இப்போ முதல்லே இருந்து பார்க்கலாமா?? சென்னையை விட்டுக் கிளம்பி ரயிலில் ஏறியதுமே முதல் அதிர்ச்சி, அந்தப் பெட்டியின் சைட் பெர்த் இரண்டு எங்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்ததில், நடுவில் இருந்த மூன்றாவது படுக்கும் வசதி கொண்ட பலகையே. இந்தப் பெட்டியில் பக்கவாட்டில் உட்காரும் மூவருக்குமே அவதி தான். இதைக் குறித்துப் பல எதிர்ப்புகள் வந்தும், இன்னும் அதை அகற்றாமல் இருக்கும் ரயில்வே நிர்வாகத்தை என்ன சொல்வதுனு புரியலை. லாலுவை ரயில்வேக்கு அதிக லாபம் சம்பாதித்துக் கொடுப்பதாய் அனைவரும் பாராட்டுவதில் எனக்கு உடன்பாடே இல்லை. ஏனெனில் முந்தைய அரசில் ரயில்வே மந்திரியாக இருந்தவர் போட்டு வைத்த ராஜபாட்டையில் சுகமாய்ப் பயணிக்கின்றார் லாலு என்பது ரயில்வே நிர்வாகமே நன்கு அறிந்த ஒன்று. நிர்வாகத் திறமை கொண்டவராய்ப் பேசப் படும் லாலுவால் சொந்த மாநிலத்தை முன்னேற்ற முடியவில்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படிப் பட்டவர் செய்த இந்த வசதியைக் குறித்து என்னத்தைச் சொல்றது? இந்த யோசனை வந்த லாலுவோ, அல்லது அதை வடிவமைத்த அதிகாரியோ அதில் ஏறிப் படுத்துப் பார்த்திருக்கவேண்டும். நல்லவேளையாகக் கடவுள் கருணையால் நடுவில் இருந்த படுக்கும் வசதிக்கு பரோடா செல்லும் வரையிலும் யாருக்கும் கொடுக்கவில்லை. மேலே ஏறிப் படுத்துக் கொண்ட என் கணவருக்குக் கீழே இறங்க முடியாமல் பட்ட அவஸ்தை! பணத்தைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதை தான்! :(((((( ஏப்ரலில் இருந்து அந்தப் படுக்கும் வசதி நீக்கப் படும் என விஜயவாடாவுக்குப் பின்னர் வந்த பயணச்சீட்டுச் சோதனையாளர் கூறினார்.
சாப்பாடு நல்லவேளையாகக் கையில் எடுத்துக் கொண்டு போயிருந்தோம். வாங்கியவர்கள் சாப்பிட முடியாமல் தவித்ததைக் காண முடிந்தது. அவ்வளவு காரம் எனச் சொன்னார்கள். சின்னக் குழந்தைக்குக் கொடுக்கும் சர்க்கரைத் தண்ணீர் போல காஃபி, டீ போன்றவை. தயிரும், மோரும் கொஞ்சம் பரவாயில்லை, விலை அதிகமானால் கூட. ரயில்வே கொடுக்கும் உணவின் தரத்தை உயர்த்தி இருப்பதாய்ச் சொல்லும் லாலுவோ, அல்லது சக மந்திரிகளோ, அல்லது அதிகாரிகளோ ரயிலில் பயணிக்கப் போவதில்லை. பயணித்தாலும் தனியாக அனைத்தும் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப வழங்கப் படும். சாமானியர்களின் கஷ்டம் அவர்களுக்குப் புரியப் போவதில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் லாலுவைப் பாராட்டியே ஆகவேண்டும். நாங்கள் சோம்நாத் சென்றிருந்த போது தரிசனம் முடிந்து வெளியே வந்து, அங்கே இருந்த நடமாடும் கழிப்பறை வசதிக்குப் பொறுப்பாக இருந்தவர்களிடம் கஷ்டப் பட்டு நாங்கள் ஹிந்தியில் கேட்க, அவங்க குஜராத்தியில் மறுமொழி சொல்ல பேட்டி கண்டு கொண்டிருந்த சமயம் சைரன் ஒலிக்க ஒரு வண்டி வந்தது.
யாருனு பார்த்தால் திருவாளர் லாலுவே தான். ஆஹா, நம்ம சுற்றுப் பயண விபரம் தெரிந்து தான் நம்மைச் சந்திக்க வந்திருக்கார் போலிருக்கு. இல்லைனா ரயிலில் நாம சண்டை போட்டது தெரிஞ்சு சமாதானம் சொல்லத் தேடிட்டு வந்திருக்கார்னு நினைச்சேன். :P:P:P:P கடைசியில் பார்த்தால், (முதல்லே இருந்தே தான்) லாலு சோம்நாத் கோயில் தரிசனத்துக்கு வந்திருந்தாராம். ஒரு வண்டியில் லாலுவும், மற்றொரு வண்டியில் மாநிலக் காவல் துறையின் பாதுகாப்புக்களும், லாலுவுக்காக ஒரு ஆம்புலன்ஸும் ஆக மொத்தம் மூன்று வண்டிகளையே பார்த்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் மயக்கமே வந்துடுச்சு. அட, அதான் போகட்டும், அவரோட கட்சிக் கொடியையாவது பறக்க விடக் கூடாதா? ம்ஹூம், பறக்கவே இல்லைங்க, இது என்ன அநியாயம்னு புரியலை. ஆனால் இந்த அநியாயம் தமிழ்நாடு தாண்டினதும் ஆந்திராவில் இருந்தே ஆரம்பிக்குது.நர்மதை, பரூச்சிற்கு அருகே கடக்குமிடம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு இல்லாமல், சுத்தமாயும் இருக்குதுங்க. ஆச்சரியமா இருந்தது. ப்ளாஸ்டிக் குப்பைகளே நீர்நிலைகளில் காண முடியவில்லை. கிருஷ்ணாவில் தான் அப்படினா, நர்மதா, தாபி(தமிழ்நாட்டு உச்சரிப்பு தப்தி)
போன்ற நதிக்கரைகளிலும் அப்படித் தான் இருக்கு. என்ன மக்கள் போங்க! ஒரு துணி துவைக்கிறது, குளிக்கிறது, லாரியைக் கழுவறது, மாட்டு வண்டிகளைக் கழுவறதுனு பார்க்க முடியாமல் நொந்து போயிட்டேன் போங்க!
கிருஷ்ணா நதியைக் கடக்குமிடம், விஜயவாடாவுக்கு அருகே! ஆகாயத் தாமரைக் கொடிகளோ, மற்ற செடி, கொடிகளோ காண முடியவில்லை. நீரும் கொள்ளிடம், காவிரி போலக் கறுப்பாய் இல்லை. நாம் எப்போ அப்படி மாறப் போறோம்????????? அங்கங்கே செக் டாம்கள் எனப்படும் தடுப்பணைகளும், அவை விவசாய நிலங்களுக்குச் செல்லத் தோதான கால்வாய்களையும், குடியிருப்புகளுக்குச் செல்லுமிடங்களில் நீர் இறைக்கும் பம்ப்செட்களும் காணப் படுகின்றன. எல்லாவற்றிலும் முக்கியமானது ஆளில்லா லெவல் க்ராசிங் ஆனாலும் மக்கள் நின்னு ரயில் போகும் வரையில் காத்திருந்து பின்னர் கடக்கின்றனர். பொதுவாக வட இந்திய மக்கள் பேச்சும், பழக்கமும் நம்மைப் போன்ற தென்னிந்தியருக்கு அலட்சியம் கலந்தும், பொறுப்பில்லாமையாகவும் தெரியும்.
ஆனால் அப்படி இல்லைனு பழகினாலோ, அல்லது நெடுநாட்கள் அங்கே தங்கி இருந்து பார்த்தாலோ புரியும். எங்களோட குஜராத்தில் 25 வருடங்களுக்கு மேலாக இருந்து தொழில் புரியும் ஒரு தொழிலதிபரும் பயணித்தார். அவர் சொன்னது எல்லாமே ஆச்சரியமாகவே இருந்தது. 24 மணி நேரம் மின் விநியோகம், குடி நீர் விநியோகம். செளராஷ்ட்ரா, கட்ச் பகுதியில் தண்ணீருக்கு மக்கள் கஷ்டப் படாமல் இருக்க ஏராளமான ஏற்பாடுகள். வேலை வாய்ப்பில் இந்தியாவிலேயே முதன்மைத் தகுதி வாய்ந்த மாநிலம். இந்த விஷயம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் 15-ம் தேதியிட்ட பதிப்பில் தலைப்புச் செய்தியாகவும் வந்துள்ளது. தொழில் தொடங்குவோருக்குத் தடையில்லாத உள்கட்டமைப்பு வசதிகள். மக்களுக்குத் தொந்திரவில்லாமல் இடம் வாங்கிக் கொடுப்பது தொழில் முனைவோருக்கு. அதில் இரு தரப்பினரும் மோத முடியாத அளவுக்குக் கவனமாக இடத்தைத் தேர்ந்தெடுத்தல் என்று சாமானியர்களைக் கவனத்தில் வைத்து முடிவுகள் எடுக்கப் படுகின்றன. அந்த அளவுக்கு மாநில முதலமைச்சர் உழைத்திருக்கின்றார் என்றால் மக்கள் அனைவருமே அவருக்குத் தோள்கொடுக்கின்றார்கள். இது ஒரு குழுவாகச் செயல்படுவதன் வெற்றி என்றே தோன்றுகின்றது. இன்னும் சோம்நாத், துவாரகை, டாக்கூர், பரோடா, போன்ற ஊர்களில் உள்ள சாமானிய மனிதர்களான ஆட்டோ ஓட்டிகளில் இருந்து துணிக்கடைக் காரர்கள், பலவிதமான வியாபாரிகளிடமிருந்து பேசியதில் குஜராத் நிஜமாகவே முன்னேறிக் கொண்டிருக்கின்றது புரிய வந்தது. ஆனால் வேறு சில மாற்றங்களும் உண்டு.
Saturday, February 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
//முதல் அதிர்ச்சி, அந்தப் பெட்டியின் சைட் பெர்த் இரண்டு எங்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்ததில்,//
ReplyDeleteஏங்க முதல்லேயே பாத்து புக் செய்யக்கூடாதா? சைட்லே வேணாம் ன்னு சொல்லி இருக்கலாமே! பாவம் சாம்பு சார்!
//இல்லைனா ரயிலில் நாம சண்டை போட்டது தெரிஞ்சு சமாதானம் சொல்லத் தேடிட்டு வந்திருக்கார்னு நினைச்சேன். :P:P:P:P//
சமாதானமா? தெரிஞ்சு இருந்தா அந்த பக்கமே வந்து இருக்கமாட்டாரே!
:P:P:P:P
மீதி படிச்சா எனக்கு பலமான சந்தேகம். கண்ட கனவை எழுதரிங்களா? இல்லை நெசமா போய் வந்தீங்களா?
எனக்கு அங்க ஏதாவது வேலை கிடைக்குமான்னு சொல்லுங்க போயிடலாம்!
:P:P:P
.//ஏங்க முதல்லேயே பாத்து புக் செய்யக்கூடாதா? சைட்லே வேணாம் ன்னு சொல்லி இருக்கலாமே! பாவம் சாம்பு சார்!//
ReplyDeleteசைட் தான் வேணும்னு கேட்டிருந்தோம், அப்போ இந்தப் பிரச்னை இல்லை. டிக்கெட் தான் மூணு மாசம் முன்னாலே வாங்கிட்டாங்களே! :(((((
//சமாதானமா? தெரிஞ்சு இருந்தா அந்த பக்கமே வந்து இருக்கமாட்டாரே!
ReplyDelete:P:P:P:P//
அட, போங்க, நீங்க வேறே, இப்போ தேர்தல் அறிவிச்சாச்சே, கூட்டணிக்குத் தலைமை தாங்கறதுக்காக வந்து தேடி இருப்பார் போலனு நான் நினைச்சுட்டிருக்கேன்! :P:P:P:P:P
//மீதி படிச்சா எனக்கு பலமான சந்தேகம். கண்ட கனவை எழுதரிங்களா? இல்லை நெசமா போய் வந்தீங்களா?//
ReplyDeleteகனவெல்லாம் இல்லை, நிஜம் தான், ஒரு சில குறைகளும் இருக்கு, ஆனாலும் பொதுவான அபிப்பிராயம் ஆட்சி சிறப்பாய் இருக்குன்னே. மாற்று மதத்தவர்களைக் கூடப் பேட்டி கண்டாச்சு! அவங்களும் இதே அபிப்பிராயம் தான் சொல்றாங்க. முக்கியமாய் வேலை வாய்ப்பு அதிகரித்திருப்பதோடு, பணியிடங்களும் தகுதியைப் பார்த்து நிரப்பப் படுகின்றன என்றும் சொல்கின்றனர்.
//எனக்கு அங்க ஏதாவது வேலை கிடைக்குமான்னு சொல்லுங்க போயிடலாம்!
:P:P:P//
எங்கே? நீங்க??? கடலூரை விட்டுட்டு??? ஒரு முறை போய்ப் பார்த்துட்டுத் தான் வாங்க!
அப்பாடி, பதிலைப் பிரிச்சுச் சொன்னதின் மூலம் கமெண்ட்ஸ் எண்ணிக்கையைக் கூட்டியாச்சு! பிள்ளையாரே, தாங்கீஸ், உனக்கு, ஐடியா கொடுத்ததுக்கு!
ReplyDeleteநீங்க அஹோபிலத்தில நரசிம்மரை தேடி சுத்திக்கிட்டிருக்கீங்கன்னு நெனச்சா இங்கே பரோடாவும் துவாரகையுமா!!
ReplyDeleteஅம்மாடி உங்க ஸ்பீட் நமக்கு வராது :(
நரசிம்மர் காட்டிலேயும் சரி பரோடாவிலும் சரி செல்போன் காமிரா தானா? கொஞ்சம் இயற்கை காட்சியை பெரிசிலேயே புடிச்சு போடறது. திவா அண்ணாவாயிருந்தா ஒரு பனோரமா வ்யூ போட்டிருப்பாரே :))
( அப்பாடா பின்னூட்ட எண்ணிக்கை ஏழாயிடுச்சு-நீங்க போடற பதிலையும் சேர்த்துதான் :) )
//திவா அண்ணா//
ReplyDelete@கபீரன்பன், You too Brutus??????:P:P:P:P:P:P:P
கொஞ்சம் இயற்கை காட்சியை பெரிசிலேயே புடிச்சு போடறது. திவா அண்ணாவாயிருந்தா ஒரு பனோரமா வ்யூ போட்டிருப்பாரே :))
ReplyDeleteஅவர் பனோரமா மட்டுமா போடுவார்? ஒலி, ஒளிக் காட்சியே போடுவார் போங்க,
பாதி பதில் கொடுக்கும்போதே, கணினியை மூடும்படி ஆயிடுச்சு!
ReplyDeleteஉங்க கண்ணோட்டத்தில் இது ஒரு பின்னூட்டம் கூடக் கொடுத்தாச்சு, ஓகேயா? :))))))))