Sunday, April 5, 2009

அணிலே, அணிலே, ஓடி வா!

இந்த ராமர் வந்து முதுகில் தடவிக் கொடுத்ததாலேயே அணிலுக்கு முதுகில் மூணு கோடுகள்னு சொல்லுவாங்க. அதி புத்திசாலியாவும் இருக்குங்க இதெல்லாம். பிப்ரவரி மாதம் பரோடா கிளம்பும்போது தினமும் காக்கையும், அணில்களும், குருவிகளும் சாப்பாட்டுக்கு வந்து ஏமாந்து போகுமேனு தோணியது. ஒவ்வொரு முறை வெளி ஊர் போகும்போதெல்லாம் நினைப்பு வரும். இந்த முறையும் வந்தது. கடவுள் அதுக்குக் கொடுக்காமலா இருக்கப் போறார்? என்றாலும் என்னுடைய ஈகோ?? அதுங்க கஷ்டப் படுமேனு நினைச்சேன். பரோடா போனால் எனக்கு மேலே எங்க மாமியார் அணில்களைப்பழக்கி வச்சிருக்காங்க. பூனையும், எலியும் கூட இருந்ததாம், அதுங்களை எப்படியோ விரட்டி இருக்காங்க, சாமானெல்லாம் வீணாப் போறதுனு இல்லாமல், அதுங்களோட ஓடிப் பிடிச்சு விளையாடவும் முடியலைனு.

இந்த அணிலும் முதல்லே சமையல் அறையிலே மேடைக்குக் கீழே தான் குடித்தனம் ஆரம்பிச்சிருக்கு. சமைக்கும்போது குறுக்கும், நெடுக்குமா ஓடறதும், பிடிக்கறதுமா இருந்திருக்குங்க ரெண்டும். கால்லே மிதிபட்டுடுமோனு கவலையாவும் போயிருக்கு. ஒருநாள் என்ன நினைச்சாங்களோ தெரியலை, ஒரு கிண்ணத்திலே சாதம் வைத்து ஜன்னலுக்கு வெளியே வச்சிருக்காங்க. அதுங்களும் சாப்பிடப் போயிருக்குங்க. உடனே அதுங்களைப் பார்த்து, "சமையல் அறையிலே உன்னோட வீட்டை வச்சுக்காதே, உனக்கு மட்டுமில்லாமல் உன்னோட குழந்தைங்களுக்கும் ஏதானும் ஆயிடும். வேறே இடம் பார்த்துக்கோ"னு சொன்னாங்களாம். அதுங்க என்ன புரிஞ்சுண்டதோ தெரியலை, கொண்டு வந்த பஞ்சுப் பொதியைத் (கூட்டில் வைக்கக் கொண்டு வந்ததை)திருப்பி எடுத்துண்டு ஓடிப் போயிடுச்சுங்க.

அப்புறம் பார்த்தால், எங்களுக்கு ஒதுக்கி இருந்த அறையிலே என்னோட கட்டிலின் தலைமாட்டில் இருந்த ஜன்னலில் அழகாய் வீடு கட்டிக் குடித்தனம் ஆரம்பிச்சிருக்கு. தலைமாட்டிலே வெடுக், வெடுக், வெடுக் குனு ஒரே சத்தம். சில சமயம் ஒரே சண்டை. சில சமயம் ஒரே ஓட்டம், பிடி. ஜன்னல் கம்பி அதிருது, சத்தத்திலே. அணில் பிள்ளைகள் எல்லாம் சின்னச் சின்னதாய் பார்க்கவே அழகோ அழகு. எங்கே இருந்தோ கொட்டை எல்லாம் எடுத்து வந்து பல்லால் கடிச்சு, நொறுக்கிக் குட்டிக் குழந்தைங்களுக்கு ஊட்டியும் விடுது. அம்மா யாரு, அப்பா யாருனு தெரியலை. என்றாலும் பாச உணர்வு என்பது இவைகளிடையேயும் இருக்கிறதைப் பார்த்தால் ஒவ்வொரு நிமிஷமும் படைச்சவனை நினைத்து வியக்காமல் இருக்க முடியலை.

9 comments:

  1. :)

    படம் நீங்க எடுத்ததா? இல்லை இணையத்தில் சுட்டதா?

    ReplyDelete
  2. மனுஷன்தான் சொன்ன பேச்சு கேக்கமாட்டான். இதுகள் எல்லாம் கேக்கும்.

    ReplyDelete
  3. வாங்க புலி, படம் எல்லாம் சுட்டது தான். எங்கே அதுங்க ஓடற ஓட்டத்திலே படம் பிடிக்கவே முடியறதில்லை. சிட்டுக்குருவியைப் பிடிச்சு வச்சிருக்கோம். சரியான பதிவுக்குக் காத்திருக்கு அது! :)))))))

    ReplyDelete
  4. வாங்க திவா, உண்மைதான் நீங்க சொல்றது. ஆனாலும் மிருகங்கள் புத்திசாலிங்க தான். வாய் தான் பேச முடியலை!

    ReplyDelete
  5. //:)

    படம் நீங்க எடுத்ததா? இல்லை இணையத்தில் சுட்டதா?

    //

    //வாங்க புலி, படம் எல்லாம் சுட்டது தான். எங்கே அதுங்க ஓடற ஓட்டத்திலே படம் பிடிக்கவே முடியறதில்லை. சிட்டுக்குருவியைப் பிடிச்சு வச்சிருக்கோம். சரியான பதிவுக்குக் காத்திருக்கு அது! :)))))))

    //

    புலிக்குட்டி நீ ஒரு தீர்க்கதரிசிப்பா. தலைவியை என்னமா புரிஞ்சு வச்சிருக்கே?
    :))

    ReplyDelete
  6. //:)

    படம் நீங்க எடுத்ததா? இல்லை இணையத்தில் சுட்டதா?

    //

    //வாங்க புலி, படம் எல்லாம் சுட்டது தான். எங்கே அதுங்க ஓடற ஓட்டத்திலே படம் பிடிக்கவே முடியறதில்லை. சிட்டுக்குருவியைப் பிடிச்சு வச்சிருக்கோம். சரியான பதிவுக்குக் காத்திருக்கு அது! :)))))))

    //

    புலிக்குட்டி நீ ஒரு தீர்க்கதரிசிப்பா. தலைவியை என்னமா புரிஞ்சு வச்சிருக்கே?
    :))

    ReplyDelete
  7. //என்றாலும் பாச உணர்வு என்பது இவைகளிடையேயும் இருக்கிறதைப் பார்த்தால் ஒவ்வொரு நிமிஷமும் படைச்சவனை நினைத்து வியக்காமல் இருக்க முடியலை.
    //

    வந்ததுக்குத் தலைவியைக் கலாய்ச்சிட்டுப் போகலாம்னு பாத்தா இப்படி டச்சிங்கா எழுதிட்டாங்க. சூப்பர்ங்கிறேன்.

    ReplyDelete
  8. வாங்க அதியமான், வெத்திலை, பாக்கு வச்சுக் கூப்பிட்டிருக்கேன். :P ம்ம்ம்ம்ம், என்ன தீர்க்கதரிசியா புலி? அதான் நானே ஒத்துக்கிட்டேனே, சுட்டதுனு!

    ReplyDelete
  9. டச்சிங்கா இருக்குங்கறீங்க??? நன்னிங்கோ!!!! வந்ததுக்கும் சேர்த்துத் தான்! :)))))

    ReplyDelete