Sunday, July 6, 2008

வீட்டுக்கு வீடு வாசப்படி தான், எங்க வீட்டு வாசப்படி ரொம்பப் பெரிசு!

என்னத்தைச் சொல்றது?? பழைய ஐடியிலே இருந்து நினைவில்லாமல் வல்லியோட கமெண்டுக்கும், கோபியோட கமெண்டுக்கும் பதில் சொல்லிட்டேன். அப்புறம் என்னோட பதிலை, நானே போய் பப்ளிஷ் பண்ண வேண்டியதாப் போயிடுத்து! எல்லாம் அஜித் லெட்டர்! இன்னும் இங்கே சூடு பிடிக்கலை, இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் லீக் ஆயிட்டு இருக்கு! ஹிஹிஹி, வெட்கத்தை விட்டு நானே போய்க் கூப்பிட்டுட்டுத் தான் இருக்கேன் ஒவ்வொருத்தரா!! போகட்டும், இப்போத் தலையாய விஷயம் என்னன்னா, எனக்கும், கொத்தனார்களுக்கும் உள்ள ஜன்மப் பகை பத்தித் தான்!

கொத்தனார்னதும் எல்லாருக்கும் நினைவுக்கு இ.கொ. வந்தால் நான் பொறுப்பில்லை! நான் சொல்றது நிஜமான கொத்தனாருங்கோ!!! கல்யாணத்துக்கு முன்னாலே மதுரையிலெ இருந்தவரைக்கும், இந்தக் கொத்தனாருங்களோட அதிகம் பழக்கம் கிடையாது. ஒருமுறை புதுவீடு கட்டும்போது, சிமெண்ட் கலவையில் தெரியாத்தனமாக் கால்,கை வைத்து விழுந்துவிட்டு, குளியல் நடத்தினதிலே இருந்தே, சிமெண்ட் என்றாலே அலர்ஜி!!! தவிர, அப்போ எல்லாம் அப்பா கட்டிட்டு இருந்த வீட்டைக் கூடப் போய்ப் பார்த்ததில்லை! அப்பாவே போக மாட்டார்! அப்புறம் நாங்க எங்கே போறது? அப்புறமாக் கல்யாணம் ஆனதும் தான் இது பற்றிய அறிவாற்றல் பெருக ஆரம்பிச்சது! அதுவும் என்னோட ம.பா.வுக்கு நான் இவ்வளவு அறிவிலியாக இருப்பதைப் பற்றிய வருத்தம் அளவு கடந்து போகவே, அவர் என்னை இந்தக் கொத்தனாருங்களோட தனியாக மோத விட்டுவிட்டு அவர் பாட்டுக்கு ஆஃபீஸ் கிளம்பிப் போயிடுவார்.

இப்போத் தான் தொலைபேசியில் அழைப்பு, தொல்லைபேசியாக இருக்கு. செல்பேசியில் அழைப்பு செல்லாக அரிக்குது. செல் கண்டார், செல்லே கண்டாராக எல்லாரும் பேசித் தீர்க்கிறாங்க. நாங்க நினைவா, செல்போனை வெளியே போகும்போது வீட்டில் பத்திரமா வச்சுட்டே போவோம்!! எங்கேயாவது வெளியூர் போனால் நினைவு வச்சுட்டு எடுத்துட்டுப் போறதே அபூர்வம். இப்போ, இப்போ கொஞ்சம் நினைவு வந்து எடுத்துட்டுப் போக ஆரம்பிச்சாலும், பக்கத்து வீட்டுக்கு வெத்திலை, பாக்குக்குப் போகறச்சே எடுத்துண்டு போகறதில்லை! ஆனால் எனக்குக் கல்யாணம் ஆனப்போ வீட்டில் தொலைபேசியும், கிடையாது, கிட்டப் பேசியும் கிடையாது. அதனால் அப்போ தொலைபேசி எல்லாம் கேட்டுக்க முடியாதே! காலையிலே அவர் சொல்லிட்டுப் போகிற எல்லாத்தையும் நான் சாயந்திரம் அவர் வரதுக்குள்ளே எல்லாத்தையும் நிறைவேத்தி வச்சுட்டு, ரிப்போர்ட் கொடுக்கணும். அவர் பார்த்து மார்க் போடுவார். சீச்ச்சீ, ஸ்கூல் நினைப்பிலே சொல்லிட்டேனே!

இப்படியாகத் தானே ஒரு மாதிரியா என்னையும் இந்த சித்தாள் வேலைக்குப் பழக்கப் படுத்தி வைச்சார். அப்போவும் வெள்ளை அடிக்கும்போது வீட்டிலே இருக்க முடியாது. நாங்க குடி இருந்த வீடு, குடி இருக்காத வீடு, அரசாங்க வீடு, சொந்த வீடுன்னு எல்லாம் பாரபட்சமே பார்த்ததில்லை. எங்கே போனாலும் போன ஒரு மாசம், 2 மாசத்துக்கெல்லாம், அவர் கொல்லுருவைக் கையில் எடுத்தால், நான் பாண்டில் சிமெண்டைத் தூக்கியே ஆகணும்!! வேறே வழியே இல்லை. அதிலும் அந்த வீட்டில், நாமளும் இருந்து கொண்டு, நம்ம சாமான்களையும் வைத்துக் கொண்டு, அவற்றை இடம் ஒதுக்கி வர ஆளுங்களுக்கு வேலை செய்ய ஒழிச்சுக் கொடுத்தது போக மிச்சம் இருக்கும் இடத்தில் தான் சமையல், டிபன், காபி, சாப்பாடு, தூக்கம் எல்லாம். அதுக்குத் தானோ என்னமோ தெரியலை, ஒவ்வொரு முறை மாற்றல் ஆகிப் போகும்போதெல்லாம் முன் பதிவு செய்யப் பட்ட முதல் வகுப்பு டிக்கெட்டையும், ஏசி டிக்கெட்டையும் வச்சுக் கொண்டு, அந்த வண்டியைக் கோட்டை விட்டுட்டு, வேறே வண்டியில் அன்ரிசர்வில் போக வச்சுப் பழக்கிட்டாரோனு தோணும். ஒரு ஸ்டவ் வக்கிற இடம் இருந்தாலே போதும், சின்ன டிரங்குப் பெட்டிக்குள் சமையல் பாத்திரங்களை வைத்து, சமைத்துத் திரும்பத் தேய்ச்சதும் அதிலேயே வைத்துனு மிக மிகக் குறைந்த அளவு பாத்திரங்களே போதும்னு ஆயிடும்.

பாத்திரங்கள் விஷயத்தில் தான் இப்படி, மத்தது எல்லாம் பூதம், பூதமா இருக்கும், பீரோ, கட்டில், மேஜை, நாற்காலி, காபி டேபிள்னு. அதை எல்லாம் எங்கே வைக்கிறது? எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு பெட்டி வேறே! அந்தப் பெட்டி நிறைய அவங்க அவங்க சேமிப்பான புத்தக மூட்டைகள்!இத்தனையையும் ஒரு பத்துக்குப் பத்து அடி அறையில் அடக்கிட்டு, ஒருத்தர் மேலே ஒருத்தர் பச்சைக் குதிரை தாண்டிட்டு, ஒரு மாதிரியா விளையாட்டு வீராங்கனையாவும் மாறியாச்சு! தாண்டிக் குதிச்சு, எடுக்கிறதிலேயும், எம்பி எடுக்கிறதிலேயும் என்னைவிடச் சிறந்தவங்க இப்போ இருக்கிறது கஷ்டம். இதிலேயே விருந்தாளிகள் உபசரிப்பும் நடக்கும். வந்தவங்க தான் பயப்படுவாங்க, சாப்பாட்டிலே சிமெண்ட் விழுமா, மணல் விழுமானு, நாங்க கவலையே பட்டுக்க மாட்டோம். இத்தனையும் எதுக்குனு கேட்கிறீங்களா? வீட்டிலே இப்போ கொஞ்சம் ரிப்பேர் வேலை நடக்குது. 2 அறையில் இருந்து சாமான்கள் வெளியே வந்து ஹாலை அடைச்சுட்டு இருக்கு. எடுத்து வைச்ச மேஸ்திரி, சித்தாள் எல்லாம், இந்த மாதிரியும் சாமான்கள் இருக்குமானு ஆச்சரியத்தோடு சுத்திச் சுத்திப் பார்த்துட்டு இருக்காங்க. நான் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூ.னு வசூல் பண்ணலாம்னு கூடச் சொன்னேன். கேட்கலை. :P

இந்த அழகிலே, சாப்பிடறது, தூங்கறது, எல்லாம் ஹாலிலே தான். கம்ப்யூட்டரும் ஹாலுக்கு வந்துடுச்சு, அதுக்குப் பிடிக்கவே இல்லைனு நல்லாத் தெரியுது, பின்னே? தனிக்காட்டு ராஜாவா இருந்தது. அங்கே இருந்து எடுத்து வந்து இங்கே கூட்டத்தோடு கூட்டமா இருந்தா இதை யார் கவனிப்பாங்க? அதான் ரொம்ப வருத்தத்தோட, அடிக்கடி மக்கர் செய்யுது. ஒருமாதிரியா சமாதானம் செய்து வச்சிருக்கேன். இன்னும் 2 நாள், இன்னும் 1 நாள் அப்படினு கவுண்ட் டவுன் சொல்லிக்கிட்டு வரேன். ஆனால் வண்ணான் வீட்டுக்குப் போற வழி இன்னும் கொஞ்சம் தூரம்னு ஆயிட்டு இருக்கு. பின்னே? யானை அசைஞ்சு திங்கும், வீடு அசையாம திங்கும் னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?? பேசாம ஒரு யானையே வாங்கி இருக்கலாமோ??

6 comments:

 1. உங்களுக்கு இத்தனை கலைகளைக் கற்றுத்தர ஏதுவாக இருந்த கொத்தனாருக்கு நன்றி எனச் சொல்லாதது ஏன்?

  ReplyDelete
 2. @அபி அப்பா, வாங்க, வாங்க, உங்களுக்குச் சிரிக்கவே மறந்துடுமோனு பயம் வந்திடுச்சு, இன்னிக்கு உங்க சங்கீதக் கச்சேரியைக் கேட்டதும் தான் நிம்மதியா இருக்கு! :P :P

  @இ.கொ. கொத்தனாருக்கும் எனக்கும் ஜன்மப் பகைனு சொன்னேனே?? பார்க்கலை? பின்னூட்டக் கயமை செய்யறவங்களுக்கு எல்லாம் நன்னி எதுக்குங்கோ?? ஹிஹிஹி, நீங்க நினைச்சுக்கறதுக்கு நான் பொறுப்பில்லை! :P :P :P

  ReplyDelete
 3. அக்கா ,
  கலக்கிட்டீங்க ! !
  அருமையான நடை !
  அன்புடன்
  அருப்புக்கோட்டை பாஸ்கர்

  ReplyDelete
 4. ஓ...மொக்கை இங்க நடக்குதா...இது அம்பிக்கு தெரியுமா? :-)

  ReplyDelete
 5. @அருவை பாஸ்கர், முன்னேயே ஒரு முறை வந்துட்டுப் போனீங்க இல்லை, பழைய வீட்டுக்கு?? சரி, சரி, புது வீட்டுக்கு வாங்க, நல்வரவு, பாராட்டுக்கும் நன்றி,

  @ச்யாம், பழைய போஸ்ட் பார்க்கலை? அதிலே அம்பி பின்னூட்டம் இருக்குமே? அதெல்லாம் அம்பி, எதுக்கோ மூக்கிலே வேர்க்குமாமே அது மாதிரி மொக்கைனா உடனே வந்துடுவாரே?? இது தெரியாதா??? :P

  ReplyDelete