நானும் பயணக்கட்டுரையைத் தொடரணும்னு தான் நினைக்கிறேன். ஆனால் இந்தத் தொண்டரடிப் பொடிங்க விட்டால் தானே? ஏற்கெனவே என்னோட மொக்கைகளுக்கே ஆதரவுனு சொல்லிட்டு எல்லாம் போய்ப் பதுங்கிட்டாங்க! இப்போ நேயர் விருப்பத்தை நிறைவேற்றலைனா அப்புறம் தலைவி பதவிக்கே கோவிந்தாவாயிடுமே! பதவி சுகத்தை அனுபவிச்சுட்டு விட்டுக் கொடுக்க முடியுமா?? அதுவும் இப்போக் கொஞ்ச நாளா உ.பி.ச.வும் இல்லாமல் தனியாப் போராட வேண்டிப் போச்சு! போன பதிவிலே அம்பியோட திடீர் தொலைபேசி அழைப்பைப் பத்திச் சொன்னேனா? மறு நாளே பாருங்க, யார் கூப்பிட்டிருப்பாங்கனு நினைக்கிறீங்க? கடைசியிலே வரும் அது! ஆனால் பேசி முடிக்கும்போது சொன்னார் பாருங்க ஒரு பஞ்ச் டயலாக்! அப்போ உடனேயே இதைக் கட்டாயமாப் பதியணும்னு முடிவு பண்ணிட்டேன். அது என்னனு கேட்கிறவங்க, கொஞ்சம் பொறுங்க!
பொங்கல் அன்னிக்கு மத்தியானமா, ஆற்காட்டாரின் திடீர் வரவினால் சும்ம்ம்ம்மா உட்காரவேண்டி இருந்தது. புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு, எதைப் படிக்கலாம் என ஒரு சிறு பாட்டி மன்றம், சீச்சீ, பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தேன். மனசுக்குள்ளே என்னமோ தொலைக்காட்சிக்கே ஓட்டு விழ, தொலைக்காட்சி பார்க்கலாமா? நமீதாவும், நவ்யா நாயரும் கொண்டாடும் பொங்க"ளை"ப் பார்க்கணுமேனு அலுப்பாவும் இருந்தது. காமெடி திரையில் வழக்கம்போல் அறுவைகளே. திடீர்னு தொலைபேசி ஒலிக்க எடுத்துப் பேசினால், பேசினவரும், அம்பியைப் பத்தி நான் எழுதின பதிவைப் படிச்சுட்டுப் பேச எண்ணி இருக்கார். யாருனு சொல்லலை. ஆனால் எனக்குப் புரிஞ்சுது யாருனு. அவரோ என்னமோ எனக்குப் புரியாதபோல் பேசறார். சரினு நானும் காட்டிக்கவே இல்லை. என்ன திடீர்னு கேட்டதுக்கு ரங்கமன்னாரைப் படிச்சேன்னு பதில் வந்தது. அப்புறமா அவருக்கு சந்தேகம் தான் யாருனு எனக்குத் தெரியுதானு? நான் யாருனு புரிஞ்சுட்டுத் தான் பேசறீங்களானு கேட்டாரே ஒரு கேள்வி! ஆப்பீச்சு வேலையிலே இப்படிக் கூப்பிடறது, வேறே யாராய் இருக்கப் போகுதுனு நானும் உடனேயே பதில் சொல்லவும், மனுஷனுக்கு இப்போத் தான் சந்தேகம் தீர்ந்தது.
அப்புறமா அவங்க வீட்டில் வளர்க்கும் பாம்புகள், தவளைகள், எலிகள், பூனைகள் என அவர் ஆரம்பிச்சு உதார் விட, நாம என்ன சளைத்தவங்களா?? இதோ பார்சல் அனுப்பறேன்னு சொன்னதும் கொஞ்சம் நிறுத்திக்கிட்டார். அப்புறமா அபி அப்பா, உங்களைப் பத்தியும் ரொம்ப விசாரிச்சார். சொன்னேன், உங்களைப் பத்தியும். அவரோட குழந்தையைப் பத்தியும், அவளைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கிறதையும் பத்தியும் சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்தது இந்தப் பகுதி தான். :)))))))) அதுக்கப்புறம் தான் வந்துச்சு பாருங்க பஞ்ச் டயலாக். என்னங்க இன்னிக்கு இவ்வளவு நேரம் பேசறீங்கனு கேட்டேனா?? என்ன சொன்னார் தெரியுமா? "மேடம், நான் என்ன அம்பினு நினைச்சீங்களா? மாமனார் தொலைபேசியிலே பேசறதுக்கு? இது என்னோட சொந்த தொலைபேசிங்க! அதிலே இருந்து தான் பேசறேன்"னு சொன்னாரே பார்ப்போம்! யாருனு கண்டு பிடிச்சுச் சொல்லவேண்டியது அம்பியோட வேலை. நான் சொல்லப் போறதே இல்லை. என்னோட வேலை கடைசி பஞ்ச் டயலாக் எழுதறதுக்காகப் பதிவு எழுதினது மட்டுமே! கண்டு பிடிங்க அம்பி! அப்பாடா, தலைப்பு என்ன வைக்கிறதுனு மண்டை காய்ஞ்சுட்டு இருந்தது. கண்டு பிடிச்சுட்டேன்.
அர்ச்சனா அப்பா, ஒரு வாரம் ஆனாலும் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்திட்டேன். நாராயணா! நாராயணா!
Tuesday, January 20, 2009
Wednesday, January 14, 2009
ரெங்க ராமனா? ரெங்கமன்னாரா?? மாமனார் வீடே சொர்க்கம்!
ஹிஹிஹி, ஹெஹ்ஹே, ஹெஹ்ஹே! எல்லாம் நம்ம அம்பியைப் பத்தித் தான்! நேத்திக்குப் பாருங்க, திடீர்னு சீக்கிரமே brunch முடிச்சுட்டு, (breakfast+lunch=brunch) பேப்பரைப் புரட்டலாமா? இல்லைனா வந்திருக்கிற புத்தகமா? இல்லை கணினியா? இல்லை தொலைக்காட்சியா? இல்லைனா என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேனா?? அப்போப் பார்த்து, தொலைபேசி அழைப்பு! எடுத்தால் யாருங்கறீங்க?? என்ன ஆச்சரியம்? என்ன ஆச்ச்ச்ச்சரியம்?? வழக்கமா சென்னைக்கு வந்தால் ஓசைப் படாமல் வந்துட்டு, ஓசைப்படாமல் திரும்பியும் போயிட்டு எப்போவோ பதிவு எழுதும்போது மட்டுமே அதைக் குறிப்பிடும் அம்பிங்க தொலைபேசியிலே. என்னடா இது?? பெரிய, பெரிய ஆளுங்க எல்லாம் நம்மளை நினைப்பு வச்சுட்டுக் கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்களேனு ஒரே பயமாப் போச்சு! என்ன பேசறது, எப்படிப் பேசறதுனு ஒண்ணும் புரியலை!
அம்பியா, அவர் பாட்டுக்கு, என்னமோ அவரோட குரலினிமை நமக்குப் புரியாத மாதிரி அல்ட்டிக்கிட்டே இருக்கார். அப்புறமா கேட்டேன் பாருங்க ஒரு கேள்வியை! என்ன மாமனார் வீடா? மாமனார் தொலைபேசியானு! அசடு வழிய ஆமாம்னு ஒத்துக்கிட்டார் அம்பி. எப்படித் தெரியும்னு வேறே ஆச்சரியம்! அதான் இத்தனை நேரம் பேசறீங்களே! உங்க தொலைபேசினாலோ, பங்களூரில் இருந்து பேசினாலோ உடனேயே வச்சுட மாட்டீங்க?னு ஒரு கேள்வியைக் கேட்டேன், பதிலே இல்லை! அதிசயமாப் பொங்கல் வாழ்த்தெல்லாம் சொல்லி, (ம்ம்ம்ம்ம்ம் ஒரு தீபாவளி, புது வருஷம், பிறந்த நாள் வாழ்த்துக் கூடச் சொல்லமாட்டார்) திடீர்னு எனக்கு வந்த அதிர்ஷ்டத்திலே பிரமிச்சுப் போயிட்டேன். அதிலேயும் எதுக்குக் கூப்பிட்டாருனு நினைக்கிறீங்க. இந்த முறையும் அம்பத்தூருக்கு வரலைனு சொல்றதுக்காக. அவர் எங்கே நம்ம வீட்டுக்கெல்லாம் லேசிலே வரப்பட்ட மனுஷனா??? நானும் எதிர்பார்க்கலை, விட்டுட்டேன்! அடுத்த முறைனு சொல்லி இருக்கார். அதுவும் தினத்தந்தியிலே சிந்துபாத் முடிஞ்சாத் தான் நிச்சயம்னு தெரிஞ்சு போச்சு! பெரியவங்க கூப்பிட்டுப் பேசினதே பெரியவிஷயம்னு நினைச்சேன். அதையே நினைச்சுட்டு இருந்தால், என்ன அதிசயம்?? இன்னிக்குக் காலம்பர வழக்கமா ஆறரை மணிக்கு வரவேண்டிய வேளுக்குடி ஏழு மணிக்கு வந்தார்.
வந்ததும் என்ன சொன்னார்னு நினைச்சீங்க?? மாமனார் வீட்டிலே இருக்கிறது தான் சொர்க்கம்னு முதமுதல்லே கண்டு பிடிச்சதே அந்த ரங்கமன்னார் தானாம். எந்த ரங்கமன்னார்?? எல்லாம் பாற்கடலிலே பள்ளி கொண்டிருக்காரே அவரே தான்! பூவிருந்த வல்லியிலே வல்லியைக் கல்யாணம் செய்துட்டு அங்கேயே மாமனார் வீட்டோடு தங்கிட்டாராம் ரங்கமன்னார். சரிதான், ரங்கன்னு பேர் வச்சாலே இப்படித் தான் போலிருக்குனு நினைச்சேன். நீங்க என்ன சொல்றீங்க?? பெருமாளே இப்படி மாமனார் வீடே கதினு இருந்தால் அம்பி என்ற ரெங்கராமன் வேறே என்னத்தைச் செய்ய முடியும்? அதான் அம்பி மாமனார் வீட்டுக்கு வந்திருக்கார் லீவுக்காகத் தானே, பெருமாள் மாதிரி இல்லையேனு நினைச்சுக்கிட்டேன். அம்பி கல்யாணத்துக்கு நான் மொய் எழுதலையாம், அதனால் எங்க வீட்டுக்கு வரலைனு புரளி கிளப்பிட்டு இருக்கார். அவரோட கல்யாணத்துக்கு எனக்கு வந்து சேரவேண்டிய ரிவர்சிபிள் புடவையோ, போன வருஷம் தீபாவளிக்கு வரவேண்டிய நகாசு பட்டுப் புடவையோ இன்னும் வந்து சேரவே இல்லை. என்னத்தை மொய் எழுதறது? கணேசனுக்குக் கல்யாணம்னால் முன்னாலேயே சொன்னால், யு.எஸ். போக டிக்கெட் எடுத்து வச்சுப்பேன், வசதியா இருக்கும்னு சொல்லி வச்சிருக்கேன். இப்போ கணேசன் கல்யாணத்துக்காக வாங்கற பரம்பரா பட்டும் சேர்ந்து மூன்று புடவையா வரணும் அம்பி! நினைவில் இருக்கட்டும்.

Sunday, January 11, 2009
அக்கிரமமா இல்லை???
என்னவோ போங்க, எங்கே பார்த்தாலும், எப்போப்பார்த்தாலும் ஒரே சண்டையாவே இருக்கு. கணினியிலே தான் கூகிளுக்கும், யாஹூவுக்கும் சண்டை நடந்தது.
மைக்ரோ சாஃப்ட் உதவி செய்யறேன்கற பேரிலே வேடிக்கை பார்த்துட்டுக் கை கொட்டிச் சிரிச்சது எல்லாம் நடந்துச்சு.
இப்போ க்ரோம் ப்ரவுசருக்கும், எக்ஸ்ப்ளோரருக்கும் சண்டை! இந்த அமளியிலே நெருப்பு நரி, தான் பாவம், தானுண்டு, தன்னோட நீட்சிகள் உண்டுனு தேமேனு இருக்கு. இதுதான் போகட்டும்னு தொலைக்காட்சியைப் பார்த்தால் அங்கேயும் ஒரே சண்டைமயம். எந்தப் படத்தைப் பார்த்தாலும் சண்டை தான். விஜய்-அஜீத் ரசிகர்கள் சண்டையாம், வடிவேலு-விவேக் ரசிகர்கள் சண்டையாம், என்னத்தைச் சொல்றது? எங்கே போய் ஆத்திக்கிறது இந்தக் கஷ்டத்தை எல்லாம். விளம்பரமாவது பார்க்கலாம்னு பார்த்தா அதிலேயும் ஹார்லிக்ஸுக்கும், காம்ப்ளானுக்கும் ஒரே சண்டை, அடிதடி,
ஹார்லிக்ஸ் சீப்பான பொருள் வாங்காதேனு காம்ப்ளான் சொல்ல, காம்ப்ளானிலே ஒண்ணுமே இல்லை, விலையும் அதிகம்னு ஹார்லிக்ஸ் சொல்ல, ஒரே பிரச்னைதான் போங்க! இந்த டவ் சோப்பு விளம்பரத்தைப் பார்த்தால் பாதி முகம் போதும்னு ஒரே பிரச்னை பண்ணறாங்க. பாதி முகத்தை அவங்க கிட்டக் கொடுத்துட்டு மீதி முகத்தை மட்டும் வச்சுட்டு என்ன செய்யறது? சரி, ஏதோ நம்ம வீட்டிலேயாவது சண்டை இல்லாமல் இருக்கும்னு பார்த்தால், அங்கேயும் சண்டையாப் போச்சு போங்க, நேத்திக்கு! ஒரே கத்தி சண்டை தான்! நேத்துக் காலம்பர 4-30 மணிக்கு எழுந்தேன், திருவாதிரையாச்சேனு. கூடவே ம.பா.வும் எழுந்து வந்துட்டார். உடனேயே எனக்கு வயித்தைக் கலக்க ஆரம்பிச்சது. அதுக்கு ஏத்தாப் போல பல்லைத் தேய்ச்சதும், தேய்க்காததுமாய், வாக்வம் க்ளீனரை எடுத்துட்டு எனக்கு உதவி செய்கிறேன்கற பேரிலே கணினியைச் சுத்தம் பண்ண வந்துட்டார். எனக்கு வேலையே ஓடலை போங்க! முன்னே ஒரு தரம் நான் இல்லாதப்போ இப்படித் தான் சுத்தம் பண்ணி வயர்களை எல்லாம் மாத்திட்டு, கணினியிலே எதுவுமே எடுக்காமப் போய் அப்புறமா மெகானிக்கைக் கூப்பிட்டுச் சரி பண்ண வேண்டிப் போச்சு! அதனால் இந்த முறை முன்னெச்சரிக்கை முத்தம்மாவா இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டுப் போய் நின்னுட்டேன். ஒருவழியா தர்ணா நடத்தி, போராட்டம் செய்து, ஒத்துழையாமை இயக்கத்துக்கு அறிவிப்புக் கொடுத்து, அவரை உட்கார வச்சேன்.
இது மட்டுமா?? புத்தகங்கள் எல்லாம் தாறுமாறாக் கிடக்குதே? அடுக்கி வைக்கிறேன்னு வேறே ஒரே பரிவு. நான் என்னமோ அடுக்கித் தான் வைக்கிறேன். அவர் கண்ணுக்கு அதெல்லாம் தாறுமாறாக் கிடக்குதுனு தெரியுது! அது தான் ஏன்னு புரியலை! :P அவ்வளவு தான். நான் பக்கம் பார்த்து அடையாளம் வச்சிருக்கிறதெல்லாம் ஷெல்புக்குப் போயிடும். அப்புறம் நான் தேடோ தேடுனு தேடவேண்டி இருக்கும். ஏற்கெனவே இந்த மாதிரிப் பலதடவை நடந்தாச்சு. சரிதான், இன்னிக்குச் சமையல், சாப்பாடு எதுவுமே நடக்காது போலிருக்கேனு நினைச்சுக்கிட்டேன். ஒருவழியா காபியைக் கொடுத்து அவரை உட்கார்த்தி வச்சுட்டேன். வேலையைக் கவனிச்சுட்டு, திருவாதிரைக் களியும், குழம்பும் பண்ணி முடிக்கும்போது எட்டு மணியாயிடுச்சு. ஸ்வாமி நைவேத்தியம் பண்ணிட்டு சாப்பிடக் கொடுத்தா, என்ன சொன்னார் தெரியுமா?? அவரோட சண்டை போட்டதிலே உப்பு, உறைப்பு, களிக்கு வெல்லம் எல்லாம் சரியா வந்திருக்காம். அதனாலே இனிமே தினமும் காலம்பர சீக்கிரமே எழுந்து வரப் போறாராம். இது எப்படி இருக்கு?
அக்கிரமமா இல்லை?
Saturday, January 3, 2009
திகிலூட்டும் அனுபவங்கள் தான் எப்போவுமே!
கல்யாணத்துக்காகக் கும்பகோணம் போனப்போ முதல்நாள் காலையிலேயே டிக்கெட் வாங்கிட்டுப் பின்னாடி சாயந்திரமாக் கோவிந்தபுரமும், திருவிசநல்லூரும் போனோம்னு ஏற்கெனவே எழுதி இருந்தேன் இல்லையா? மறுநாள் கல்யாணம் முடிந்ததுமே காலை ஆகாரம் சாப்பிட்டுட்டு, பக்கத்திலே உள்ள சக்ரபாணி கோயிலுக்குப் போகலாம் என்று கிளம்பினோம். 
சக்ரபாணி கோயில் ஒரு மாடக் கோயில். கும்பகோணத்திலே வேறே எத்தனை மாடக் கோயில் இருக்குனு நினைவிலே இல்லை. அடிக்கடி போகிறதில்லை, கும்பகோணத்துக்கு மட்டும் அடிக்கடி போவோம், ஆனால் கும்பேஸ்வரர் கோயில் தவிர வேறே கோயிலுக்குப் போனதில்லை. கும்பேஸ்வரர் கோயிலே சமீப காலங்களில் தான் போறோம்.
சந்நிதிக்குள்ளே நுழைய இரு வாயில்கள் உண்டு. ஒன்று தட்சிணாயன வாயில். மற்றொன்று உத்தராயன வாயில். சூரியன் பயணம் செல்லும் திசைக்கேற்ப வாயில்கள். இதற்கு முக்கியக் காரணம் சூரியன் தினமும் வந்து சக்ரபாணியை வழிபட்டுச் செல்கின்றான் என்று தான். ஒருமுறை சூரியனுக்குக் கர்வம் வந்துவிட்டதாம், தான் தான் மிக மிக அதிக ஜோதி ஸ்வரூபமாய் இருக்கின்றோம் என. மகாவிஷ்ணுவோடு போட்டி போட, அவர் தன்னுடைய சக்கரத்தை ஏவ, அந்தச் சக்கரத்தின் ஒளியின் முன்னே சூரியனே மங்கிப் போக அவன் கர்வம் அடங்கிற்றாம். பின்னர் பரமாத்மாவின் பாதம் பணிந்த சூரியனை மன்னித்தாராம் மகாவிஷ்ணு. எனினும் தினமும் தான் உதித்ததும் அவரை வணங்காமல் இருப்பதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்ட சூரியன் தட்சிணாயன காலங்களில் தென் பகுதி வாயில் வழியாகவும், உத்தராயன காலங்களில் வட பகுதி வாயில் வழியாகவும் வந்து தரிசித்துச் செல்வதாய் ஐதீகம். மற்ற வாயிலை அடைத்துவிடுவார்கள். ஒரு பக்க வாயில் மட்டுமே திறந்திருக்கும்.
உள்ளே போனால் எட்டுக் கைகளோடு திவ்ய தரிசனம் கிடைக்கும். தாயார் சுதர்சனவல்லி. சூரியனைத் தவிர, பிரம்மாவும், அக்னியும் கூட இங்கே விஷ்ணுவை வழிபட்டிருக்கின்றனர். இங்கே மகாவிஷ்ணுவுக்கு நெற்றியில் மூன்றாவது கண் உண்டு. விஷ்ணுவே சக்கர உருவில் தோன்றி சூரியனின் கர்வத்தை அடக்கியதாயும், அதனால் மூன்று கண்கள் என்றும் சொல்கின்றனர். ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர் இந்தக் கோயிலின் சக்ரபாணிக்கு. கோயிலின் பெரும்பாலான கட்டிடங்கள் நாயக்கர் காலத்தில் ஆரம்பித்து, பதினேழாம் நூற்றாண்டு வரையில் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், முக்கியச் சந்நிதியானது பிற்காலச் சோழர்களுக்கு முன்பே இருந்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
எத்தனை முறை சென்றாலும் கோயிலின் அமைப்பும், தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழியும், முன்னோர்களின் கட்டிடக் கலை அமைப்பும் கண்ணையும், கருத்தையும், மனதையும் கவரும். இந்தக் கோயிலுக்குப் போயிட்டு, கும்பேஸ்வரரையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, கல்சட்டி வாங்கிக் கொண்டு, பின்னர் அறைக்குத் திரும்பி சாமானெல்லாம் கட்டி வைச்சுட்டு, சத்திரத்தில் போய்ச் சாப்பிட்டுவிட்டுச் சொல்லிக் கொண்டு, பஸ்ஸுக்குக் கிளம்பினோம். பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டோம். எங்களோடு அம்பத்தூரிலேயே இறங்க வேண்டிய வேறே ஒரு தம்பதிகளும் அதே பேருந்துக்குக் காத்திருந்தனர். ஆனால் பேருந்து வர நேரம் ஆச்சு. என்னடானு நினைச்சுக் கவலையோட உட்கார்ந்திருந்தால் கடைசியில் பேருந்தும் வந்தது. அதிலே ஏற்கெனவே பயணிகள் இருந்தனர். சரி, இறங்கப் போறாங்கனு நினைச்சா, இல்லையாமே! நாங்க முன்பதிவு செய்து வச்சிருந்த சீட்டெல்லாம் அவங்களோடது விட மாட்டேன்னு ஒரே தகராறு. என்ன செய்யறது?? ஒண்ணுமே புரியலை!

Wednesday, December 31, 2008
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைப் பரப்பட்டும். நிம்மதியான,பாதுகாப்பான வாழ்க்கை அமையவும் வாழ்த்துகள். அனைத்துத் தரப்பினரும் எல்லா நலன்களும் பெற்று வாழவும் வாழ்த்துகள். மழை பொழியவும், மண் வளம் பெறவும், அதன் மூலம் காடுகள் வளம் பெறவும், இயற்கையை ரசிக்கவும், இயற்கையோடு இசைந்து வாழவும், மற்றவர்கள் துயரம் தீர்க்கவும் பழகுவோம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.நாடு நலம் பெறப் பாடுபடுவோம்!
Thursday, December 25, 2008
இப்போத் தான் சொல்ல முடிந்தது!
ஹிஹிஹி, இங்கேயும் பஜனை பண்ண ஆரம்பிச்சுட்டேன் என்று சிஷ்ய(கோ)கேடிங்க பல்லைக் கடிக்கிறது தெரியுது, இல்லை, இல்லை, பஜனை எல்லாம் பண்ணலை. ஏப்ரல் மாசம் பண்டரிபுரம் போயிட்டு வந்துட்டு அது பத்தி எழுத நினைச்சேன், எழுதவே முடியலை. பண்டரிநாதர் படத்தைப் போட்டு வச்சுட்டுப் பதிவே எழுதமுடியலையே அதான், ஏதாவது எழுதலாம்னு.பண்டரிநாதர் கதை எல்லாம் இங்கே சொல்லப் போறதில்லை. அது தனியா வச்சுக்கலாம்.இந்திய ரயில்வேயின் சுற்றுலாத் திட்டத்தில் செல்லும் ரயில் பயணத்தின் மூலம் நாங்க மந்த்ராலயம், நாசிக், பஞ்சவடி, த்ரயம்பகேஸ்வர் கோயில், ஷிர்டி, சனி ஷிங்கனாபூர் மற்றும் பண்டரிபுர் போனோம். மதுரையில் இருந்து கிளம்பும் இந்த ரயிலில் மொத்தம் ஏழு பெட்டிகள் இருக்கின்றன. இங்கே சென்னையில் போட் க்ளப் சாலையில் அமைந்திருக்கும் ட்ராவல் டைம்ஸ் காரர்களால் ஒப்பந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப் பட்டு பயண ஏற்பாடுகள் அமைகின்றன. ரயில்வே அமைச்சகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து இதில் செயல்படுகின்றது. மிக மிக அருமையான ஏற்பாடுகள். கட்டணமும் ஏற்கும் அளவுக்கே, அதிகமான கட்டண வசூல் என்று குறை சொல்ல முடியாது. பயணிகளுக்கென ஆறு பெட்டிகளும், பயண ஏற்பாடுகளைக் கவனிக்கும் குழுவினருக்கென ஒரு பெட்டியும், சமையல் செய்ய, சமையல் சாமான்கள், சமையல்காரர்கள், மற்றும் உதவும் ஆட்கள் இவர்களுக்கென ஒரு பெட்டியும் ஒதுக்கப் படுகின்றது. ஒரே குறை இதிலே குளிர்சாதன வசதி கொண்ட தூங்கும் வசதிப் பெட்டி இல்லாமைதான். அனைவராலும் அந்தக் கட்டணம் ஏற்கமுடியாது என்பதால் தூங்கும் வசதி கொண்ட மூன்றடுக்குப் பெட்டிகளே அனைத்திலும். குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உட்பட மொத்தம் 500 பேருக்குக் குறையாமல் பயணிக்கின்றனர்.
இதிலே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அவர்கள் கொடுக்கும் உணவு சாத்வீக உணவு. என்றாலும், வெங்காயம், பூண்டு தவிர்க்கலாம் இது புனித யாத்திரைகள் என்பதால். அதையும் நாங்கள் ஒரு ஆலோசனையாகக் கொடுத்திருக்கின்றோம். பூண்டு, வெங்காயம் சேர்த்த உணவுகளை எங்களைப் போல் பலரும் தவிர்த்தனர். காலை ஒருவேளை காஃபிக்கு டோக்கன் கொடுத்துவிடுகின்றனர். அதைக் கொடுத்துவிட்டுக் காலை காஃபி பெற்றுக் கொள்ளலாம். பின்னர் தேவைப் பட்டால் காஃபி, டீ நம் சொந்த செலவில். காலை ஆகாரமும் எளிமையாக கேழ்வரகு சேர்த்தோ, கோதுமை சேர்த்தோ உப்புமா அல்லது இட்டிலி, பொங்கல் என்று எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலேயே தருகின்றனர். மதியமும் சாப்பாடு எளிமையாக இருக்கின்றது. பின்னர் இரவு சாப்பாடும் அதேபோல். ஒரு பெட்டிக்கு இரு பாதுகாவலர் அமைப்பாளர்களே ஏற்பாடு செய்கின்றனர். ரயிலில் இருந்து இறங்கி நாம் பார்க்கப் போகவேண்டிய இடத்தின் தூரத்திற்குத் தகுந்தாற்போல் பெரிய வோல்வோ பேருந்துகள் ஏற்பாடு செய்யப் பட்டு ஒவ்வொரு பெட்டியின் எண்ணும் அந்த அந்தப் பேருந்துக்குக் கொடுத்துவிடுகின்றனர். நம் பெட்டியின் எண் உள்ள பேருந்தில் ஏறிக் கொள்ளவேண்டும். ஆகவே அடிச்சுப் பிடிச்சு ஏறிக்கணும்னு எல்லாம் கிடையாது. மேலும் தங்கப்போவது ஒரு இரவோ அல்லது ஒரு பகலோ தான் என்பதால் பெட்டி, படுக்கையை எல்லாம் ரயிலிலேயே வைத்துவிட்டுப் போகலாம். பாதுகாவலர்கள் ரயிலிலேயே இருப்பார்கள் என்பதால் பயமும் இல்லை. நாம் தங்குமிடத்துக்குப் போகும் முன்னரே அங்கே சமைப்பவர்கள், உதவியாளர்கள் போய்விடுகின்றனர். ஆகவே நாம் தரிசனம் எல்லாம் முடித்துக் கொண்டு வரும்போது உணவும் தயாராகக் காத்திருக்கும். ரயிலில் போகவேண்டிய இடங்களுக்கு ரயிலிலேயே அழைத்துச் சென்று விடுகின்றனர். இதற்கென ரயில்வே நிர்வாகம் சிறப்பு அனுமதி கொடுத்திருக்கின்றது. மற்றப் பயணிகள் யாரும் இந்த ரயிலில் ஏறவோ, இறங்கவோ முடியாத அளவுக்குக் கடுமையான கண்காணிப்பு. தண்ணீர் பிடிக்கவும், மற்றத் தேவைகளுக்காகவுமே பெரிய ரயில் நிலையங்களில் நின்றாலும், சில சமயம் சிக்னல் கிடைக்காமலும் நிற்கவேண்டி வருகின்றது. ஆனால் பயணம் செல்லும் நேரங்களில் வேகமாய்ப் போய் விடுகின்றனர்.
தங்குமிடங்கள் தான் கல்யாண மண்டபம், ஏதேனும் சத்திரம் என்று ஏற்பாடு செய்கின்றனர். இது சிலரின் செளகரியத்தை உத்தேசித்து என்றாலும், சிலருக்கு அசெளகரியமாகவும் இருக்கின்றது. அத்தனை பேரும் குளித்துக் காலைக்கடன்கள் முடித்துத் தயாராகத் தேவையான வசதிகள் இருப்பதில்லை. எங்களில் சிலர் தனியாகப் பக்கத்திலேயே இருக்கும் லாட்ஜுகளில் அறைகள் எடுத்துக் கொண்டு தங்கினோம். அமைப்பாளர்கள் மூலமும் அறைகள் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றாலும் நாமாய்ப் போனால் 500ரூ 600 ரூ இருக்கும் அறைகள் அவங்க மூலமாய்ப் போகும்போது 1,200ரூ ஆக இருக்கின்றது. ஆகவே நாங்க மொழிப் பிரச்னை இல்லாத காரணத்தால் நாங்களாகவே அறை எடுத்துக் கொண்டோம். மத்தவங்க தங்குமிடத்துக்கு அருகேயே! "பாரத தரிசனம்" என்ற பெயரில் செல்லும் இந்த ரயிலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பார்க்கும்படி வசதி செய்து கொடுக்கின்றனர். இனி நாங்கள் போன விபரம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகின்றேன். கும்பகோணம் போனதே இன்னும் முடிக்கலைனு பல்லைக் கடிக்கிறது காதிலே விழுதே, அதுவும் வரும்.
Friday, December 19, 2008
நீங்க க.கை.நா.??? இதைப் படிங்க முதல்லே!
அப்படி ஒண்ணும் பெரிசா தொழில் நுட்பம் தெரியாது தான். ஆனால் அதுக்காக ஒரேயடியா மட்டம்னும் இல்லை. என்றாலும் சில விஷயங்கள் புரியலை பதிவுகள் எழுத ஆரம்பிச்சப்போ. இந்த அம்பி பிடிவாதமா எனக்கு எதுவுமே சொல்லித் தரலை.(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஆனால் அதுக்காக மத்தவங்க சும்மா இல்லை. முக்கியமா சூடான் புலியும், உ.பி.ச.வும் நிறையவே உதவி செய்தாங்க. அதிலேயும் புலி நிறையவே உறுமிட்டுப் போயிருக்கு. ஆனால் இந்த டாடா இண்டிகாம் காரங்க உதவினாப் போல இருக்குமா என்றால் இல்லைனு தான் சொல்லணும்.எந்த வேளையில் இந்த சேவையை எடுத்துக் கொண்டேனோ தெரியலை, முதலில் எல்லாம் ஒழுங்காவே போயிண்டிருந்தது. பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் நானும் ஒரு தலைவியாக ஆகி, பிரசித்தி பெற்ற எழுத்தாளியாக மாறி இலக்கியம் படைக்க ஆரம்பிச்சதும் எங்கே இருந்தோ சதிவேலைகள் துவங்கிட்டன. முதல்லே 06-ம் வருஷம் எக்ஸ்பி ரீ இன்ஸ்டால் பண்ணதில் ஆரம்பிச்சது பிரச்னை. அப்புறமா ஒரு மாசம் இணையம் இல்லாமல், போதும், போதும்னு ஆயிடுச்சு. வாடிக்கையாளர் சேவை மையம் இருப்பது ஹைதராபாதில், சேவை கொடுப்பது சென்னையில். எங்க ஏரியாவுக்கான செர்வர் இருப்பது பக்கத்துத் தெருவில், அதுவும் நாங்க ரொம்பவே அடிக்கடி புகார் செய்யறோம்னு மாத்தினாங்க. அந்த வீட்டுக்காரர் டாடா செர்வரிலேயே அவங்க வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு நினைவா செர்வரையும் ஆஃப் செய்து வச்சுடுவார். இது தெரியாம நாங்க இங்கே லபோ திபோ னு அலறுவோம். வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொலைபேசினால் எல்லா நேரமும் எடுப்பாங்கனு சொல்லவும் முடியாது.
முதல்லே அவங்க கொடுத்த நம்பரைப் போட்டு அழைக்கணும். வரவேற்பு கொடுத்ததுக்குப் பின்னர் நமக்கு ஒன்று, இரண்டு கத்துக் கொடுப்பாங்க. அதைக் கத்துக்கிட்டதும் தான் நமக்கு தொழில் நுட்ப சேவையின் நம்பரே வரும். உடனே எடுத்துப் பேசினால் உங்க அதிர்ஷ்டம். லோகல் செர்வர் வீக்குன்னா அவங்க எடுக்கவே மாட்டாங்க. "All the Executives are busy. Please stay on the line or try later"அப்படினு recorded message வந்தாலே சரி ஏதோ முக்கியமான பிரச்னை, இப்போ எடுக்க மாட்டாங்கனு புரிஞ்சுடும். அப்பாடா, எப்படிப் பாருங்க, ஒரே வரியிலே புரிய வைக்கிறாங்க. இதிலே சொல்லிக் கொடுக்கும் அவங்க திறமைசாலியா, கத்துக்கும் நாம திறமைசாலியானு சந்தேகமே வரும். அப்படி ஒண்ணும் இல்லைனா தொலைபேசியை எடுத்துச் சமயங்களில் குயில் கூவும், இல்லைனா மயில் அகவும். ஹிஹி, புரியலையா?? குயில் போலக் கொஞ்சிக்கொஞ்சி யாராவது ஒரு பெண்ணோ, மயில் போல அகவிக் கொண்டு யாராவது ஒரு ஆணோ பேசுவார்கள். நமக்கு இணைப்பு வரலைனதும் அவங்க படற வருத்தத்தைப் பார்த்து நமக்குக் கண்ணீரே வந்துடும். ஆஹா, இவ்வளவு வருத்தப் படறாங்களே, உடனே நம்ம சேவையைக் கவனிப்பாங்கனு நீங்க நினைச்சால். அது உங்க மடத் தனம்.
உங்களோட அடையாளச் சொல் கேட்டுக் கொண்டு, எங்கே இருந்து பேசறீங்க, உங்க மாற்று அடையாள மெயில் ஐடி என்ன, தொலைபேசி எண் இதுதானா என்று எல்லா உறுதிகளும் செய்து கொண்டு (இது ஒவ்வொரு முறையும் கேட்கப் படும். இப்போ எனக்கு என்னோட பேரே மறந்துடுச்சு, இந்த யூசர் ஐடிதான் நினைவிலே இருக்கு) அப்புறமாச் சொல்லுவாங்க, "மேடம், உங்க மோடத்திலே/ரவுட்டரிலே எல்லா லைட்டும் எரியுதா?? எரியுது அல்லது இல்லை, அல்லது விட்டு விட்டு எரியுது, அல்லது கண் சிமிட்டிட்டே இருக்குனு நீங்க சொன்னதும்
சேவை மையம்:"ரீ ஸ்டார்ட் பண்ணுங்க மேடம்"
நாம்: பண்ணிட்டேனே, பலமுறை.
சேவை: அப்படியா, சாரி மேடம், இப்போ நீங்க என்ன செய்யறீங்க ஸ்டார்டிலே போய் ரன் என்று ஒரு ஆப்ஷன் இருக்குமே அதை க்ளிக் பண்ணி கமாண்டிலே போய்"..........
நான்: ping தானே போடச் சொல்றீங்க? போட்டுப் பார்த்துட்டேனே, பைட்ஸே போகவும் இல்லை, வரவும் இல்லை.
சேவை: அடடா, மேடம், இப்போ என்ன செய்யறது?? ம்ம்ம்ம்? இந்த alternative gateway னு ஒண்ணு இருக்கு, அதிலே.....
நான்: properties போய் அதையும் போட்டுப் பார்த்தாச்சே, லோகல் ஏரியா கனெக்ஷனையும் ஒரு தரம் ஆப் பண்ணிட்டுத் திரும்ப ஸ்டார்ட் பண்ணி எல்லாம் பண்ணிட்டேனே??
சேவை: அப்போ ஒண்ணு செய்யுங்க, அந்த கேபிள் வயர் தொங்குதே உங்க கணினிக்கு மேலே தொங்குதா, வெளியே இருக்கா அதிலே, ஒரு வெள்ளைக் கலர் பாக்ஸ் இருக்கும்.
நான்: ஜங்ஷன் பாக்ஸ்தானே? அதை ஆஃப் செய்து லூப்பிலே போட்டு, பின்னாடி லைனுக்கு மாத்தி, கேபிளை எல்லாம் மீண்டும் பிட் பண்ணி எல்லாம் செய்து பார்த்துட்டேன்.
சேவை: சரி மேடம், (வேறு வழியில்லை, பல்லைக் கடிப்பாங்கனு நினைக்கிறேன்.) கொஞ்ச நேரம் காத்திருக்க முடியுமா? உங்க புகாரைப் பதிவு செய்து கொண்டு, உங்களுக்கு நம்பர் தரேன்.
நான்: வேறே வழி?? கொடுங்க, காத்திருக்கேன்.
ஒரு சகிக்க முடியாத, காதால் கேட்க முடியாத கொடுமையான சங்கீதம் ஒலிபரப்பப் படும். சில, பல நிமிடங்களுக்குப் பின்னர், குயில் மீண்டும் கூவும். "மேடம், இதுதான் உங்கள் புகார் எண். இந்த நிமிடத்தில் இருந்து 24 மணி நேரம் கணக்கு. அதுக்குள்ளே உங்க புகார் சரி செய்யப் படும். அப்படி இல்லைனா நீங்க மீண்டும் எங்களை எப்போ வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். எங்களோட எண் .............. Good Day Madam. We are here to serve you. தொலைபேசி வைக்கப் படும். இப்படியாகத் தானே, நான் ஒரு தொழில் நுட்ப நிபுணியாகிவிட்டேன், இப்போ டாடா இண்டிகாம் தயவாலே. செர்வர் சரியில்லைனா யுபிஎஸ்ஸுக்கு பாட்டரி மாத்தினீங்களானு அவங்களையே இப்போக் கேட்டுட்டு இருக்கேன்.
24 மணி நேரத்துக்குள்ளே சரி செய்யலைனா என்ன நடக்கும்கிறதை இன்னொரு பதிவாத் தான் எழுதணும். இன்னிக்குத் தான் கிட்டத் தட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் கொஞ்சமாவது வருது இணையம். வேறே வேலை இருக்கு, அதை எல்லாம் முடிக்கணும், வர்ட்டாஆஆஆஆஆஆ??????
Labels:
மொக்கைக்கு ஒரு இடம் கொடுத்தாச்சு
Subscribe to:
Posts (Atom)