Friday, June 11, 2010

ஒரு மறந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை!


ராமாயணத்தின் கிஷ்கிந்தாவான இங்கே துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள ஒரு குகையில் சீதையின் நகைகளைக் கண்டெடுத்த சுக்ரீவன் பாதுகாத்து வைத்ததாய்ச் சொல்லப் படுகிறது. இலங்கைக்குச் செல்லத் திட்டம் வகுக்கும்போது ஸ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணனுடன் தங்கி இருந்ததாய்ச் சொல்லப் படும் குகையும் இங்கே உள்ளது. அருமையான குகை. குளிரூட்டப் பட்ட இடம் போல் இயற்கையின் குளுமை அங்கே தனி ஆட்சி செலுத்துகிறது. இரு பக்கமும் துங்க-பத்ரா ஓட நடுவே உள்ள குகையில் இருந்து எதிரே பார்த்தால் வாலி ஒளிந்திருந்ததாய்ச் சொல்லப் படும் குகை தென்படும். இங்கே இருந்து அம்பு போட்டால் விழும் தூரம் அது எனவும் ராமர் எங்கே இருந்து அம்பை எய்திருக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். எதிரே உள்ள வாலி குகைக்குச் செல்லக் கீழே இறங்கி ஆற்றைப் படகில் கடந்து செல்லவேண்டும். அந்தப் பக்கம் எதிரே தென்படும் மலைகளை ரிஷ்யமுகம் எனவும், மதங்க பர்வதம் என்ற பெயராலும் அழைக்கின்றனர். இப்போது சாம்ராஜ்யம் எப்படி யாரால் ஏற்படுத்தப் பட்டது என்பதைப் பார்ப்போமா?

முஹமது பின் துக்ளக்கின் ஆட்சி நடந்த காலம். ஹொய்சளர்களின் ஆட்சி நடந்த காலம். .மூன்றாம் வல்லாளனுடைய படையின் ஒரு பகுதிக்குத் தலைவனாக சங்கமன் என்னும் (குறும்பர் இனத்தைச் சேர்ந்தவன் எனச் சிலரால் கூறப்படுகிறது.) வீரன் இருந்தான். அப்போது நாட்டில் நடந்து கொண்டிருந்த அந்நியர் ஆதிக்கத்தை ஹொய்சளமும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தது. அவ்வளவு ஏன் தத்தளித்துக்கொண்டிருந்தது என்றும் சொல்லலாம். வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தாலும் அந்நியர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு முன்னால் ஹொய்சள வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சங்கமனின் இரு வீரர்களும் படையில் இருந்தனர். அவர்களும் முழு உத்வேகத்துடன் தென்னாட்டை ஆக்கிரமிக்க வரும் அந்நியர்களை எதிர்த்தனர். தக்ஷிண பீடபூமியில் துக்ளக்கின் அதிகாரத்தை எவ்வாறேனும் குறைக்கவேண்டும் என்பதே அவ்விரு இளைஞர்களின் நோக்கம். ஆனால், அந்தோ! என்ன பரிதாபம்! இரு இளைஞர்களும் சிறை பிடிக்கப் பட்டனர்.

சிறை பிடிக்கப் பட்ட இளைஞர்கள் டில்லிக்குக் கொண்டு செல்லப் பட்டு கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டு அடிமைகளாக நடத்தப் பட்டனர். ஆனால் இளைஞர்களின் வீரத்தையும், விவேகத்தையும் கண்ட டில்லி சுல்தான் அவர்களைத் தென்னாட்டைக் காக்கவேண்டி தெற்கே அனுப்பினான். தென்னாட்டுக்கு வந்த இரு இளைஞர்களும் அப்போது சுல்தான்களை எதிர்த்துப் புரட்சி செய்து கொண்டிருந்த வல்லாளனால் தோற்கடிக்கப் பட்டனர். இளைஞர்கள் அதற்கு முன்னரே தங்கள் மதம் மாற்ற அடையாளங்களைத் துறந்திருந்தனர். எனினும் வல்லாளனால் தோற்கடிக்கப் பட்டதில் மனம் வெறுத்துக் காட்டில் சுற்றித் திரிந்தனர். ஒரு நாள் ஹரிஹரன் கனவில் ரவணசித்தர் தோன்றி மதங்க மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் வித்யாரண்யரின் உதவியையும் வழிகாட்டுதலையும் கேட்குமாறு கூறி மறைந்தார்.

6 comments:

  1. நம்மிடம் தான் இவ்வளவு ஹிஸ்டரி!! ஹம்பி விருபாக்ஷா கோவில், ஹசாரா எல்லாம் எழுதணும்.badami red sand stone temples , pattadakal கோவில்களை பற்றியும் எழுதுவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.
    ஹாளேபீடு,பேலூர் ஹொய்சலா ஆர்கிடெக்சர் எல்லமே அழகு தான் .
    Golden chariot selctive ஆ இருந்தாலும் வேண்டியதை கவர் பண்ண்றா.அதுல போயிட்டு அப்புறமா வயத்துல ஈர துணியை போட்டுக்கலாம்:))

    ReplyDelete
  2. வாங்க ஜெயஸ்ரீ, இதுக்கே எவ்வளவு விஷயம் சேகரிக்க வேண்டி இருக்கு! அதிலேயும் இதைப் பத்தித் தேடப் போய் வித விதமான செய்திகள், ஆச்சரியமான, அதிசயமான செய்திகள் எல்லாம் கிடைக்குது. எல்லாத்திலேயும் ரொம்பவே ஆச்சரியமான விஷயம் ஆதிசங்கரர் என்ற பெயரிலே மூணு பேர்னு அபிதான கோசம் சொல்றது தான். தினமும் அபிதான கோசத்திலே இருந்து ஒவ்வொரு புது விஷயம் கிடைக்குது. :)))))) அபிதான சிந்தாமணி இணையத்திலே கிடைக்கலை!

    ReplyDelete
  3. அபிதான கோசம் 3 சங்கராச்சாரியர்களைப் பத்தி சொன்னாலும் ஆதி சங்கரர் என்று 4 மடங்களையும் ஸ்தாபனம் பண்ணினவரைத்தானே சொல்லறது?ஆனா அவர் சிதம்பரத்தில் பிறந்தவர்னு போட்டிருக்கு!!?? அதில் இரண்டாவராக சொல்லி இருப்பவரைத்தான் சிவகுரு என்பவரின் மகனாக சொல்லியிருக்கிறது. எனக்கு தெரிந்தது, புரிந்து கொண்டிருந்தது எல்லாம் சிவகுரு ஆர்யாம்பா தம்பதிகளுக்கு பிறந்தவர் தான் master of adhvaitha philosophy, ஆதி சங்கரர்னு .மண்டன மிஸ்ரரை வாததிதில் வென்று ஸரஸ வாணியை வாதிட்டு ஸ்ருங்ககிரியில் அவள் அமர அங்கே மடத்தை ஸ்தாபித்தவர் இல்லையோ? அபிதான கோசம் தகவல் குழப்பமாக இருந்தது!!

    ReplyDelete
  4. அபிதான கோசம் படிச்சுட்டுக் குழம்பினது என்னமோ உண்மைதான். கடைசியிலே காமகோடி மடத்தின் பக்கங்கள், சிருங்கேரி மடத்தின் பக்கங்கள்னு ஆராய்ச்சி பண்ணி, தெய்வத்தின் குரலிலும் தேடிட்டு, சிதம்பரத்தில் பிறந்த சங்கரர் அபிநவ சங்கரர்னு புரிய வந்தது. இவரே ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் பிறந்திருக்கணும். இவருக்கும் ஆதிசங்கரருக்கும் (காலடி) குழம்பிக்கிறாங்க எல்லாரும்னு குருரத்னமாலையும் சொன்னது. எனக்கு இப்போத் தெளிவாய் விட்டது ஜெயஸ்ரீ, உங்களைக் குழப்பினதுக்கு மன்னிக்கணும்.

    விஷயம் என்னன்னா, அபிநவ சங்கரரும் காஷ்மீருக்குப் போய் சர்வக்ஞ பீடம் ஏறி இருக்கார். இது மாதிரி சில சம்பவங்கள் (அதை என்ன என்னனு பார்த்துண்டிருக்கேன்) ஒண்ணா வரதிலே குழப்பம் மிகுந்திருக்கு.

    ReplyDelete
  5. நம்ம முன்னோர்கள் கொடுத்த தகவல்களை சரியா நாம பராமரிக்கவில்லை அதுதான் குழப்பத்திற்கு காரணம்

    ReplyDelete
  6. உண்மைதான் எல்கே, இந்தத் தகவலை எல்லாம் உறுதிப் படுத்திக்க குரு ரத்னமாலாவையும், தெய்வத்தின் குரலையும் திரும்பத் திரும்ப குடைஞ்சேன். ஒரு வழியாப் புரிஞ்சது.

    ReplyDelete