Thursday, October 1, 2009

பச்சைக்கலரு ஜிங்குச்சா! சிவப்புக் கலரு ஜிங்குச்சா!

இந்தப் பேருந்துப் பயணம் இருக்குப் பாருங்க, அதுவும் தருமமிகு சென்னைப் பேருந்துகளில் பயணம். எனக்கு எப்போவுமே அலர்ஜிதான். ஆனால் நாம என்ன அம்பானி வம்சமா?? (இப்போல்லாம் டாடா, பிர்லா இல்லை போலிருக்கே!) ஏறும்போது இங்கே பேருந்து நிலையம்கறதாலே பரவாயில்லை, ஏறி ஏதோ உட்காரவும் இடம் கிடைச்சுடும். சில சமயம் எனக்கு ஒரு இடமும், அவருக்கு ஒரு இடமும் கிடைக்கும் பாருங்க. அப்போத் தான் கொஞ்சம் பிரச்னையா இருக்கும். எந்த நிறுத்தத்துக்குச் சீட்டு வாங்கி இருக்கார், எங்கே இறங்கப் போறார்னு சில சமயம் புரியாது. அதுவும் நான் கையிலே கைப்பை வைச்சுட்டு வந்தேன்னாலே அவருக்கு அப்படியே என்னனு தெரியாமக் கோபம் வரும். அந்தக் கைப்பையைக்கண்டாலே பிடிக்காது. இதை ஏன் எடுத்துட்டு வரேனு சொல்லுவார். அதனால் சில சமயம் கையை வீசிட்டு வந்துடுவேன். அப்படித் தான் ஒரு சமயம் சொந்தக்காரங்க கல்யாணம் , பல்லாவரத்திலே. நல்லவேளையா கூடுவாஞ்சேரியிலே வைக்கலை.

பேருந்திலேதான் போகணும்னு அவர் அடம் பிடிச்சு, ஏறியாச்சு. அது ஆவடியிலே இருந்து வர பேருந்து வேறே. நான் ஒரு பக்கமா ஏறிட்டேன். அவர் வேறே பக்கமா ஏறி இருக்கார். நானோ கையிலே எதுவுமே வச்சுக்கலை, ஒரு கை துடைக்கும் துண்டைத் தவிர. என்னோட இன்ஹேலர் உள்பட அவர் கையிலே இருக்கும் பையிலே இருந்தது. கூட்டத்திலே எங்கே இருக்கார், ஏறினாரா தெரியலை. நான் ஏறி உட்கார்ந்துக்கவும் இடம் கிடைச்சு உட்கார்ந்துட்டேன். கையிலே பைசா கிடையாதுனா கிடையாது. கண்டக்டர் என்னமோ என்னைப் பார்த்தும் டிக்கெட் கேட்கலை. போயிட்டார். பக்கத்திலே இருக்கிறவங்க எல்லாம் டிக்கெட் எடுத்துட்டு என்னை ஒரு மாதிரியாப் பார்த்தாங்க. நான் பின்னாலே டிக்கெட் எடுக்கிறாங்கனு அவங்க கேட்காமலேயே விளக்கமும் கொடுத்தாச்சு. ஆனால் அவர் எடுத்தாரா இல்லையானு தெரியலை.

எங்கே இறங்கணும்?? கல்யாணச் சத்திரம் மெயின் ரோடிலேயே இருக்குனு சொன்னாங்க. மெயின் ரோடிலே மூணு சத்திரம் இருக்கே. சத்திரம் பேர் கூடப் பார்த்து வச்சுக்கலையே! உத்தேசமா இதுவாய் இருக்குமோ?? இறங்கலாமானு யோசிச்சுட்டு, முன்னால் இருந்தவங்க கிட்டே கொஞ்சம் நகருங்க, நான் இறங்கணும்னு சொல்லிட்டே எழுந்தால் பின்னாலே இருந்து அவர் குரல், இந்த ஸ்டாப் இல்லை, அடுத்ததுனு வருது. அப்பாடா! பெருமூச்சு விட்டேன். இல்லாட்டி ஜீவி சார் எழுதி இருந்த மாதிரிக் கணவனைத் தொலைத்த காரிகையா இல்லாம, அவர் மனைவியைத் தொலைத்த காரிகன்?? நல்லா இல்லையே, கணவன்னே வச்சுக்கலாமே. கணவனாக என்னைத் தேடிட்டு இருந்திருப்பார். ஆனாலும் அவர் கிட்டே எல்லாப்பணமும் இருந்ததே. நான் தான் பைசா இல்லாமல், என்ன பண்ணறதுனு முழிச்சுட்டு இருந்திருப்பேன்.

அப்பாடி, நம்ம கதைக்கு வருவோமே. முருகன் இட்லிக் கடைக்கு முன்னாலே இறக்கி விட்டுட்டாங்க. இதான் பனகல் பார்க், பாண்டி பஜார் எல்லாம்னு சொல்லி. சரி, கொஞ்ச தூரம் தானே நடக்கலாம்னு நடக்க ஆரம்பிச்சா நடக்கவே முடியாமல் நெரிசல் தாங்கலை. மேலே இடிக்கிறாப்போல ஆட்டோ, கார், சைக்கிள், ட்ரக், இன்னும் என்ன என்னமோ வண்டி எல்லாம் போகுது. வேறே வழியே இல்லை. செர்விஸ் லைன் அது. கீழே போகும் வண்டிங்க எல்லாம் போயே ஆகணும். நடைபாதைக்கும், சாலைக்கும் (சாலை???) நடுவே பெரிய பள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளம் தோண்டி வச்சிருந்தாங்க. எதுக்குனு புரியலை?? யாருக்கும் சொல்லவும் தெரியலை. ஒரு இடத்தில் அவர் பள்ளி நினைப்பில் பச்சைக் குதிரை தாண்டி அந்தப் பக்கம் போயிட, எனக்குத் தாண்ட முடியலை. விழுந்துட்டேன்னா என்ன பண்ணறதுனு பயம்! அப்புறமா ஒரு தூணைப் பிடிச்சுண்டு தாண்டப் போனா அவர் ஒரே அலறல். மின் கம்பம், வயர் எல்லாம் தொங்குது, தொடாதேனு.

பயத்துடன் தாண்டவே இல்லை. அப்பாடியோ, அம்பத்தூரே சொர்க்கம் போலிருக்கேனு நினைச்சேன். எந்த வயர் எங்கே தொங்குதுனு புரியும், எந்தப் பள்ளம் புதுசுனும் புரியுமே! பழைய பள்ளம் ஆழமா, புதுசு ஆழமானும் தெரியும் இல்லையா? மெல்ல மெல்ல ஒரு வழியா பனகல் பார்க் பகுதிக்கு வந்தால், ஒரே பெட்ரோல் நாற்றம். வரிசையாக வண்டிகள், வண்டிகள், வண்டிகள். வாய், மூக்கு எல்லாத்தையும் மூடிட்டு அதுக்கு ஊடாகப் புகுந்து போய் அந்தப் பக்கம் போனோம். ஏண்டா வந்தோம்னு ஆயிடும். மெதுவாய் நடைபாதைக் கடைகளைத் தாண்டிக் கொண்டு, நல்லிக்குப் போனோம். அதுக்குள்ளே மணி 12-15 ஆகி இருந்தது.

நேரே புடைவையில் நான் போகவேண்டிய செக்ஷனுக்குப் போனேன். ஏற்கெனவே ஒப்பன் டெண்டரில் கொடேஷன் கொடுத்துட்டேன். நல்லவேளையாக் கொடுத்த கொடேஷனைவிடக் குறைச்சலாவே புடைவைகள் கிடைத்தன. :P (கொஞ்சம் புத்திசாலித் தனமாய் யோசிச்சுக் கூடுதல் விலையை வச்சுக் கொடேஷன் கொடுத்துட்டேன்.) புடைவைகளைப் பார்த்தோம். வழக்கம்போல் எனக்கு ஒரு கலர் பிடிக்க, அவருக்கு பச்சை தவிர வேறே கலர் பிடிக்கவே இல்லை. பச்சையிலேயே கொஞ்சம் வெளுத்த பச்சையில் ஒரு புடைவையும், செங்கல் பொடிக் கலரில் இன்னொரு புடைவையும் எடுத்தோம். மணி 12-20 ஆகிவிட்டது. மாடியில் தான் பாண்ட் செக்ஷன் என்று சொல்ல மாடிக்கு லிஃப்டுக்கு நின்னால் வரவே இல்லை. படிகள் ஏறினால், போறவங்க, வரவங்க எல்லாம் என்னைப் பார்த்து ஏங்க, இப்படி சிரமப் பட்டு மாடி ஏறணுமா? லிஃப்டில் மெதுவா வரக் கூடாதுனு கேட்க, வெட்கம் அடைந்த நான் கொஞ்சம் சுறுசுறுப்பாயும் வேகமாயும் நடக்க முயலக் கால் ஒத்துழைக்காமல் இழுக்க, ஒருவழியாய் மாடி ஏறி, மறுபடி லிஃப்டில் கீழிறங்கி, ஏறி, அப்பாடி தலை சுத்துதா? எங்களுக்கும் தான். ஒரு வழியா பாண்ட் செக்ஷன் போனால் எடுத்துப் போட ஆளே இல்லை. கெஞ்சிக் கூத்தாடி, ஒரு ஆளைக் கூப்பிட்டுக் காட்டச் சொல்லிக் காட்டனில் ஒரு பாண்ட் எடுத்துக் கொண்டு பணம் கட்டிட்டுக் கீழே வந்து அப்பாடா, இந்த வருஷம் தீபாவளி பர்சேஸ் முடிஞ்சதுனு பெருமூச்சு விட்டோம்.

அங்கே இருந்து பாண்டி பஜார் காதிக்குப் போய் வேஷ்டிகள் எடுத்துக் கொண்டு, கீதா கஃபேயில் காஃபி சாப்பிட்டுவிட்டுப் பொடி நடையாய் நாயர் ரோடு வந்து அம்பத்தூர் பேருந்தைப் பிடிச்சு வந்து சேர்ந்தோம். இந்த வருஷம் தீபாவளிக்கு பச்சைக் கலர் ஜிங்குச்சா! சிவப்புக் கலர் ஜிங்குச்சா! ம்ம்ம்ம்ம்., ஒரு காலத்தில் தீபாவளிக்குனு ஒரு நாள் செலவு செய்ஞ்சு போய் எங்க வீட்டு நாய்க்குட்டியிலே இருந்து, எல்லாருக்கும் துணி எடுப்போம். நாங்க எப்போடா திரும்பி வருவோம்னு எல்லாரும் காத்திருப்பாங்க, பார்க்கிறதுக்கு.இப்போ எங்க இரண்டு பேருக்கும் எடுக்கவே இத்தனை கஷ்டமாய் இருக்கு.

17 comments:

  1. ஸ்வாமி
    படிச்சுட்டு ஒரே சிரிப்பு. எனக்கு என் அம்மா அப்பா ந்யாபகம் வந்தது.கூடவே என் டெல்லி அனுபவங்கள் ந்யாபகமும் வந்தது கல்யாணம் ஆன புதுசில் இவர் சொல்லியும் கேட்காம அவனுக்கு தெரியாதுன்னு என் மாமியார் டிடிசி பஸ் ல கூட்டிண்டு போஹ படிக்க தெரிந்து பேச பழக்கமில்லாத பாஷை , கூட்டமான கூட்டம், அம்மா முன்னால போயிட நான் கூட்டதுக்கு நடுவே மாட்டிண்டு அழுகை அழுகையா வர, அவர் நடுவுல இற்ங்கிட்டர் , நான் பஸ்ல. பயந்து செத்து., கிழே இருந்து அம்மா " அரே ரூகோ காடி ரூகோ ஹமாரா பேடி அந்தர் ஹை ஆனேதொ நு கத்த கண்டக்டர் அம்மாஜி கோயி பேடிவேடி நை ஹை ஒதொ உதர் கயி ங்கரார். ஆஞ்சனேயா நு ஒரே ஓலம் மனசுக்குள்ள.அது யாருக்கு கேட்கும். கடைசில இரெண்டு சர்தார்ஜி மஹானுபாவர்கள் என் ரெண்டு கையையும் ஆளுக்கு ஒருபக்கம் பிடிச்சு தூக்கி பஸ்லேந்து கீழ இற்க்கி அம்மா பக்கதுல நட்டினாப்பல விட்டார்கள் . தாங்க்ஸ் சொல்ல கூட கிடைக்கல.பயத்துல ஆடி வீட்டுக்கு வந்தோம்.அந்த பஸ்லியா இவரொட சபார்டினேட் இருக்கணும்!! இவர் சாயந்திரம் வந்து பஸ்ல சொல்ல சொல்ல போனியாங்கரச்சே லிட்டர் லிட்டரா எங்க ரெண்டு பேர் மூஞ்சிலையும் வேர்வையும் அசடும் வழிந்தது.

    ReplyDelete
  2. ம்ம்ம்...எப்படியோ தீபாவளி வசூல் முடிந்தது. :)

    ReplyDelete
  3. 5 நிமிடத்தில் இரண்டு புடவையா?

    கின்னஸ் சாதனைக்கு அனுப்பியாச்சா?

    நீங்க எங்கய்யா போயிட்டீங்க :)

    ReplyDelete
  4. ஜெயஸ்ரீ!

    உங்க கதை உண்மையிலே செம காமெடியா தான் இருக்கு இப்போ படிக்க :)

    எல்லாருக்கும் இது போல் ஒரு அனுபவம் இருக்க தான் செய்யும் போல ;)

    ReplyDelete
  5. ம்ம்ம்ம்ம் தீபவளிக்கு ஒரு மாசம் முன்னாலே வீட்டுக்கு புடவைக்காரர் வந்து கடையை விரிச்சு.....எங்கே போச்சு அந்தக்காலம்?

    ஆமா ஜெயஸ்ரீ அக்கா அதென்ன ஸ்வாமி?

    ReplyDelete
  6. வாங்க ஜெயஸ்ரீ, இந்த பர்ஸ் கையிலே இல்லாமல் எனக்கும் அநுபவம் ஏற்பட்டிருக்கு. நல்லவேளையா எந்த கண்டக்டரும் என்னை டிக்கெட் ஏன் எடுக்கலைனு கேட்டதில்லை. அந்த வரை பிழைச்சேன். :))))))

    ReplyDelete
  7. ஹிஹி கோபி, வசூல்ங்கறீங்க??? சரி, வச்சுப்போம்! :D

    ReplyDelete
  8. //நீங்க எங்கய்யா போயிட்டீங்க :)//

    எங்கே போறது புலி??? சுத்திச் சுத்தி அம்பத்தூர் தான்! :P

    ReplyDelete
  9. புடவைக்காரர் இப்போவும் வரார் திவா, ஆனால் முன்னைப் போல் நம்பி எடுக்க முடியலை! :(((((

    அப்புறம் ஐயா, சாமி விட்டுடுங்கனு சொல்றதில்லையா? அந்த அர்த்தத்திலே தான் ஜெயஸ்ரீ எழுதி இருக்காங்கனு நினைக்கிறேன். :)))))

    ReplyDelete
  10. Mr Diva
    It is just an expression / figure of speech.Pazhakka dosham! Avvolavu than:))
    மிஸஸ் சிவம் கைல handbag, கொஞ்சம் காசு வைத்துக்கொள்ளத்தான் வேணும்.அது என் வாழ்கையில ஒரு மறக்கமுடியாத ஒரு அனுபவம் தந்த பாடம்.
    திருவண்ணமலை கார்திகை சோமவாரத்துக்கு கிரிவலம் போன சமயத்துல என் அம்மா தொலைந்து போயிட்டா. அவளுக்கு வெளீல வாசல்ல தனியாபோய் பழக்கமும் கிடையாது. கையில் ஹண்ட் பாக் காசும் கிடையாது. சர்வமும் அப்பாதான்.கூட்டத்துல நாங்க அப்பா எல்லாரும் ஒண்ணா போய் இவ தனியா போயிட்டா. 3 மணீ நேரம் தேடியும் கிடைக்கல. ரொம்ப பயம், வேதனை தாங்காம அண்ணமலையான் சன்னிதானத்துல ஒரு 11.30 மணி இருக்கும், நுழைஞ்சப்போ என்னைதவிர அந்த momentல யாரும் இல்லை. நம்மை மீறி அழுகை வந்து ரொம்ப விசும்பி சின்னகுழந்தை மாதிரி நான் அழறேன். திடீர்ன்னு யாரோ வயசானவர் என் பின்னால நின்னுண்டு, வெளிய போய் காஃபி குடிம்மா என்றார்.இவர் எப்படி என் சைட் நிக்கறார்னு தோனித்து. நமக்குத்தான் சந்தேகம் உண்டே. பார்த்தா அழுக்கா காவி தலையை போத்திண்டு தர்மம் வாங்கற்வர் மாதிரி. கையில ஒரு அலுமினியம் சின்ன வாளி இருந்தது. நாம அழறத இன்னொரு மனுஷர் பாத்துட்டரே நு ரொம்ப லஜ்ஜையாவும் ரோசமாவும் போச்சு. வெளியே வந்து குழந்தைகளையும் அப்பாவையும் உட்கார வைத்துவிட்டு நானும் இவரும் மறுபடி தேடபோனோம். நான் வெளியே வந்து புஸ்தகம் விற்கிறவர் பக்கத்தில் நின்னுண்டு பாக்கறேன் ஒரெ ஜனசமுத்திரம்.பயம், எங்கேயாவது நகைக்கு ஆசைபட்டு அம்மாவை யாராவது கொன்னுட்டா ந்னானு பயம். மறுபடியும் அந்த பெரியவர் சொன்னது காதில் ஒல்லிக்கற மதிரி தோனித்து. புஸ்தககாரர் என்னம்மா மனசு சரியில்லயா கண்ணெல்லம் கலங்கி இருக்கே நு விஜாரணை.அவர் கிட்ட என்ன சொல்ல அம்மாவை தொலச்சிட்டேன்ன? அவர் கிட்ட இங்க காஃபி நல்லதா எங்க கிடைக்கும் னு கேட்டேன் . அவர் எதுதாப்பல ஒரு வீடு மதிரி படி வச்சு ஒரு இடத்தை காமிச்சு "அய்யர் coffee நல்லா போடுவார்மா என்றார். அந்த இடத்துக்குள்ள ஏறி உள்ள போனா அம்மா பயம் வருத்தம் எல்லாம் சேந்து முகத்துல தெறிய உடம்பெல்லாம் நடுங்க உக்காந்துண்டு இருக்கா . அவளை கூட்டிண்டு வெளில வரச்சே வெளில அந்த பெரியவர் நின்னுண்டு ரெண்டு கையையும் தூக்கி ஆசிர்வதிச்சமாதிரி காட்டிட்டு போயிட்டார்.எனக்கு பல வருஷங்களுக்கு பிறகு பூனா பக்கதுல முந்தி ஒரு திவ்ய க்ஷேத்ரத்துக்கு போவேன் அந்த மஹான் என் குருநாதரை பாத்தது போல இருந்தது அன்னிலேந்து அம்மாவும் ஹண்ட்பாக் காசு, தன் அட்ரஸ் ஃபோன் புக் சஹிதம் வெளில போறா. செல்ஃபோன் சொல்லிதந்துஇருக்கேன் பண்ணறா . இது என்னை ஆட்டிய ஒரு விஷயம்.

    ReplyDelete
  11. //Mr Diva
    It is just an expression / figure of speech.Pazhakka dosham! Avvolavu than:))//

    ஓஹோ! சரிதான். அப்புறம் நான் diva இல்லை thivaa.

    ReplyDelete
  12. //திடீர்ன்னு யாரோ வயசானவர் என் பின்னால நின்னுண்டு, வெளிய போய் காஃபி குடிம்மா என்றார்.//

    நல்ல அனுபவம்!

    ReplyDelete
  13. //அப்புறம் நான் diva இல்லை thivaa.//

    ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

    ReplyDelete
  14. ஜெயஸ்ரீ, அருமையான அநுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

    ReplyDelete
  15. இதைப் பத்தி முன்னாலே போட்ட கமெண்ட் எங்கே போச்சு??? க்ர்ர்ர்ர்ர்ர்ர் பின்னூட்டப் பெட்டி இதையெல்லாமா முழுங்கும்??? :P

    ReplyDelete
  16. இங்க கூட பச்சைதான். அதென்னவோ என்னைவிட்டுப் போக மாட்டெங்கறது:)
    நல்லவேளை எங்களுக்குக் கடையெல்லாம் இப்படி அலைய வேண்டாம்.
    சிரிச்சு சிரிச்சு வாய்வலிக்கிறது.

    ReplyDelete
  17. போறது விடுங்க வல்லி, பச்சையே இருந்துட்டுப் போகட்டுமே! அப்புறம் நல்லிக்கெல்லாம் எப்போவோ பட்டுப் புடைவை எடுக்கனு மட்டும் வரது தான் எனக்குச் சரியா இருக்கும். நான் போக ஆசைப்படறது ஹாண்ட்லூம் ஹவுஸ், ரத்தன் பஜாரிலே தான். கூட்டமே இருக்காது. நான் மட்டும் தனியா புடைவை செலக்ட் செய்யலாம், வீட்டிலே இருந்து அரைமணி நேரம் தான் ஆகும் போகவும். செலக்ட் பண்ணப் பதினைந்து நிமிஷம்,. திரும்ப அரை மணி! :)))))))))))))

    ReplyDelete