Monday, August 17, 2009

இந்த மாதிரி பிரச்னையைப் பார்த்திருக்கீங்களா! 2

ப்ளம்பிங் வேலை தெரிஞ்சு வச்சுக்கணும்னு கோமாவும், வல்லியும் சொல்லி இருக்காங்க. என்னோட ம.பா.வுக்கு நல்லாவே தெரியும். வீட்டுக்குள்ளே குழாய்களை மாத்தறது எல்லாம் அவர் தான். இது மேலே தொட்டியிலே. தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியே வந்து வீட்டுக்கு விநியோகம் செய்யும் இடத்தில் வேலை செய்யணும். அதுக்கு ஒண்ணு அவர் மாடிக் கைப்பிடிச் சுவரிலே உட்கார்ந்து குனிஞ்சு ஆக்ஸா ப்ளேட் வச்சுக் குழாயை அறுக்கணும், இல்லைனா சன்ஷேடிலோ, ஏணி வச்சோ நின்னுட்டு அறுக்கணும். அவரோட கழுத்துப் பிரச்னைக்கு ஏணி வச்சு ஏறித் தொட்டிக்குள்ளே இறங்கி அடைச்சு வச்சிருந்த கம்பைத் துணியோட (தி.வா. கவனிக்க) எடுத்ததே பெரியவிஷயம். :)))))))))))) அதுக்கு அப்புறம் தான் கீழ்க்கண்ட முன் பதிவில் கடைசியில் படிச்ச பிரச்னை ஆரம்பிச்சது.


அன்னிக்குப் பொழுது ஒருவழியாக் கழிஞ்சு மறுநாள் பொழுது விடிஞ்சது. கிணற்றில் கயிற்றையும் ,வாளியையும் போடச் சொல்லி எதுக்கும் இருக்கட்டும்னு தயார் செய்து வைச்சேன். இந்த அமர்க்களத்திலே வாராது வந்த மாமணியாய் வேலை செய்யும் பெண்ணும் வந்து சேரக் கிணற்றில் இறைச்சுத் தான் வேலை செய்யணும்னு சொல்ல, அந்தப் பெண்ணும் சரினு வாய் திறக்காமல், (திறந்தால் மூன்றுநாள் வரலையேனு கிழிச்சிட மாட்டோமா, அதான்) வேலையைச் செய்துட்டுப் போனாள். ப்ளம்பரைக் காலை ஏழு மணியிலிருந்து கூப்பிட்டால் எழுந்திருக்கவே இல்லைனு மூன்று அழைப்புகளும் பல்தேய்ப்பதாய் மூன்று அழைப்புகளும், குளிப்பதாய் நாலு, ஐந்து அழைப்புகளும் போனப்புறம் ஒன்பது மணிக்கு வேறு வழியில்லாமல் மாட்டிக் கொண்டார். அரை மணி நேரத்தில் வருவதாய்ச் சொல்லிட்டு வழக்கம்போல் தாமதமாய் வந்து சேர்ந்தார். மேலே போய்ப் பார்த்தவருக்குத் தொட்டியின் வால்வ் மூடி இருப்பது கண்ணில் பட அதைத் திறந்துவிட்டுட்டார். நாங்க கீழே அடைப்பை நீக்கவேண்டும் என்று எல்லாக் குழாய்களையும் திறந்து வச்சிருந்தோமோ ஒரே தண்ணீர் வெள்ளம்.

அதுக்கப்புறமும் எங்க கிட்டே சொல்லவும் சொல்லாமல் எதுவும் கேட்காமல் அவர்பாட்டுக்குக்குழாயை அறுக்கவேண்டி வாங்கி வந்த ப்ளேடால் குழாயையும் அறுத்துத் தள்ளிப் பார்த்துவிட்டார். அடைப்பு எதுவும் இல்லைனு தீர்மானம் ஆச்சு. அதுக்கப்புறமாய் மெதுவாய்க் கீழே வந்து, மேலே வால்வைத் திறக்காமல் வச்சிருந்தீங்களா, இல்லை காலையிலே மூடினீங்களானு கேட்க, என்னோட ம.பா. அசடு வழிந்தார். நேத்துத் தொட்டியைச் சுத்தம் செய்துவிட்டுத் தண்ணீர் நிரப்பும்போது வால்வை மூடி வச்சேன். அப்புறம் திறக்க மறந்திருக்கேன்னு அவர் வழிய, அது தெரிஞ்சும் எதுக்குக் குழாயைக் கட் பண்ணினாருனு நான் கேட்க இப்போ ப்ளம்பரும் வழியறதில் சேர, தண்ணீரோடு சேர்ந்து எல்லாமே வழிந்தது. தண்ணீர் பிரச்னைனா என்னனு அனுபவிச்சும் பார்த்தாச்சு. அப்பாடா! கொஞ்சம் உட்காரலாமா??? இல்லையே? அடுத்து மின்சாரம் இருக்கே? சம்சாரம் மட்டுமா மின்சாரம்??? நம்ம ஆற்காட்டார் மின்சார மந்திரியானதிலே இருந்து மின்சாரம் கடவுளைப் போல கண்ணுக்குத் தெரியறதில்லை. வரதும் போறதும் புரியலை.

அப்பாடானு உட்காரவா முடியுது? சனிக்கிழமையன்னிக்குக் காலம்பரத்திலேருந்து மின்சாரம் தடைபட்டுத் தடைபட்டு வந்துட்டு இருந்தது. இன்வெர்டர் எடுக்கவே இல்லை. குறைந்த மின் அழுத்தம். ஆகவே ம.பா.வுக்குக் கை துறுதுறு. உடனேயே இன்வெர்டரை அணைத்தார். அப்படியும் சரியாகவில்லை. என்ன பண்ணறதுனு யோசிச்சுட்டு மெயினை அணைத்தார். குறைந்த அழுத்த மின்சாரமும் இல்லாமல் போக இன்வெர்டரை இப்போப் போடலாம்னு போட்டார். ஆனால் அதுக்கு ஒரே ரோசம்! ஏற்கெனவே பலமணிநேரம் வேலை செய்திருந்த களைப்பும் சேர்ந்து கொள்ள, சார்ஜ் ஆகவே இல்லைனு கத்த ஆரம்பிச்சது. அது வாயை அடைக்கிறதுக்குள்ளே போறும், போறும்னு ஆக ஒருவழியாய் அது வாயை அடைச்சாச்சு. மறுபடியும் மெயினைப் போட்டுவிட்டுப் பார்த்தால் சுத்தம்! எந்த விளக்கும் குறைந்த அழுத்தத்தில் கூட எரியலை! மின்சாரம் வரலையோனு நினைச்சா பக்கத்து ஃப்ளாட்டில் வழக்கம்போல் அவங்க வைக்கிற பக்திப்பாடல்கள் தெருவையே ஓட வச்சுட்டு இருக்கு. அதனால் மின்சாரம் இருக்கு. வந்திருக்கு. ஆனால் நமக்கு இல்லை.

அக்கம்பக்கம் பார்க்கலாம்னு பார்த்தால் பக்கத்திலே ஃப்ளாட்டிலே நல்லா எரியுது. ஆனால் அவங்களுக்கு மூன்று ஃபேஸ் மின் விநியோகம். நம்ம ஃபேஸ் வேறே. எப்போவுமே நம்ம வழீஈஈஈஈஈ தனீஈஈஈ வழியாச்சே! :P அப்போ நம்ம ஃபேஸிலே போயிருக்கோ? பல விதங்களிலும் சோதனை செய்தும் அங்கெல்லாம் சம்சாரத்தோட மின்சாரம் இருக்கு, நம்ம வீட்டிலே மட்டும் நோ மின்சாரம்! சரி பக்கத்து வீடு, நம்ம வீடு மாதிரி தானே. அங்கேயும், இங்கேயும் ஒரே ஃபேஸ்தானே! உடனே பக்கத்தில் கேட்டால் மின்சாரம் வந்து அரை மணி ஆச்சு. போயிட்டுப் போயிட்டு வந்தது. இப்போக் கொஞ்ச நேரமா சரியா இருக்குனு பதில் வந்தது. இன்னும் யாரைக் கேட்கணும்? உடனேயே தொலைபேசி மூலம் மின் வாரியத்தைத் தொடர்பு கொண்டால் அவங்க குறைந்த மின் அழுத்தம் இருந்தது உண்மைதான் என்றும் “ட்ரிப்பிங்” இருந்ததாகவும் அதைச் சரி செய்துவிட்டோம் என்றும் இப்போ மின்சாரம் வந்திருக்கணுமே, எதுக்கும் பக்கத்தில் இன்னொரு தரம் சோதனை செய்யுங்கனு பதில் வந்தது. மறுபடியும் எல்லாச் சோதனைகளையும் செய்துட்டு நம்ம வீடுதான் அபூர்வ ராகம் பாடுதுனு புரியவர மறுபடியும் தொலைபேசித் தெரிவித்தோம். அப்புறமா வந்து பார்த்த மின்வாரிய ஊழியர் மீட்டரிலிருந்து செல்லும் வயர் அறுந்து போயிருப்பதாய்க் கூறிவிட்டு அதைச் சரி செய்தார். அப்பாடானு நிஜமாவே இருக்கு இப்போ!

7 comments:

  1. ம்ம். கஷ்டம்தான். கீதா எதாவது பெயர்ச்சியான்னு பார்த்துக்கோங்கோ/.
    என்ன பண்ணீங்களோ தண்ணீர் வராமல். நல்ல வேளை மோட்டார் பிரச்சினை இல்லாமல் ப்ளம்பிங்கோட போச்சு!!!!

    ReplyDelete
  2. வாங்க வல்லி, மோட்டார் பிரச்னை எல்லாம் போன வருஷம் இருந்தது. அதை எழுதினால் வாழ்நாள் பூராவும் எழுதலாம். :)))))))) பெயர்ச்சி எல்லாம் ஒண்ணும் இல்லை, இது மனிதர்கள் செய்த கவனக்குறைவு. முதல்லே ப்ளம்பரோட கவனக்குறைவினால் ஒருவாரம் அவதி, அப்போவும் சொல்லிட்டே இருந்தேன்! அடுத்தது இவரோட கவனக்குறைவினாலே ஒரு அரை நாள் அவதி.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா!

    ReplyDelete
  3. தலைவிஇஇஇஇஇஇஇஇஇஇ ;))

    முதல்வன் படத்துல வர அர்ஜூன்க்கு கூட இந்த மாதிரி எல்லாம் பிரச்சனை வரல தலைவி...உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் வருது...மக்களுக்காக அதுவும் தொண்டர்களுக்காக பாடுபடும் உங்களுக்கு போயி இப்படி எல்லாம் வருதுன்னு நினைக்கும் போது தான் கவலையாக இருக்கு ;(

    ReplyDelete
  4. @கோபி, சவாலே, சமாளி என்னும் தாரக மந்திரத்தை மறக்கவே கூடாது! :)))))))) இதெல்லாம் ஜுஜுபி!!!!!

    ReplyDelete
  5. //அப்புறம் திறக்க மறந்திருக்கேன்னு அவர் வழிய, அது தெரிஞ்சும் எதுக்குக் குழாயைக் கட் பண்ணினாருனு நான் கேட்க இப்போ ப்ளம்பரும் வழியறதில் சேர, தண்ணீரோடு சேர்ந்து எல்லாமே வழிந்தது.//

    :)))

    இவ்வளவு சிரமத்தையும் நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு. ஆனா நகைச்சுவையா தந்திருக்கீங்க! 'இடுக்கண் வருங்கால் நகுக'ங்கிறது இதானோ? பாவம் அம்மா நீங்க :(

    ReplyDelete
  6. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  7. செய்தி வளையம், மிக்க நன்றி, விடாமல் துரத்தறீங்க, எங்க வீட்டு மூஞ்சுறைப் போல! :))))))))

    ReplyDelete