:P:P:P

    ReplyDelete
  9. //அட ரங்கதிவா, வாங்க, வாங்க, ஏது இந்தப் பக்கமெல்லாம் வந்திருக்கீங்க?? ஆச்சரியமா இருக்கே!//

    போச்சுடா. மாட்டிக்கிட்டேனா? இனிமே இதுதான் என் பேரா?

    //அப்புறம் தங்கமணி மாதிரி பேர் யோசிக்கிறப்ப ஏன் ரங்கமணின்னு வெச்சாங்கன்னு இப்ப இல்லே புரியுது!//

    செம ஜோக்குன்னு நினைச்சேன். ஹும்! :-(

    //@ரங்கதிவாண்ணா, தம்பிக்கு இன்னும் ரெண்டு அல்லது மூணு வருஷம் கழிச்சு தான். இவங்க சும்மா புரளிய கெளப்பறாங்க. :)//
    ம்ம்ம்ம்ம். என்னவோ யூஎஸ் டிக்கட் ன்னு சொல்றாங்களேன்னு பாத்தேன். மொய் எழுதாம ஓடிப்போயிடலாம்ன்னு பாக்கறாங்களா? அப்படி என்ன ஆனைக்கு தீனியா மொய் எழுதணும்?

    தம்பி, அம்பி இன்னும் 3 வருஷம் தடா போட்டு இருக்கார். அதுவரை சுதந்திரமா இருங்க. அப்புறம் இருக்கவே இருக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete