Friday, April 17, 2009

தேரையோடு ஒரு விளையாட்டு!

எல்லாரும் செல்லங்களா என்ன என்னமோ வளர்ப்பாங்க. ஆனால் எங்க வீட்டிலே நாங்க வளர்க்கவே வேண்டாம். எல்லாம் வந்து குடியேறுது. அதிலும் இப்போ இரண்டு நாட்களாய் சமையல் அறையில் இந்தத் தேரை அடிக்கும் கொட்டம் இருக்கே தாங்க முடியலை. எந்த நேரம் எங்கே வந்து விழுமோனு சர்வ ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு. திடீர்னு நேத்துக் காலையிலே சமையல் அறை ஜன்னலிலே உட்கார்ந்திருந்தது. ஜன்னல் என்னமோ திறக்கறதே இல்லை, தேசீயப் பறவைக்குப் பயந்து. தேசீயப் பறவை அதுக்காக வராம எல்லாம் இருக்கிறதில்லை. வந்துட்டுத் தான் இருக்கு. இந்தத் தேரை எங்கே இருந்து வந்ததுனு தெரியலை. ஜன்னலில் இருந்ததை எப்படியானும் எடுத்து வெளியே தள்ளிடலாம்னு ஜன்னல் கதவைத் திறக்கப் போனால், இண்டக்ஷன் ஸ்டவ் பக்கம் வந்து உட்கார்ந்தது.

சரினு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பித் தேரையார் என்ற சித்தர் மன்னனின் தலையில் குடைந்த தேரையை வெளியே எடுக்கச் செய்தாப்போல் செய்யலாம்னு நினைச்சேன். அப்படியாவது காரியம் சித்திக்குமா என்ற எண்ணம் தான். காரியமும் சித்திக்கலை, நானும் சித்தர் ஆக முடியலை. என்னத்தைப் பண்ணறது? அந்தத் தேரை படு ஸ்மார்ட்! க்ளீனாய் ஒரே தாவு தாவி, கீழே போய் ஒளிஞ்சு கொண்டது. அதைப் பிடிக்கணும்னா நான் முதலில் அந்த மேஜையைக் காலி செய்யணும். அதிலே இருக்கும் சாமான்களை நினைச்சால் தேரை அங்கேயே இருக்கட்டும்னு தோணும். அதை அப்படியே மறந்தாச்சு. அந்த நாளும் கழிஞ்சது. தேரையும் செளக்கியமாய் சமையல் அறையிலேயே.

மறுபடி இன்னிக்குக் காலையிலே எழுந்து சமையல் அறைக்குள்ளே நுழையும் முன்னே வரவேற்புக் கொடுத்ததே நம்ம தேரையார் தான். எங்க மன்னி அப்படியே துண்டையோ, வேஷ்டியையோ(ம்ஹும் இல்லை, இல்லை, புடவை இல்லை, நாம பிடிச்சா தேரை பயத்தில் நம்பர் ஒன், நம்பர் டூ எல்லாம் போனால், புடவை வீணாகாது?? அதான், எப்போவும் வேஷ்டிதான்) போட்டு அப்படியே பிடிப்பாங்க. அது மாதிரிப் பிடிக்கலாம்னு துண்டை எடுக்கப் போனால் திரும்பி வரதுக்குள்ளே அது ஷெல்பில். நடுவில் காய்கறி ஸ்டாண்ட். ஸ்டாண்டை நகர்த்திப் பிடிக்கலாம்னா அதுக்குள்ளே மறுபடி மறைவிடம். ம.பா. கிட்டேச் சொன்னால் அவரைக் கண்டதுமே எங்கேயோ ஓடிப் போய் ஒளிஞ்சுக்கறது. அதோட விளையாட்டெல்லாம் என்னோட மட்டுமே. நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கு அது கூட நான் ஒரு இ.வா.னு. என்னத்தைச் சொல்றது?
சரினு வீட்டு வாசலிலே வேப்பமர நிழலிலே உட்கார்ந்து துக்கத்தை ஆத்திக்கலாம்னா அங்கே ஒரு பெரிய ராக்ஷஸத் தவளை. பெரிய, பெரிய, மிகப் பெரிய சைஸ் தவளை. அந்த மாதிரித் தவளையைப் பார்த்திருக்கவே மாட்டோம். தினமும் காலம்பரக் கோலம் போடும்போது அது சரியாக் கோலத்தின் நடுவே உட்கார்ந்துக்கும். வெள்ளைக் கோலத்தின் நடுவே பச்சைத் தவளை, கவிதை, கதை, கற்பனை எல்லாம் வந்தது. ஆனால் எழுத முடியலை, பயம். அடுத்து இதைப் பிடிக்கப் பாம்பும் வருமே! இந்தத் தவளை கத்தறதோட நின்னா சரிதான். ஆனால் அது கடிக்குமோனு ஒரு சந்தேகம், மெதுவா வாசல் கதவைத் திறந்து அதை விரட்டினேன். இதுங்க எல்லாம் இருக்கிறதாலே பாம்பும் வரும்னு என் தம்பி மனைவி பயமுறுத்தினா. சரிதான், அந்தக் கதை தெரியாதா? பாம்பு ஏற்கெனவே இங்கே தான் இருக்குனு அலட்சியமாச் சொல்லிட்டேன்.

இந்தத் தேரையை சமையல் அறையில் இருந்து எப்படி விரட்டறது? இப்போது தலையாய பிரச்னை அதுதான். இந்தக் கவலையில் டாட்டா இண்டிகாமின் கண்ணாமூச்சி விளையாட்டுக் கூடப் பெரிசாத் தெரியலை.

12 comments:

 1. அட அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே? சமையலறை பூச்சி தொல்லை குறையும்.
  :-))

  ReplyDelete
 2. @திவா, பிடிச்சுக் கடலூருக்கு அனுப்பி வைக்கிறேன். சமையல் அறையில் மட்டுமில்லாமல் உங்க பக்கத்திலேயே வச்சுக்குங்க!:P:P:P:P

  ReplyDelete
 3. //வேஷ்டியையோ(ம்ஹும் இல்லை, இல்லை, புடவை இல்லை, நாம பிடிச்சா தேரை பயத்தில் நம்பர் ஒன், நம்பர் டூ எல்லாம் போனால், புடவை வீணாகாது?? அதான், எப்போவும் வேஷ்டிதான்) போட்டு அப்படியே பிடிப்பாங்க. //

  என்னா ஒரு வில்லத் தனம்? அப்போ வேஷ்டி வீணாப் போனா பரவால்லியா?

  ReplyDelete
 4. அங்கிளை அந்த தேரையைக் காலால் மிதிக்க சொல்லுங்க. அகலிகையா மாறி அதுக்கு சாப விமோசனம் கெடைக்குதான்னு பாப்போம். ஒரு வேளை அதுக்காகத் தான் உங்க வீட்டை விட்டுப் போக மறுக்குதோ?
  :)

  ReplyDelete
 5. என்ன கொடுமை இது தலைவீ! தேரையோடு போராட்டம் என இருக்க வேண்டிய தலைப்பு இப்படி மாற்றி போட்டுட்டீங்களே!:-))

  ReplyDelete
 6. இன்னும் இந்த வருடத்துக்கான மந்திரிசபையை தாங்கள் அறிவிக்கவில்லை என்பதை பொதுக்குழுவில் ஒரு தீர்மானமாக கொண்டு வர உத்தேசம், உங்க ஐடியா என்ன என்பதை அறிய அவா!

  ReplyDelete
 7. தலைவீவீவீ....;)))

  நல்லா விளையாடுங்கள் ;))

  ReplyDelete
 8. @கைப்புள்ள,
  அது வில்லத் தனமே இல்லை, நல்ல தனம். அப்புறம் வேறே புடவை வாங்கித் தரணும், உங்க அங்கிள், பரவாயில்லையா? :P:P:P:P

  ReplyDelete
 9. @கைப்புள்ள,
  இந்த ஞாயிறு அன்று ஒரு மணி நேரம் அதோட கண்ணாமூச்சி விளையாடி ஒரு வழியா அதைத் தோட்டத்துக்கே அனுப்பியாச்சு!

  ReplyDelete
 10. அபி அப்பா,

  //தேரையோடு போராட்டம்//

  போராட்டமே இல்லையே, அது கண்ணாமூச்சி தானே விளையாடிச்சு??புரியவே இல்லையே?

  ReplyDelete
 11. @அபி அப்பா,
  மந்திரி சபையிலே நிச்சயமா உங்களுக்கு இடம் கிடையாது. கை தட்டச் சொன்னால் வந்து தட்டவே இல்லை நீங்க.
  ஆயில்யனுக்கு மட்டும் போனாப் போகுதுனு வாரியத் தலைவ்ர் பதவி! :P

  ReplyDelete
 12. @கோபி, இங்கேயாவது உங்க கருத்தை எழுதி இருக்கக் கூடாதா? :))))))))))

  ReplyDelete