இந்த வித்யாரண்யரைப் பற்றிய பல கதைகள் இருக்கின்றன. என்றாலும் அவர் ஒரு ஸ்ரீவித்யா உபாசகர் என்பதிலும் தேவியை ஆராதனை செய்தவர் என்பதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்தே இல்லை. இவர் பூர்வாசிரமப் பெயர் மாதவர் என்றும், சிலர் இவருடன் படித்த சீடர்களில் ஒருவரே மாதவர் என்றும் சொல்கின்றனர். என்றாலும் எவரும் இவருடைய தவத்தையும், சீலத்தையும், உறுதியையும், மறுக்கவில்லை. முதலில் காஞ்சி மடத்தின் மூலம் தெரிந்து கொண்ட வரலாற்றைப் பார்க்கலாம். மற்றவற்றில் சிறிதே மாற்றம் இருக்கும்.
வித்யாரண்யர் பற்றிய கதைகள் பலவிதமாய்க் கூறப் படுகின்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தண குலத்தவர் எனவும், திருமணம் ஆனவர் எனவும் சிலர் கூற்று. வறுமையில் வாடிய அவர் காஞ்சி மடத்தில் வேத, வேதாந்தங்களைப் படித்து வந்ததாகவும் கூறுவார்கள். தன்னுடைய வறுமையைப் போக ஸ்ரீவித்யா வழிபாடு செய்து வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு இப்பிறவியில் செல்வம் கிட்டாது எனவும், அடுத்த பிறவியில் தான் செல்வம் கிட்டும் எனவும் அன்னை கூறியதாகவும், சொல்கின்றனர். ஆனால் செல்வம் வேண்டும் என ஆசைப்பட்ட அவரோ அன்னையைக் குறித்துத் தவம் இருந்தார். இந்தப் பிறவியிலேயே தனக்குச் செல்வம் வேண்டுமெனப் பிரார்த்தித்து வந்தார். தேவியோ முன் பிறவியில் வித்யாரண்யர் செய்த பெரும்பாவத்தினால் இப்பிறவியில் அவருக்குச் செல்வம் கிடைக்காது, தானம் என்பதே செய்ததில்லை முன் பிறவியில், அதன் பலனை அநுபவித்தே ஆகவேண்டும் என்கிறாள். கோபம் கொண்ட மாதவர் தான் வழிபட்டு வந்த ஸ்ரீசக்கரத்தை எரித்ததாயும், பாதி உடை எரிந்த நிலையில் அவர் முன் தேவி தோன்றியதாகவும் கூறுகின்றனர். அப்போதும் தேவி அடுத்த பிறவியில் தான் கேட்டது கிடைக்கும் எனக் கூறி மறைகின்றாள். ஆனால் வித்யாரண்யருக்கோ இந்தப் பிறவியிலேயே எப்படியேனும் வாங்கிவிடவேண்டும் என்ற ஆவல். என்ன செய்யலாம்????
நாட்டில் அப்போது ஒரு கஷ்டமான கால கட்டம் கடந்து கொண்டிருந்தது. முகலாயர் கண்களில் பட்ட கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி அதன் செல்வத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தனர். அப்போது வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கு முகலாயர் கூட்டம் கூட்டமாய்ப் படை எடுத்து வந்து கொண்டிருந்தனர். இதனாலும் கிட்டத் தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கும் மேல் சிருங்கேரியில் மடாதிபதிகள் எவரும் சரியாக இல்லாமலும் சநாதன தர்மம் கொஞ்சம் கொஞ்சமாய் க்ஷீணித்துக்கொண்டிருந்தது. காஞ்சி மடாதிபதியாக அப்போது இருந்தவர் வித்யாதீர்த்தேந்திர சரஸ்வதி என்பவர்,. அவரிடமே மாதவன் என்ற பூர்வாசிரமப் பெயர் பெற்றிருந்த வித்யாரண்யரும், சாயனர் என்பவரும் படித்துக் கொண்டிருந்தார்கள். சிருங்கேரி மடத்தின் நிலைமையையும், அந்நியர் படை எடுப்பையும் உணர்ந்த காஞ்சி மடாதிபதி மாதவனுக்கு வித்யாரண்யர் என்ற பெயரை அளித்து சிருங்கேரிக்கு அனுப்புகிறார். இங்கே வந்த வித்யாரண்யரோ தவம் செய்வதில் ஈடுபட்டுக் கலைமகளிடமும், அலைமகளிடமும் செல்வம் வேண்டிப் பிரார்த்திக்கிறார். சந்நியாசம் என்பது மறுபிறவிக்குச் சமானம் என்பதால் அலைமகளும் அவருக்கு அளப்பரிய செல்வத்தை அளித்துச் செல்கிறாள்.
திடீரென ஏற்பட்ட இத்தனை செல்வத்தையும் கண்ட வித்யாரண்யர் திகைத்துப் போய் என்ன செய்வது என்று யோசிக்கிறார். பின்னர் சநாதன தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டவேண்டி இந்தச் செல்வத்தைப் பயன்படுத்த எண்ணிக் கலைமகளிடம் அநுமதி வேண்ட, அவளோ இப்போது அவசரம் வேண்டாம், இப்போது நிர்மாணிக்கும் அரசு வெகுகாலம் நிலைத்து நிற்காது. ஆகவே அடுத்த பிறவியில் முயலவும் என்கிறாள். ஆனால் வித்யாரண்யரோ பிடிவாதமாகத் தன் விருப்பம் நிறைவேறப் பிரார்த்தனையும் தவமும் செய்ய அவ்வாறே ஆசி அளித்து மறைகிறாள் கலைமகள். செல்வமும், வித்யையும் சேர்ந்திருக்கிறது. ஆனாலும் வித்யாரண்யரால் நாட்டை ஏற்படுத்தி ஆள முடியாதே? அவரோ துறவறம் மேற்கொண்டிருக்கிறாரே? என்ன செய்யலாம்? யாரிடம் போய்க் கேட்பது?
ஒரு நாள் அந்தக் காட்டில் மாடு, ஆடுகளை மேய்த்து வந்தான் ஒருவன். பார்க்க என்னமோ வாட்டம் சாட்டமாய்ப் போர்வீரன் போல் இருந்தான். ஆனால் மாடு மேய்க்கிறானே?
Thursday, June 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
amazing historyஇல்லையா!ரொம்ப இன்டெரெஸ்டிங் ஆ இருக்கு . இந்த topic என்னையும் மறுபடி ""புராணம் ""படிக்க வைத்தது. சங்கராச்சாரியார் குழப்பம் இப்போ தேவலை. வித்யாசங்கர் காஞ்சி ல ஆதி சங்கராச்சாரியர் (509 B C)கடைசி காலத்துல இருந்ததையும், அவர் 7 வயது குழந்தையை ஆச்சாரியராக்கவும் தனக்கு பின் காமாக்ஷியை வழிபடவும் என்று நியமித்து கோடலி ஷாரதா பீடாதிபதியின் மேற்பார்வையில் இருக்கும்படி செய்தார் என்பதை ignore பண்ணிவிட்டதாக ஒரிடத்தில் படித்தேன்.
ReplyDeleteவித்யாரண்யர் சமாதி 118 வயசுல போலிருக்கு. ? 14
அப்பா அம்மா மயனாச்சரியர் ஸ்ரீமதி தேவி, இருந்தது - (கன்னட காரர் தான் போல இருக்கு ) பம்பாக்ஷேரத்திரத்தில் (MODERN HUMPHI) சயனா, போகநாதா என்று சகோதரர்களும், சிங்களானு சகோரதரியும். அப்பா இவா 3 பேரையும் சங்கரானந்தா (குடலி) கிட்ட கொண்டு போய் விட அவர் இவாளை காஞ்சியில் வித்யாதீர்த்தர் கிட்ட அனுப்பறார். இவர் தான் வியத்யாசங்கரரானு தெரியல்லை . -அங்க மாதவர் என்கிற வித்யாரண்யர் வேங்கடனாதர்யா எங்கிற ஸ்ரீ வேதாந்த தேசிகருக்கு( ஸ்ரீரங்கம் ) நண்பராகிறார். இவா எல்லாம் மாலிகாஃபூர் படையெடுப்பில் நாடு மோசமா இருந்த சமயத்துல இருந்தவா.குடலி மடத்தில வித்யா சங்கரர் முக்கியமான சுவடிகளை பாதுகாக்க வேண்டி தலை மறைவாகின சமயம் மாதவரோட தம்பியோட இவர் சிருங்கேரில போய் மடத்தை நடத்தறா.இந்த ஸ்ருங்கெரி மட தகவல்களும்( 8 CENTURY )அப்ப வாழ்ந்த சங்கராச்சாரியரை பத்தி சொல்கிறது ? CHIDAMBARAM ORIGIN!
பாரதீதீர்த்தர் 1328ல மடாதிபதியாகி தன்னை வித்யா சங்கரரின் SUCCESSOR நு இவா ரெண்டு பரும் மடத்தை ஸ்ருங்கெரில மாத்தி நடத்தறா. 1380 ல அவர் சமாதியானப்புறம் மாதவர் பீடதிபதிஆகி, ராஜகுருவா விஜய நகர பேரரசை நிர்மாணிக்க உடந்தையா இருந்தார் . ORIGINAL குடலி மடத்துல வித்யாசங்கர் உயிரோட இருக்கறதை நம்புகிறவர்கள் வேற ஒருத்தரை மடாதிபதியாக்குகிறார்கள்.அது வேற கதை! நீங்க சொல்லறாப்ல நிறைய இருக்கு !! ஈஸ்டெர்ன் ட்ரெடிஷன் ஆர்க், சங்கராச்சரியார் pdfம் இன்டெரெஸ்டிங்க் தான் Mrs shivam.
ஓஹோ, பிரமாதம் ஜெயஸ்ரீ, இப்போத் தான் அங்கே போய் பிடிஎஃபைத் திறந்து ஒரு பார்வை பார்த்தேன், நிஜமாவே இண்ட்ரஸ்டிங் தான்! அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteநான் வேற மாதிரி படிச்சிருக்கேன் ??
ReplyDeleteஎதைச் சொல்றீங்க எல்கே? வேறே மாதிரி படிச்சது? வித்யாரண்யர்?? வித்யாரண்யர் தமிழ்க் காரர்னும் மாதவன் என்ற பெயர்னும் ஏற்கெனவே கல்யாணம் ஆனவர் என்றும் வறுமை தாங்காமல் தவ வாழ்வு மேற்கொண்டு அம்பாளிடம் யாசிப்பதாகவும் நானும் படிச்சிருக்கேன். அது பத்தியும் எழுதுவேன், கொஞ்சம் பொறுங்க. வேறு ஒரு வேலை முடியாமல் பிரச்னை பண்ணுது. அதை எப்படியாவது முடிக்கணும்! :))))))))))
ReplyDeleteதங்களின் வரலாற்றுத் தகவல்கள் பிரமிக்க வைக்கிறது. பணி தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க தக்குடு, நல்வரவு. நீங்க இங்கே வந்தது ஆச்சரியம்னா, பாராட்டு அதைவிட ஆச்சரியம். இந்தப் பாராட்டு நீங்க ஜெயஸ்ரீக்குத் தானே??? :)))))))))))))
ReplyDelete//இந்தப் பாராட்டு நீங்க ஜெயஸ்ரீக்குத் தானே??? :)))))))))))))// rendu peerukkumthaan...:)
ReplyDeleteஓஹோ, புல்லுக்கும் ஆங்கே பொசிந்தமைக்கு நன்றி தக்குடு அவர்களே. :D
ReplyDeleteநீங்க ரெண்டு பேருமே நல்ல விஷய ஞானம் உள்ள நெல்லுதான், தக்குடுதான் சாதாரண பதர்...:)
ReplyDelete