Wednesday, September 2, 2009

தருமமிகு சென்னையா இது???? :((

தருமமிகு சென்னை,

ராமலிங்க அடிகள் ரொம்பவுமே புகழ்ந்து இருக்கார் சென்னைப் பட்டணத்தைப் பத்தி. திவாகரின் எஸ்.எம்.எஸ். எம்டனிலும் படிச்சேன், சென்னை புகழை. ஆனால் எனக்கு என்னமோ சென்னை பிடிக்கவே இல்லை. ஆனால் இங்கே தான் வாசம் செய்யவேண்டி ஆகிவிட்டது. முந்தாநாள் ஆகஸ்ட் முப்பது அன்று காலை மயிலையில் ஒரு உபநயனம், மாலை விருகம்பாக்கத்தில் ஒரு கல்யாண வரவேற்பு, ஆகவே காலையிலேயே அம்பத்தூரை விட்டுக் கிளம்பிட்டோம். நாங்க கிளம்பறதுனா சாமானியமா இல்லை. பால்காரன், வீட்டுவேலை செய்யும் பெண் எல்லார் கிட்டேயும் ஒரு வாரத்துக்கு முன்னாலேயே சொல்லி வைக்கணும். இல்லைனா கிளம்பற அன்னிக்கு அந்தப் பொண்ணு வேலைக்கு மட்டம் போடுவா, பால்காரரோ, அவர் கிட்ட கறக்கற பாலை எல்லாம் நாங்க தான் வாங்கிக்கணும்னு பிடிவாதம் பிடிப்பார். இந்த மாதிரிக் கல்யாணத்துக்குப்போறோம், பால் தேவை இல்லைனு அவர் கிட்டே சொன்னால் அவ்வளவு தான், “வயித்திலே அடிக்கிறியே அம்மா!’னு கேட்கிறார். அப்படிக் கேட்கலைனா முதல்நாள் வாங்காத பாலையும் சேர்த்து மறுநாள், (இல்லை, இல்லை அந்தப் பழைய பால் இல்லைங்க, அன்னிக்குக் கறந்த பால் தான் ஆனால் கணக்குச் சரியாக வரதுக்காகத் தண்ணீரைக் கூடச் சேர்த்துப்பார்) கொடுத்து வாங்கியே ஆகணும்னு பிடிவாதம் பிடிப்பார். கருணைக்கடல் ஆன என்னோட ம.பா. வாயே திறக்காம வாங்கிட்டு வருவார். ஏற்கெனவே மோர் செலவே இல்லை. அவர் ஒருத்தர் தான் இன்னும் ஆறு மாசத்துக்கு மோர் விட்டுக்கணும். அப்புறம் பால் என்ன அபிஷேஹமா பண்ணிக்கப் போறோம். சொன்னால் அந்தப் பால்காரருக்குப் புரியறதே இல்லை. அவருக்கு வேண்டியது முதல்நாள் விட்டுப் போன ஒரு லிட்டரையும் கொடுத்துச் சரிக்கட்டிடணும். மாசம் முப்பது நாளுக்கும் பணம் வந்துடணும். நீ பாலை என்ன வேணா பண்ணிக்கோ! இதான் அவர் கொள்கை போல!

இது எல்லாத்தையும் சமாளிச்சுட்டுத் தான் நான் வெளியே போகவேண்டி இருக்கு. அன்னிக்கு நாள் பூராவும் வெளியே இருப்பதால் பால்காரர், வேலைசெய்யும் பெண் எல்லாரையும் சமாளிச்சுட்டு மயிலை வந்தாச்சு. ஏற்கெனவேயே மயிலையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் எட்டாம் ஆண்டு விழா நடப்பதாக அழைப்பு வந்திருந்தது. ஆனால் போக முடியுமானு தெரியலை. அதனால் எதுவும் சொல்லாமல் இருந்துட்டேன். இப்போ மயிலையிலேயே உபநயனம்னு தெரிஞ்சதும், விழா நடக்கும் இடம் எங்கே இருக்குனு என் தம்பி கிட்டே கேட்டுத் தெரிஞ்சுட்டேன்./ என்றாலும் விழாவுக்குப் போவது பத்தி யார் கிட்டேயும் மூச்சு விடலை, என் கணவரைத் தவிர, அவரோ, நான் உன்னை உன்னோட சிநேகிதி வீட்டிலே விட்டுட்டுத் திரும்ப மயிலையிலேயே உள்ள ஒரு சொந்தக்காரர் வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு 5-00 மணி அளவில் வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டார். சரினு எல்லாம் ப்ளான் பண்ணியாச்சு. உபநயனம் நடக்கும் இடத்தில் இருந்து எல்லாமுமே கிட்ட. உபநயனம் முடிஞ்சு நாங்க சாப்பிட்டுக் கிளம்பி வடக்கு மாடவீதியில் ஏதாவது பரிசுப் பொருள் வாங்கலாம்னு ஆட்டோகாரர் கிட்டே சொன்னால், அவரும் சரி, சரினு சொல்லிட்டு, தெற்கு மாடவீதியிலே கொண்டு நிறுத்திட்டார். இது என்னங்க சென்னை ஆட்டோ பழக்கமே இல்லையா நமக்கு? என்றாலும் இப்படிக் கேட்ட இடத்துக்குக் கூட்டிப் போகாமல் ஏமாத்துவாங்கனு புரியலைதான். அதுவும், நாங்க போன தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜத்திலே இருந்து தெற்கு மாடவீதி கூட்டி வர ஆட்டோவின் விலையை முதலில் எல்லாரும் கேட்டிருந்தாங்க. அப்புறமா அந்த ஆட்டோக்காரரையே கொஞ்சம் சமாதானம் செய்து கெஞ்சிக் கூத்தாடி வடக்கு மாடவீதிக்குப் போனால் அவர் மறுத்துவிட்டார். ஆனால் கொஞ்ச நாட்களாகவே ஆட்டோக்காரங்களுக்கும் எங்களுக்கு இப்படித்தான் ஏதாவது தகராறு நடந்து வருகிறது. போனவாரம் தி.நகர் போக் ரோடில் ஒரு கல்யாணத்துக்குக் கூட்டிப் போகச் சொன்னால் ஆட்டோக்காரர் என்னமோ பெட்ரோல் விலையை நாங்க தான் ஏத்திட்டாப்போல் சண்டை போட்டார். ரொம்ப பயமாப்போச்சு! :(

சரி, போ,இன்னிக்கு எழுந்த நேரம் சரியில்லைனு நினைச்சுட்டு, லஸ் சர்ச் ரோடில் உள்ள சிநேகிதி வீட்டுக்குப் போக இன்னொரு ஆட்டோ பிடிச்சோம். அதுக்குள்ளே என்னோட தம்பி தொலைபேசியில் அழைத்தார். இரண்டு பேரையும் வரச் சொல்ல, அவர் என்னை மட்டும் சிநேகிதி வீட்டில் விட்டுட்டு, அதே ஆட்டோவில் கிளம்பிப் போனார். அப்புறம் நான் அவங்க வீட்டில் இருந்து விழா நடக்கும் இடத்துக்கு சிநேகிதியுடன் சென்றேன். அவங்களும் விழாவுக்கு வரதாச் சொல்லி இருந்தாங்க. ஆகவே இரண்டு பேரும் போனோம். அங்கே விழாவில் பேச்ச்சாளர்கள் பேச்சை முடிக்கத் தாமதம் ஆகிக் கொண்டிருந்தது. அதுக்குள்ளே என் தம்பி என்னை வரச் சொல்லி அழைப்புக் கொடுத்துவிட்டான். ஒரு அரை மணி பார்த்துவிட்டு நான் பாதிவிழாவிலேயே கிளம்பிட்டேன். இனிமேல் தான் கிளைமாக்ஸே வரப் போகுது பாருங்க.

விழா நடக்கும் இடத்தில் இருந்து அருகே இருந்த தெருவில் 12 B பேருந்து தான் போயிட்டு இருந்தது. அது போத்தீஸில் தான் நிற்கும்னு சொல்லிட்டதாலே, நான் போகவேண்டியது மாம்பலம் பப்ளிக் ஹெல்த் செண்டர் கிட்டே என்பதாலே, அங்கே இருந்து இன்னொரு ஆட்டோ பிடிக்கிறதுக்கு, இங்கே இருந்தே ஆட்டோவில் போயிடலாம்னு ஆட்டோவை அழைத்தா, ஒவ்வொருத்தரும் கேட்கிற பைசா, முதல்லே கையிலே அவ்வளவு பைசா இருக்குமா பார்த்துக்குவோம்னு தோணுது. அவ்வளவு கேட்கிறாங்க. கேட்டால் பிள்ளையார் அன்னிக்கு ஊர்வலம் போறாராம், பிள்ளையாரப்பா, இது என்ன உன்னோட பக்தையை இப்படிச் சோதிக்கலாமானு நினைச்சுட்டு ஒருவழியா நான் சொன்ன பணத்துக்கு ஒத்துக் கொண்ட ஒருத்தர் ஆட்டோவில் ஏறினேன். ஆட்டோவும் கிளம்பியது. இப்போது பத்திரிகைகளில் பிரபலமாக எழுதிக் கொண்டிருக்கும் ஒரு இளம் சாமியாரின் படம் ஒட்டப் பட்டிருந்தது ஆட்டோவில் ஓட்டுநர் இருக்கைக்கு எதிரே. நான் எறினதுமே அந்த ஆட்டோகாரர் அந்த சாமியாரைக் காட்டி இவரைத் தெரியுமா? பார்த்திருக்கீங்களா? அப்படினு கேட்டார். ஆனந்தம் பொங்கும் அந்தச் சாமியாரின் ஆசிரமம் பற்றிக் காலைதான் பல கதைகளை என் உறவினப் பெண்ணொருத்தி உபநயனத்தில் சொல்லி இருந்தார். இருந்தாலும் இம்மாதிரியான வழிபாடு எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. கந்தர் சஷ்டி கவசத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டே எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைனு சொல்லிட்டேன். அப்புறமா அவர் வாயே திறக்கலை. நல்லி தாண்டி, குமரன் தாண்டி துரைசாமி சப்வே வந்ததும் யூ டர்ன் அடிச்சுத் திரும்பினால் நான் போகவேண்டிய தெரு வந்துடும்.ஆனால் இது என்ன இந்த ஆட்டோ திரும்பாமல் நேரே இல்லை போகிறது???

12 comments:

 1. அடாடா எம்பூட்டு நாளாச்சு இப்படி ஒரு மொக்கையை நீங்க எழுதி.....சூப்பர்....தொடர்ந்து எழுதவும் :-)

  ReplyDelete
 2. அடடா உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி அடிக்கடி நடக்கிறதுன்னு தெரியலெயே அந்த கந்த சஸ்டி கவசம் தான் காப்பாத்தனும்.

  ReplyDelete
 3. @மெளலி, இது மொக்கையா? உண்மையான அனுபவம்! நறநறநறநற

  ReplyDelete
 4. வாங்க, வாங்க, மஞ்சூர், ஏது அதிசயமோ அதிசயம் போங்க! இதுக்கே இப்படின்னா, நாங்க முதன்முதல் மும்பை போன கதை தெரியுமா உங்களுக்கு? அதுக்கு என்ன சொல்லுவீங்களோ?? :))))))))

  ஆனா ஒண்ணு, நிஜமாவே கந்தசஷ்டி கவசம் தான் காப்பாத்துது, சந்தேகமே இல்லை.

  ReplyDelete
 5. Every time we encounter some stress or the other when we visit Madras. It w'd be highly frustrating and disgusting when we go through it. porumda saami innime varave vendam enben. Hubby would say " aamam poi erngaravaraikkum "enbar.. But now when I flip back through the events I always think nothing could be more entertaining and enterprising than this.
  Ennathan sonnalum nammba ooru delightful than Mrs Sambasivam. You get navarasm.Of course azhudhu sirikka vaichudum.:)) Madras ippadinna Delhi innoru bayankara sirippu!! Saare jahan se achcha Hindhusthan Hamara than.

  ReplyDelete
 6. //அடாடா எம்பூட்டு நாளாச்சு இப்படி ஒரு மொக்கையை நீங்க எழுதி//

  சூப்பர் :))))

  ReplyDelete
 7. அம்மாடி ஆத்தாடி! எத்தன நாள் ஆச்சு இப்படி ஒரு மொக்கை போட்டு!!!!

  தலைவி! உங்கள் நட்சத்திர வாரம் தீட்ஷிதர் வீட்டுக்கு சொல்லப்பட்டது கிருஷ்ணாவால் என்பதை அறியவும்!!!!

  ReplyDelete
 8. ஆட்டோ வருவதும் ஒரு அதிர்ஷ்டமெ அப்படின்னு பாடலாமா கீதா:)

  எங்க வீட்டுக்கு எதிர்த்தாப்பில ஒரு வயசான ஆட்டோக்காரர் இருப்பார்.
  அவரை விட வயசான ஆட்டோ.
  நான் வாசலைக் கடக்க வேண்டியதுதான் தாமதம். ஆட்டோவைக் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்.
  அதில் ஏறி அம்மாவீட்டை அடைய அரைமணிநேரம் ஆகும். அம்மாவீடு தி.நகர்.

  லொட லொடவென்று சத்தம் .பழுதடைந்த எஞ்சின்.
  சொன்னாலும் கேட்க மாட்டார்.
  5 வருஷம் முன்னாடியே ஐம்பது ரூபாய் கேட்பார்.

  இப்பதான் கொஞ்ச நாளாக் காண்பது இல்லை:))

  ReplyDelete
 9. வாங்க ஜெயஸ்ரீ, இதே கதை மதுரையிலும் இப்போ சில வருஷங்களாய் ஆரம்பிச்சிருக்கு. என்னதான் மதுரைக்காரங்களா இருந்தாலும் சில சமயம் ஏமாந்து தான் போக வேண்டி இருக்கு. :((((( என்ன செய்யறது? போகாமலும் இருக்க முடியறதில்லை!

  ReplyDelete
 10. அம்பி, என்ன ரிபீட்டு? பூரிக்கட்டை?? சென்னையிலிருந்து குறி பார்த்து வந்துடுச்சா? :P

  ReplyDelete
 11. வாங்க அபி அப்பா, வந்தது தான் வந்தீங்க, பதிவைப் படிச்சிருக்கலாம் இல்லை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P

  ReplyDelete
 12. வாங்க வல்லி, குடும்ப ஆட்டோக்காரர் இருக்கார்தான். ஆனால் ஜெயஸ்ரீ அடுத்த பதிவிலே சொல்லி இருக்காப்பல நாம தேடறப்போ அவர் வர முடியாது. சில சமயம் ரொம்ப அவசியம்னா அவருக்குப் பதிலா வேறே யாரையாவது அனுப்புவார். இது ஒரு நாள் முழுக்கவேனு அங்கங்கே பார்த்துக்கலாம்னு நினைச்சது! :(

  ReplyDelete