Monday, September 21, 2009

முப்பெரும் தேவியர் சந்திப்பு!

நவராத்திரினாவே அது பெண்களுக்கானது, அதுவும் மூன்று தேவியர்க்கானதுனு எல்லாரும் அறிவார்கள். அந்த மூன்று தேவிகளுமே நேரில் சந்தித்தனர். என்ன ஆச்சரியமா இருக்கா?? பதிவுலகப் பிதாமஹியும், அதுக்கப்புறமாய்ப் பதிவுலகுக்கு வந்த இரண்டு பேரும் இன்று ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டனர். நேற்று மதியம் போல் பிதாமஹியிடமிருந்து தலைவிக்கு அழைப்பு. நாளைக்கு வரோம், அப்படினு. வல்லி? னு கேட்டப்போ, அவங்களையும் பிக் அப் பண்ணிக் கொண்டே வரோம்னு சொன்னாங்க. இன்னிக்குக் காலம்பர வல்லி கூப்பிட்டு உறுதியும் செய்தாங்க. 12 மணி சுமாருக்கு அழைப்பு வந்தது. இந்த இடத்திலே இருக்கோம், எப்படி வருதுனு கேட்டாங்க. அப்புறமா வழி சொல்லி வாசலில் காத்திருந்தோம்.

பிதாமஹிக்குப் பிடிக்குமேனு மசால் வடை பண்ணி வச்சா, அவங்க தொடவே இல்லை! :P சாப்பிட்டுட்டு வந்துட்டோம்னு சொல்லிட்டுப் பேருக்குக் கொறிச்சாங்க. கோபால் நல்ல மனுஷன், ஓரளவு கொடுத்ததை வேண்டாம்னு சாப்பிட்டார். வல்லி தான் ஸ்வீட் வேண்டாம்னு மத்ததைச் சாப்பிட்டாங்க. எல்லாம் படங்களோட வரும் பாருங்க. எல்லாரும் அவங்க அவங்க போன இடங்கள் பத்தி அலசி ஆராய்ந்தோம். இதிலே நம்ம அனுபவங்களைச் சொன்னதும் எல்லாரும் ஆடிப் போயிட்டாங்கல்ல! நமக்குத் தான் ஸ்பெஷலா அனுபவங்கள் ஏற்படுமே. அவங்க அனுபவங்களைச் சொல்ல இடமே வைக்காமல் நாமளே எல்லாத்தையும் சொல்லிக்கொண்டோம் என்பது இங்கே கவனிக்கத் தக்கது. :P

நேரம் போனதே நிஜமாவே தெரியலை. ஏதோ ஏற்கெனவே பார்த்துப் பழகினவங்களைத் திரும்பப் பார்க்கிறாப்போல் இருந்ததே தவிர, புதுசா எதுவும் தெரியலை. ஜிகே பத்தி, ஜெயஸ்ரீ பத்தி, ஜெயஸ்ரீ வீடு நியூசியில் எங்கே இருக்குனு, ஜெயஸ்ரீ என்னை நியூசிக்கு வரச் சொன்னதுனு எல்லாத்தையும் பேசியாச்சு. அப்படியும் இன்னும் விஷயம் இருக்கேனு இருந்தது. இப்போதைக்குப் பதிவுலகில் நாங்க தான் முப்பெரும் தேவியர்னு எங்களுக்கு நானே பட்டம் கொடுத்துட்டேன். பின்னே வேறே யாரு கொடுக்கப் போறாங்க?? இதிலே யார் எந்த தேவினு நீங்களே முடிவு பண்ணிக்குங்க! அவசரப் பதிவு, நம்ம வழக்கமான ஸ்டைல் இருக்காது. அடுப்பிலே சுண்டல் இருக்கு. வரேன், இந்த பொம்மை எல்லாம் வேறே கலாட்டா பண்ணிட்டு இருக்கு! இடம் பத்தலையாம்! என்னனு பார்க்கணும்!

30 comments:

 1. தேவிகள் வட்டமேசை மாநாடு நடத்தினா ஏதோ பிரச்சினை வரப் போகுதுன்னுதான் அர்த்தம்..?

  முருகா..!

  ReplyDelete
 2. கலக்குங்க தலைவி நீங்க.... முப்பெரும் தேவியர் வாழ்க! வாழ்க!!

  ReplyDelete
 3. அதான் பூமியில் பட இடங்களில் பூகம்பமா? ஓக்கே ஓக்கே!!

  ReplyDelete
 4. மூவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. பொருத்தமான பெயர்தான் அம்மா(ஸ்)! :) வாழ்க!

  ReplyDelete
 6. ம்ம், நடக்கட்டும். என்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை (மத்த ரெண்டு பேரும்) சொல்லி இருப்பாங்களே! :))

  ReplyDelete
 7. ஆகா...பார்த்துட்டிங்களா!! ;)) சூப்பரு ;)

  \\எப்படி வருதுனு கேட்டாங்க. அப்புறமா வழி சொல்லி வாசலில் காத்திருந்தோம்.
  \\

  இதுல உங்களை மிஞ்ச ஆளே இல்லை ;))

  ReplyDelete
 8. கீதா வந்துட்டோமில்ல.

  சுப்புக் க்ட்டி பயம் வேற. நீங்க சொல்கிற விஷயங்களைத் துளி கூட மிஸ் செய்யாம கேக்கணும். அந்தக் கவலை வேற. உண்மையாவே மனசார நான் நேசித்த இரண்டு மணி நேரம்.
  உங்கள் இருவரையும் பார்த்துப் பேசினது எனக்கும் துளசிக்கும் ஆனந்தம், மகிழ்ச்சி சந்தோஷம். பகவான் உங்களையும் ஸ்ரீ சாம்பசிவத்தையும் தீர்க்காயுசும் ஆரோக்கியமும்,மன நிறைவும் நிறையக் கொடுக்கணுமாய் வேண்டிக் கொள்கிறேன்.
  நன்றிம்மா.
  சுப்புப் பயந்து நான் காலைக் கீழெயே வைக்கலை:)

  ReplyDelete
 9. வாழ்த்துகளுக்கு நன்றி பழமைபேசி.:)

  ReplyDelete
 10. உண்மைத்தமிழன், எங்களை லக்ஷ்மி சரஸ்வதி துர்க்கா லெவலுக்கு உசத்திட்டீங்க. வாழ்க வாழ்க.:))
  ஆசிகள் தொடரும்.

  ReplyDelete
 11. நன்றி கைலாஷி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. கோபிநாத், அவங்க எல்லாரையும் நல் வழில நடத்தத் தான் இணையத்துக்கெ வந்து இருக்காங்க.
  அதனால உங்க ஸ்டேட்மெண்ட் கரெக்ட்.

  ReplyDelete
 13. வாங்க உ.த. உங்க டீச்சர் பத்தின விஷயம்னதும் முதல்லே ஆஜரா??? :P:P:P பிரச்னை ஒண்ணும் இல்லை, ஆனால் மூணு பேருமா போட்டி போட்டு எழுதலாம்னு ஒரு ஐடியா! படிக்க நீங்கல்லாம் இருக்கீங்கங்கற தைரியம் தான்! :)))))))

  @பழமை, வாங்க, வாங்க, வல்லி வேறே சொல்லி இருக்காங்க எனக்குப் பதிலா, பேரு நல்லா இருக்கா??? :))))

  ReplyDelete
 14. இ.கொ. ஹிஹிஹி, நாங்க என்ன அவ்வளவு ஒல்லியாவா இருக்கோம்?????தாங்கீஸ்ஸ்ஸ்ஸ், பூகம்பத்துக்குக்காரணம் கண்டு பிடிச்ச விஞ்ஞானி கொத்ஸு(கத்திரிக்காய்???) வால்க! வலர்க! :P:P:P

  வாங்க கைலாஷி ஐயா, உங்களைப் பத்தியும் பேச்சு அரை மணி நேரத்துக்கும் மேலே பேசினோம். :D

  ReplyDelete
 15. வாங்க கவிநயா, பெயர் பொருத்தமா அமைஞ்சுடுச்சில்ல, என்ன இருந்தாலும் இந்த நமக்கு நாமே திட்டம் மாதிரி வராது. பாருங்க, பட்டமெல்லாம் கொடுத்துக்க வசதியா இருக்கு! :D

  ReplyDelete
 16. //(மத்த ரெண்டு பேரும்) சொல்லி இருப்பாங்களே! :))//

  இல்லையே! உங்க பேச்சே அவங்க ரெண்டு பேரும் பேசலையே! :P:P:P

  ReplyDelete
 17. ஹிஹிஹி, வாங்க கோபி, அது என்னமோ தெரியலை, நம்ம வீடு கண்டு பிடிக்க எல்லாரும் கஷ்டப் படறாங்கல்ல! :D
  நன்றிப்பா.

  ReplyDelete
 18. வாங்க வல்லி, நேத்திக்குக் கொஞ்சம்(நிறையவே) வேலை, அதோட விருந்தாளிங்க வேறே. எனக்குப் பதிலா நீங்க பதில் கொடுத்திருக்கீங்க ரொம்ப நன்றிம்மா! :D

  ReplyDelete
 19. என் பயணங்களில் இது ஒரு ’மைல்-ஸ்டோன் பதிவு’ :)))

  எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்
  எனக்கும் கொஞ்சம் சுண்டல்....

  ReplyDelete
 20. //என் பயணங்களில் இது ஒரு ’மைல்-ஸ்டோன் பதிவு’ :)))//

  என் கணிப்பில் இது ஒரு ’ஸ்மைல்-ஸ்டோன் பதிவு’ :)))

  ReplyDelete
 21. வல்லிக்கா சுப்புகுட்டி மேலே படுத்து இருக்கறவரை ஆராதனை செய்யறீங்க! ஆனா சுப்புக்குட்டிக்கு பயமா? :-))

  ReplyDelete
 22. பிதா மஹி எப்ப இந்தியா வந்து சேந்தாங்க? தெரியவே தெரியாதே!

  ReplyDelete
 23. //என் பயணங்களில் இது ஒரு ’மைல்-ஸ்டோன் பதிவு’ :)))//

  வாங்க கபீரன்பன், வ.பு??? இல்லாட்டி உ.கு.???? எதுவாய் இருந்தாலும் இதான் என்னோட பதில்! :P:P:P:P:P:P

  :))))))))))))) லேட்டா வந்தா நோ சுண்டல்!

  ReplyDelete
 24. வாங்க திவா,

  //என் கணிப்பில் இது ஒரு ’ஸ்மைல்-ஸ்டோன் பதிவு’ :)))//

  ஹிஹிஹி, மீண்டும் சொல்லிக்கிறேன், தம்பி தங்கக் கம்பி!  சுப்புக்குட்டியைப் பத்தியே நினைச்சுட்டு இருந்தாங்க அன்னிக்கு! :)))))))) வேறே நினைப்பே இல்லை!

  பிதாமஹி எப்போ வந்தாங்கனு எனக்கும் தெரியாது, திடீர்னு ஒருநாள் மடல் கொடுத்து சென்னைக்கு வந்துட்டேனேனு சொன்னாங்க, பாவம், சிங்காரச் சென்னைனு நினைச்சுட்டு வந்திருக்காங்க! :P:P:P

  ReplyDelete
 25. கீதா,

  நேரம்போனதே தெரியாமப் பேச்சுக்கேட்டோம்:-) ரொம்ப நன்றிப்பா

  தட்டுலே இருந்த எல்லாத்தையும் சட்னி சாம்பார் தவிர நான் சாப்பிட்டேன்ப்பா.

  ம.வடையைப் பார்த்ததும் கண்ணுலே குளம் கட்டிக்கிச்சுப்பா.

  அம்பி,

  அன்னிக்குக் கேசரி மட்டும் செஞ்சுருந்தால் கட்டாயம் உங்க நினைவு வந்துருக்கும். ஆனா கீதா ..... பாதுஷாப்பா:-)))))

  கைலாயம் தரிசித்தவர்களைப் பார்த்தாலே பாதி புண்ணியமாம். சேர்த்துவச்சுக்கிட்டோம்.

  நீங்களும் உங்க ரங்க்ஸும் டவுன் டு எர்த் பெர்ஸன்ஸ். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

  உங்கக் கொலுப் படங்களொடு பதிவு ஒன்னு வந்துக்கிட்டு இருக்கு.

  ReplyDelete
 26. //அன்னிக்குக் கேசரி மட்டும் செஞ்சுருந்தால் கட்டாயம் உங்க நினைவு வந்துருக்கும். ஆனா கீதா ..... பாதுஷாப்பா:-)))))//

  கேசரி பண்ணாததன் காரணமே அம்பி நினைப்பு வரக் கூடாதுனு தானே! ஹிஹிஹிஹிஹி :P:P:P:P

  ReplyDelete
 27. //பாவம், சிங்காரச் சென்னைனு நினைச்சுட்டு வந்திருக்காங்க! :P:P:P //

  ஹிஹி! பாவம்!

  ReplyDelete