Wednesday, March 4, 2009

இது என்ன அநியாயம் பாருங்க???

இந்த கணினியைத் தான் சொல்றேன். இத்தனை நாட்களாய்த் தொந்திரவு தாங்கலை. ஒண்ணும் போஸ்டே போட முடியலை. திவா ஒரு லிங்க் கொடுத்து அங்கே இருந்து போடுங்கனு சொன்னார். அதிலேயும் போட முடியலை. ஒரே ப்ளாங்க் பக்கமாவே வந்துட்டு இருந்தது. எப்போவோ அனுமதி கிடைக்கும் நேரத்தில் ஒரு சிலரின் பதிவுகளில் கமெண்டினேன். அதுவும் பிடிக்கவில்லை இந்த ப்ளாகருக்கு. சிலரின் பதிவுகளைப் படிக்கிறதோடு நிறுத்திட்டிருக்கேன். ஆனால் பின்னூட்டங்களை நோட்பேடில் எழுதி, காபி, பேஸ்ட் செய்தால் ஒண்ணும் பண்ணலை. அந்த மாதிரி நேத்திலே இருந்து சில பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டு வருகின்றேன். ஒரு தொழில் நுட்ப நிபுணரைக் கூப்பிட்டு இருக்கேன் வந்து பார்த்து என்னனு கேட்க. அவங்களுக்குச் சின்னக் குழந்தை இருக்கு. அழுகிறது. அது தூங்கும் நேரம் பார்த்து வரணும். பார்க்கலாம் இன்னிக்காவது முடியுதான்னு.

அதுக்குள்ளே நெருப்பு நரியிலே இருந்து முயலலாம் எனப் பார்த்தால் நேத்திப் பூரா அனுமதியே கிட்டலை. வேறே லிங்க் திறக்கும்போது நெருப்பு நரி தான் வருது. ஆனால் நான் ஜிமெயில் லாகின் பண்ணினால், வேறே இன்னொருத்தர் இதே device லே இருந்து லாகின் பண்ணி இருக்காங்க, உன்னை உள்ளே விடமுடியாதுனு சொல்லிட்டு இருந்தது. ஆனால் நான் எக்ஸ்ப்ளோரரில் சைன் அவுட் பண்ணிட்டுத் தான் வெளியே வருவேன். என்னமோ போங்க, தொழில் நுட்ப நிபுணியைக் கேட்டால், " அட, இது என்ன புதுசா இருக்கு? உங்க கணினியோட அதட்டல், மிரட்டல் எல்லாம்? நாங்க ஒரே சமயம் 2,3 ஜிமெயில் அக்கவுண்ட் திறந்து வச்சுப்போமே!"னு சொல்றாங்க. அட, அதானா எல்லாரும் டாமேஜருக்குத் தெரியாம சாட்டறதும், ப்ளாகறதும் இப்படித் தானானு புரிஞ்சுதே தவிர, என்னோட கணினி என்னை அனுமதிக்கவே மாட்டேங்குது.

ஒருவேளை எனக்கும் டாமேஜர், இல்லைனா வேறே யாராவது அனுமதிக்கலைனு இருந்தால், திருட்டுத் தனமாய்ப் பார்க்க மட்டுமே அனுமதிக்குமோ? அதுவும் புரியலை, போங்க. ஆனால் இன்னிக்குக் காலம்பர இருந்து எக்ஸ்ப்ளோரர் கிட்டேவே வராதேனு சொல்லிட்டது. நொந்து நூலாய்ப் போய் நெருப்பு நரியை முயன்று பார்க்கலாம்னா, என்ன ஆச்சரியம் போங்க! நெருப்பு நரி, இன்னிக்கு ஒண்ணுமே சொல்லலை. வேகமாயும் இருக்கு. தரவிறக்கம் செய்யறதிலே இருந்து எல்லாமே இதன் மூலமே இன்னிக்கு நடந்தது. எத்தனை நேரமோ தெரியலை. சீக்கிரமாய் தொழில் நுட்ப நிபுணர் வந்து என்னைக் காப்பாத்தணும், இந்தக் கொடுமையிலே இருந்துனு வேண்டிக்கிறேன்.

5 comments:

 1. பேசாமா லினக்ஸிலும் கை வைத்து பார்த்துவிடுங்கள்.

  ReplyDelete
 2. ஜிடாக்ல இருந்தா gமெய்ல்ல லாகின் பண்ணதாதான் அர்த்தம். தொழில் நுட்பர்கள் ஏதாவது பண்ணி ரெண்டு மூணு ஜிமெய்ல் திறப்பாங்க! அதெல்லாம் நம்மால முடியுமா என்ன?

  குமார், உபுண்டு வெச்சு இருக்காங்க. மோடம் யூஎஸ்பி மோடம். அதான் பிரச்சினை. என்டிஸ்ராப்பர் சொல்லி இருக்கேன். நண்பி சரி செய்வாங்களான்னு பாக்கலாம்.

  ReplyDelete
 3. வாங்க குமார், தேடிப் பிடிச்சு வந்ததுக்கு நன்னிங்கோ! லினக்ஸிலும் கை வைக்கிறாப்போல் தான் எண்ணம். அப்புறமா நீங்க தான் வருத்தப் படப் போறீங்க, போங்க! :P :P:P:P

  ReplyDelete
 4. ஜி டாக்லே இருந்து வெளியே வந்துட்டுத் தனியா லாகின் பண்ணி மெயிலுக்குப் போய் அதையும் சைன் அவுட் பண்ணிட்டு இன்னொரு ஐடிக்குப் போகும்போது தான் இந்த மாதிரி எல்லாம் சொல்லுது! என்னத்தைச் சொல்ல போங்க! ஜி டாக்லே இருந்தாலுமே, அதிலே இருந்து இன் பாக்ஸுக்கு எக்ஸ்ப்ளோரர் சில சமயம் அனுமதிக்குது, சில சமயம் உள்ளே போய் மறுபடியும் மெயிலில் லாக் இன் பண்ணச் சொல்லுது. நெருப்பு நரியில் அப்படி இல்லை, திறந்தாலே டண்டடய்ய்ங்க்க்க்க்க்க்க், உடனே மெயில் வந்துடும், ஆனால், அதிலே இருந்து வெளியே வந்துட்டு இன்னொரு ஐடிக்குப் போக முடியலை, செக்யூரிட்டி செட்டிங்கைப் பார்க்கணுமோ?? அதிலே செட்டிங்ஸிலே எப்படினு தெரியலை, திறந்து பார்த்தாலே ஏதானும் ஆயிடுமோனு பயம்ம்ம்ம்ம்மா இருக்கு! :((((((((((((((((

  ReplyDelete
 5. நண்பியோட குழந்தை 2 நாளா மத்தியானம் தூங்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்கு. அது தூங்கினாத் தான்! :))))))))))

  ReplyDelete