Sunday, December 27, 2009

வெங்கையா நாயுடுவுடன் ஒரு சந்திப்பு!

ரொம்ப நாளாச்சா அரசியலில் சுறுசுறுப்பாவும் ஊக்கத்தோடும் ஈடுபட்டு?? தொண்டர்கள் எல்லாம் ரொம்பவே விரக்தியிலே மூழ்கிப் போயிட்டாங்க. தொண்டர்களை உற்சாகப் படுத்தறதுக்காகக் கொஞ்சம் அரசியல் நடவடிக்கையிலே மூழ்கலாமானு நினைச்சேன். என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ கிடைச்சது பாருங்க எதிர்பாராமல் ஒரு சான்ஸ்! வெங்கை(கா)(ஹிஹிஹி)யா நாயுடுவுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. எதுக்குனு நினைக்கறீங்க??? எல்லாம் தெலங்கானா, ஆந்திரா விஷயமாத் தான். அதோட நம்ம கட்சியோட கூட்டணி வச்சுக்கவும் ஆசைப்படறதாக் கேள்வி. இரண்டு பேரும் ஒரு பொது இடத்திலே சந்தித்துக் கொண்டோம். பேச்சு வார்த்தையே இல்லாமக் கொள்கை முடிவுகளை வைத்தே கூட்டணி முடிவு செய்யப் பட்டது. விபரங்கள் மதியமா. நேத்திக்கு அலைச்சலில் உடம்பு முடியலை. அதோட இன்னிக்கு ஏகாதசி வேறே சேர்ந்துடுச்சு.

எல்லாரும் புதுமையான பொருட்காட்சி பார்க்க வாங்க

6 comments:

  1. வெங்கையா நாயுடுவா!!!!!! அப்படி ஒருதர் இருக்காரா!! ;))

    ReplyDelete
  2. போட்டீங்களே ஒரு போடு!! நேத்திக்குத் துரத்தித் துரத்திப் படம் எடுத்த ஃபோட்டோகிராபர்கள் கிட்டேயும், ஓடி ஓடிப் பேட்டி கண்ட நிருபர்கள் கிட்டேயும் உங்களை விட்டிருக்கணுமே!!! :P:P:P:P:P

    ReplyDelete
  3. adada... vivaram podama vituttenga.. seekiram podunga

    ReplyDelete
  4. ஒண்ணுமே புரியலை அம்மா. ஜோக்கா, நிஜமா? எனக்கும் அரசியலுக்கும் ரொம்ம்ம்ம்ம்ப தூரம்! ராக்கெட் விட்டாக் கூட போக முடியாது :P

    ReplyDelete
  5. வாங்க எல்கே, இடத்தை மாத்திட்டேன், இங்கே யாருமே அதிகமா வரதில்லை அதனாலே! லிங்க் கொடுக்கிறேன், எண்ணங்கள் பதிவுக்கு வந்துடுங்க.:D

    ReplyDelete
  6. ஹிஹிஹி, கவிநயா, அரசியல்னா என்னனு நினைச்சீங்க?? :D போகட்டும் இந்தப் பதிவு முழுமையாப் பதிவாகலைங்கறதையும் இப்போத் தான் பார்க்கிறேன். எல்லாம் ஆர்காட்டார் தயவு! இனிமே ஒண்ணும் பண்ணப் போறதில்லை. இது இப்படியே இருக்கட்டும்! :P

    ReplyDelete