Thursday, January 13, 2011

ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!


விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும்பு அடியார்
எண்ணகத் தாய்உல குக்குஉயிர் ஆனாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்=ஒளிமயமான விண்ணுலகில் வசிக்கும் தேவர்களும் அணுகமுடியாத , காணமுடியாத இறைவன், ஒளியும், இருளும் நிறைந்த பூமியில் வசிக்கும் நம் போன்ற அடியார்களும் தொண்டு செய்து உய்யுமாறு

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்= இந்த மண்ணகத்துக்கு வந்து நம்மை எல்லாம் வாழச் செய்தான். நாம் பிறவி எடுத்ததே இவ்வண்ணம் இறைத்தொண்டு செய்யவேண்டியே. அதுவும் பரம்பரை பரம்பரையாய்ச் செய்து வருகிறோம். வண்மை பொருந்திய திருப்பெருந்துறை ஈசனே, உமக்கு நாங்கள் வழி வழியாய் அடியார்களாய் இருக்கின்றோம்.

கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும்பு அடியார்= எங்கள் கண்ணின் மணியாக இருந்து எங்களுக்குப் பார்வையைத் தந்து களிப்படைய வைக்கும் தேனினும் இனியவனே, பாற்கடலில் வந்த அமுதானவனே, நற்கரும்பே, இங்கே கரும்பைச் சுட்டியது அடிமுதல் நுனி வரையிலும் இனிப்பான கரும்பைப் போல் ஈசனும் இனிமையானவன் என்பதற்காக. உம்மை விரும்பி நாடிடும் அடியார்கள்

எண்ணகத் தாய்உல குக்குஉயிர் ஆனாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே= எண்ணத்திலே உணர்வு பூர்வமாய் எழுந்தருளி இருப்பவனே. உலகத்து உயிர்கள் அனைத்துக்கும் உயிர் தந்து காத்து ரக்ஷித்து ஆள்பவனே, எம்பெருமானே, எம் உள்ளத்தில் வந்து பள்ளி எழுந்தருள்வாய்.

4 comments:

  1. விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா..என்ற பாடலில்,///உன தொழுப்படி யோங்கள்/// எனவுள்ளது. யோங்கள் என்பது விளங்கவில்லை. இணையங்களில் தேவார திருவாசகங்களை, வேண்டியபோது தேடிப்பெற முடிகின்றது. ஆனால் கருத்துக்களைப் புரிந்துகொள்ள வசதிகள் இல்லை. கடவுள் அருளால் www.dosai.com மூலம் தேடிய போது உங்கள் வலைபூவைக் கண்டேன். மட்டில்லா மகிழ்ச்சி. உங்கள் சேவை மகேசன் சேவை.மேலும் சிறந்த முறையில் கருத்துக்கு விளக்கம் தந்தால் நல்லது. நன்றி

    ReplyDelete
  2. விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா..என்ற பாடலில்,///உன தொழுப்படி யோங்கள்/// எனவுள்ளது. யோங்கள் என்பது விளங்கவில்லை. இணையங்களில் தேவார திருவாசகங்களை, வேண்டியபோது தேடிப்பெற முடிகின்றது. ஆனால் கருத்துக்களைப் புரிந்துகொள்ள வசதிகள் இல்லை. கடவுள் அருளால் www.dosai.com மூலம் தேடிய போது உங்கள் வலைபூவைக் கண்டேன். மட்டில்லா மகிழ்ச்சி. உங்கள் சேவை மகேசன் சேவை.மேலும் சிறந்த முறையில் கருத்துக்கு விளக்கம் தந்தால் நல்லது. நன்றி

    ReplyDelete
  3. தொழுப்பு+அடியோங்கள்= இந்த இடத்தில் உனக்கு என்றென்றும் அடிமையாக இருக்கும் எங்களைப் போன்ற அடியோர்கள் எனப் பொருள் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். நன்றி வரவுக்கும், கருத்துக்கும். நீங்கள் தேவாரம் தளத்தில் சென்று பார்க்கவும்.

    http://www.thevaaram.org/ இங்கே பொருளோடு கிடைக்கும். கீழே உள்ள தளத்தில் பாடல்கள் கிடைக்கின்றன.

    http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_085.htm

    ReplyDelete