நடந்தது நடந்துவிட்டது. தேவி முதலிலேயே கூறினாள். இப்போது இந்தப் பிறவியில் என் எண்ணம் ஈடேறாது என. ஆனால் அடுத்த பிறவி வரையிலும் காத்திருக்க எனக்குப் பொறுமையில்லை. இந்த சாம்ராஜ்யத்திற்குக் குறைந்த பக்ஷமாக முந்நூறு ஆண்டுகள் கிடைக்கும் என தேவியின் ஆசிகள். நீங்கள் இந்த நகரத்திற்கு "விஜயநகரம்" என்று பெயர் வையுங்கள். மேன்மேலும் வெற்றிகள் குவியட்டும். ஹிந்துக்களுக்கும், மற்ற மதத்தவர்களுக்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் சமமாக எண்ணி நல்லாட்சி புரிந்து வாருங்கள்.
அந்நிய மதத்தினரால் இடிக்கப் பட்ட கோயில்களைப் புனர் உத்தாரணம் செய்து கொடுங்கள். இந்த விஷயத்தில் எந்தவிதமான தடைகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் அனைத்துக் கோயில்களையும் செப்பனிடுங்கள். பொதுமக்களையும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்துங்கள். நான் இந்த சாம்ராஜ்யம் நிலைத்து நிற்கவேண்டியே தாது வருஷத்தின் இந்த குருவாரத்தையும், வைசாக மாதத்தையும் , சப்தமி திதியையும் தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் ஒரு சின்னத் தவறினால், ஒரு சங்கோசையினால் அது மாறிவிட்டது. எனினும் முந்நூறு ஆண்டுகளுக்கு இந்த ராஜ்யம் நிலைபெற்றிருக்கும். " என்று ஆசி வழங்கினார்.
ஹரிஹரனும், புக்கனும் தங்கள் குருவின் பெயரான வித்யாரண்யர் என்ற பெயரின் முதல் மூன்றெழுத்தான வித்யாவில் இருந்து வித்யாநகரம் என்ற பெயரிட ஆசை கொண்டனர். ஆனாலும் குருவின் கட்டளையை மறுக்கத் துணிவில்லாமல் தங்கள் சாம்ராஜ்யத்தையே அவர் காலடியில் சமர்ப்பித்து அவர் கட்டளைப்படியே விஜயநகரம் என்ற பெயரிட்டனர்.
இதுதான் ஆரம்பம், பின்னர் ஹரிஹரனோ, புக்கனோ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. சநாதன தர்மம் இன்று வரையிலும் கொஞ்சமாவது நிலைத்திருப்பதற்குக் காரணமே வித்யாரண்யர் தான் என்று அறுதிபடச் சொல்லமுடியும். ஆரம்பத்தில் ஒரு ஏழை பிராமணனுக்குப் பிள்ளையாகப் பிறந்து பின்னர் தனது ஆன்மீகத் தேடலின் விளைவாக அப்போது சிருங்கேரியின் குருமஹா சந்நிதானமாக இருந்த வித்யாசங்கர தீர்த்தரிடம் சந்நியாச தீக்ஷைபெற்றுக் காசிக்குச் சென்றார் வித்யாரண்யர். கடும் தவத்தின் விளைவாக அவருக்கு வேத வியாசரே தரிசனம் கொடுத்து பதரிகாசிரமத்துக்கு வரச் சொன்னதாகவும் அங்கேதான் ஸ்ரீவித்யா மந்திரம் அவருக்கு உபதேசிக்கப் பட்டதாயும் சிருங்கேரி மடம் மற்றும் சில தளங்களின் தகவல்கள் சொல்கின்றன. வித்யாரண்யரின் பூர்வாசிரமத் தம்பியாக இருந்தவர் பாரதி கிருஷ்ண தீர்த்தர் என்ற பெயரில் வித்யாசங்கரருக்கு அடுத்த பட்டத்துக்கு நியமிக்கப் பட்டதாயும், அவரும் சமாதி அடைந்த பின்னர் வித்யாரண்யர் சிருங்கேரி பீடத்தின் 12-வது தலைமை மஹா சந்நிதானமாக நியமிக்கப் பட்டதாயும் அறிகிறோம். 1331-ம் ஆண்டு சிருங்கேரி பீடத்தில் பட்டம் எறிய வித்யாரண்யர் 1386 வரையிலும் அந்தப் பீடத்தின் குருவாகவும், விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைமை ஆலோசகராகவும் இருந்து சநாதன தர்மத்தையும் கட்டிக் காத்ததோடு அத்வைதத்தைப் பரப்பவும், வேதங்கள், உபநிஷதங்கள் பற்றியும் பல நூல்கள் எழுதியும் சேவை செய்து வந்திருக்கிறார்.
இவர் சிருங்கேரி பீடத்தில் ஏறிய காலம் பற்றியும் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லப் படுகிறது. சிருங்கேரி மடத்தின் அதிகார பூர்வத் தளத்தில் இவர் பீடம் ஏறிய ஆண்டு 1381 என்றும் 1386 வரை ஐந்தாண்டுகளே பீடத்தில் இருந்ததாயும் குறிப்பிட்டிருந்தாலும், பல தளங்களிலும் இவர் நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்ததையும், பல வருடங்கள் சிருங்கேரி பீடத்தின் தலைமை மடாதிபதியாக இருந்ததையும் குறிப்பிடுகின்றன. இவரின் குரு வித்யாசங்கரர் யோக முறையில் சமாதி அடைய பாதாளத்தில் தவம் இருந்ததாயும் அப்போது பீடத்தில் இருந்த இவரின் பூர்வாசிரமத் தம்பியான பாரதிகிருஷ்ண தீர்த்தரால் அந்த இடத்தின் மேலே வித்யாசங்கரருக்கு ஒரு கோயில் கட்டப் பட்டதாயும் தெரிய வருகிறது. பாரதி கிருஷ்ண தீர்த்தரும் சீக்கிரமே சமாதி அடைய இவர் பட்டம் ஏறியதாயும் சொல்லப் படுகிறது. இன்னும் சில தகவல்கள், விஜயநகரத்திலேயே வித்யாரண்யர் தமக்கென ஒரு மடம் அமைத்துக்கொண்டதாய்க் கூறுகிறது.
Monday, August 23, 2010
Sunday, August 15, 2010
மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! விஜயநகரம்!
தன்னெதிரே வந்து நின்றவனைப்பார்த்த வித்யாரண்யர் தாம் அவனுக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப் போவதாய்ச் சொல்கிறார். மிரண்ட அவனைச் சமாதானம் செய்து போர்ப்பயிற்சி அளிக்கிறார். இன்னும் சில புத்தகங்களில் சந்திர வம்சத்தவர் ஆன திம்ம தேவர் நாடிழந்து மாதவாசாரியாரைத் தஞ்சம் அடைந்ததாயும் கூறுகின்றனர். திம்ம தேவருக்குப் பிறந்தவர்களே ஹரிஹரனும், புக்கனும் என்றும் கூறுவார்கள். ஆனாலும் ஒரு சில ஆதாரங்களின்படி ஹரிஹரனும், புக்கனும் திம்மதேவரின் மகன்களே ஆனாலும் அவர்கள் முகமதியர்களால் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப் பட்டதும், பின்னர் அவர்கள் தங்கள் சொந்த நாட்டையே முகமதியர் அதிகாரத்திற்கேற்ப மாற்றி அமைக்க அனுப்பப் பட்டதும், அப்போது மாதவரைச் சந்தித்ததும் சொல்கின்றன. ஆகவே நாம் இங்கே புக்கணனையே தயார் செய்தார் என எடுத்துக் கொள்வோம். இப்படித் தயார் செய்யப் பட்ட புக்கணன் தான் பின்னர் சாம்ராஜ்யத்தையும் ஆண்டான்.
தனக்கு உணவளித்த திம்மதேவனின் வம்சம் என்றும் தழைத்துச் சிறப்போடு விளங்கும் எனவும் வித்யாரண்யர் ஆசீர்வதிக்கிறார். தெய்வீக அம்சங்களோடு விளங்கும் எனவும் சொல்கிறார். ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வாரிசில்லாமல் இறக்க, பட்டத்து யானையின் கழுத்தில் மாலையைக் கொடுத்து அனுப்புகின்றனர் மந்திரி பிரதானிகள். மாலையை எடுத்துக்கொண்டு யானை நேரே காட்டுக்குள் வந்து தவம் செய்து கொண்டிருந்த மாதவாசாரியாரின் கழுத்தில் போட அவர் திகைக்கிறார். ஏற்கெனவே மஹாலக்ஷ்மியின் கடாட்சம் வேண்டுமென்பதற்காக அவர் துறவறம் மேற்கொண்டார். அரண்மனையும் சிம்மாதனமும் எப்படிச் சரிவரும்?
யோசித்த அவர் புக்கணனையும், ஹரிஹரனையும் அழைத்து அவர்களை ஆசீர்வதித்துப் பட்டம் கட்டினார். வராஹச் சின்னம் பதித்த தேவியின் மோதிரத்தை அவர்களுக்கு அளித்து அவர்கள் எடுக்கும் எந்தப் புதிய காரியமும் வெற்றியடையும் எனவும், அவர்களால் ஸ்தாபிக்கப் படும் சாம்ராஜ்யம் மிகவும் பிரபலமாகவும், புகழோடும் விளங்கும் எனவும் ஆசீர்வதிக்கிறார். சாம்ராஜ்யத் தலைநகராக ஒரு இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார். முறைப்படி இருவரின் ஜாதகத்தையும் பார்த்து ஒரு நல்ல நாளையும் தேர்ந்தெடுக்கிறார். அந்த நாளில் புதிய தலைநகருக்கான அஸ்திவாரம் கட்ட வேண்டும் என்பது வித்யாரண்யரின் ஆணை.
குருவின் ஆணையை மறுக்காமல் ஹரிஹரனும், புக்கனும் தலைநகருக்கான கட்டுமானங்களை ஆரம்பிக்க அஸ்திவாரம் எடுக்க ஆயத்தம் செய்கின்றனர். வித்யாரண்யர் அஸ்திவாரம் தோண்டிவிட்டு, கட்டட வேலை ஆரம்பிக்கும் முன்னர் தாம் தேவியை வழிபட்டுவிட்டு வருவதாகவும், தேவியின் ஆக்ஞையைப் பெற்று வருவதாகவும் கூறுகிறார். தேவியின் வழிபாடு முடிந்ததுமே கட்டட வேலை ஆரம்பிக்கவேண்டும் எனவும், தாம் வழிபாடு செய்யுமிடத்தில் இருந்து இங்கே வந்து சொல்வதற்குள் நேரம் ஆகிவிடும் என்பதால் தாம் வழிபாடு முடிந்து தேவியின் ஆக்ஞை கிடைத்ததும், சங்கை எடுத்து ஊதுவதாகவும், சங்கோசை கேட்டதும் கட்டட வேலையை ஆரம்பிக்கலாம் எனவும் கூறுகிறார்.
அப்படியே செய்ய ஆரம்பிக்கின்றனர் இருவரும். அஸ்திவாரம் தோண்டிக் கட்டட வேலை ஆரம்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து, இங்கேயும் தேவி வழிபாடும் நடந்து முடிகிறது. இனி குருநாதரின் ஆக்ஞை வரவேண்டியது தான் பாக்கி. சங்கோசை கேட்கவேண்டுமே! இதோ சங்கோசை!
பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மகிழ்வோடு இருவரும் கட்டட வேலையை ஆரம்பிக்கின்றனர். ஒரு நாழிகை ஆனதும் மீண்டும் சங்கோசை.
பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்தச் சங்கோசை சற்றே வித்தியாசமாய் ஏதோ செய்தியைத் தெரிவிக்கிறதே? பதறிப் போனார்கள் இருவரும். உடனே குதிரைகளில் ஏறி குருநாதர் வழிபாடு செய்யும் இடம் செல்ல, அங்கே இவர்களைக் கண்ட குரு திகைக்கிறார். கட்டட வேலையை ஆரம்பிக்காமல் ஏன் இங்கே வந்தீர்கள் எனக் கேட்க, கட்டடவேலையை ஆரம்பித்துவிட்டோமே? திரும்பவும் இரண்டாம் முறையாகவும் சங்கோசை கேட்கிறதே எனப் பார்க்க வந்தோம் என இருவரும் சொல்கின்றனர்.
என்ன இது? இரண்டாம் முறையா? நான் ஒரு முறைதான் சங்கை ஊதினேன் என குரு சொல்ல, ஆஹா, குருநாதர் எவ்வாறு பொய் சொல்லுவார்? எங்கோ தவறு நடந்துள்ளது? இருவரும் விசாரிக்க ஆணையிட, நகர் நிர்மாணத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் மாடுகளையும், ஆடுகளையும் மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இடையன் அவைகளை ஒன்று சேர்க்க சங்கை எடுத்து ஊதியதாக ஒத்துக்கொண்டதைக் கேட்டனர். குருவிடம் வந்து நடந்ததைச் சொல்ல மீண்டும் தியானத்தில் ஆழ்ந்த குரு, பின்னர் மீண்டு வந்து. இந்த சாம்ராஜ்யம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கவேண்டும் என தேவியைப் பிரார்த்தித்துக் கொண்டேன். என்னுடைய கடும் தவத்தால் அடுத்த பிறவியில் நடக்கவேண்டிய ஒன்றுக்கு தேவி இப்போதே சம்மதம் சொன்னாள். ஆனால் அது ஆரம்பிக்க வேண்டிய நேரத்தையும் தேவி குறிப்பிட்டிருந்தாள். ஆனால் அந்த நேரத்திற்கு முன்னரே நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள். தேவி சொல்கிறாள், விதி வலியது, மாதவா, விதியை எவராலும் வெல்ல முடியாது. இந்த சாம்ராஜ்யத்திற்கு முந்நூறு ஆண்டுகளே உயிர் இருக்கும். பின்னர் அழிந்து போய்விடும். அதுவும் ஆரம்பித்த நேரம் சரியில்லாமையால், பல இடிபாடுகளுக்கும் உள்ளாகும். அந்நிய சக்திகளால் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்த இடமே தெரியாமல் மறைந்து போகும் என்று சொல்லிவிட்டாள் என்றார் வித்யாரண்யர்.

Sunday, July 4, 2010
ஒரு மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! வித்யாரண்யர்!
ஏற்கெனவே சொன்னபடி வித்யாரண்யர் கதையைப் பல விதங்களிலும் சொல்கின்றனர். அவர் தமிழ்நாட்டின் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் மாதவர் என்றும் கூறுகின்றனர். இப்படியும் ஒரு கூற்று உண்டு. துங்கபத்திரா நதிக்கரையில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார் என்றும், சிறு வயதில் இருந்தே வேத, வேதாந்தங்களின் மீது கொண்ட பற்றுக் காரணமாயும், மேலே படிக்கவும் காஞ்சிக்கு வந்தார் என்றும் சிலர் கூற்று. இல்லறத்தில் வறுமை பொறுக்க முடியாமல் காஞ்சி ஸ்ரீமடத்தில் படித்து வந்த மாதவர் ஸ்ரீவித்யா வழிபாட்டில் தேர்ந்து விளங்கினார். ஸ்ரீவித்யா வழிபாட்டில் தேவியிடம் பொன்னும், பொருளும் கிடைக்கும் வண்ணம் உள்ள வழிபாட்டைச் செய்து தேவியிடம் பொன்னும், பொருளும் வேண்டினார். ஆனால் இதற்குப் பலனே இல்லை என்றும், அதனால் கோபமுற்ற மாதவர் ஸ்ரீசக்கரத்தை எரிக்க ஆரம்பிக்க, அந்தத் தீயிலிருந்து அரைகுறையாக எரிந்த ஆடையோடு தேவி தோன்றி, "இப்பிறவியில் நீ செல்வத்தை அனுபவிக்க முடியாது. சென்ற பிறவியில் எவருக்கும் ஒரு அரிசிமணிகூடத் தானம் அளிக்கவில்லை. எந்தவிதமான நற்செயல்களும் செய்யாத நீ அடுத்த பிறவியில் தான் செல்வத்தை அநுபவிக்க முடியும்." என்கிறாள். (இது எல்லாருமே ஒரே மாதிரி சொல்கின்றனர்)
தான் நினைத்தபடி செல்வம் கிடைக்கவில்லை என்றதும் மாதவருக்கு வருத்தம் மேலோங்குகிறது. என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். பின்னர் சந்நியாச ஆசிரமம் மேற்கொண்டால் அது இன்னொரு ஜன்மத்திற்குச் சமம் என்பது நினைவில் வர சந்நியாசம் மேற்கொள்ளுகிறார். அப்போது தான் வித்யாரண்யரின் உதவி வேண்டி வந்த ஹரிஹர, புக்கர்களின் அறிமுகமும் கிடைத்ததாயும் புக்கன் தினமும் அளிக்கும் பாலை மட்டுமே அருந்தி அருந்தவம் இயற்றியதாயும் ஒரு கூற்று உண்டு. நீண்ட வருடங்கள் தவம் செய்த மாதவரை சந்நியாசம் வாங்கியதும் வித்யாரண்யர் என்று அழைக்க ஆரம்பித்திருந்தனர். தவத்தின் பலனாக அவர் முன் கலைமகளும், அலைமகளும் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க, சநாதன தர்மம் நிலைத்து நிற்கவும், அந்நியர்களை நாட்டை விட்டு ஓட்டவும் ஓர் இந்து சாம்ராஜ்யத்தை அமைக்க ஆசிவேண்டும் என்றும், அதற்குரிய பொருளுதவியும் வேண்டும் என்றும் கேட்கிறார் வித்யாரண்யர். பொருள் கொடுத்துவிடலாம். ஆனால் சநாதன தர்மத்தை நிலைநாட்ட மாபெரும் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தும் தருணம் இதுவல்ல. இப்போது ஏற்படுத்தும் சாம்ராஜ்யம் பல நூறாண்டுகள் நிலைத்து நிற்காது எனக் கலைமகளும், அலைமகளும் சொல்லியும் வற்புறுத்தித் தனக்கு வேறு வரம் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார் வித்யாரண்யர்.
அவ்வாறே வரம் கொடுத்தனர் தேவியர் இருவரும். அளவிடமுடியாத செல்வத்தைப் பார்த்துத் திகைத்த வித்யாரண்யருக்கு ஒரு கணம் வருத்தமும் மேலோங்கியது. இத்தனை செல்வத்தையும் தான் பயன்படுத்த முடியாது. அதற்குத் தனது சந்நியாச ஆசிரமம் இடம் கொடுக்காது என்பது புரியவர அவர் வருத்தம் மேலும் அதிகமானது. ஆனாலும் இந்தச் செல்வத்தை ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டு தன் மனதிற்கு வலு சேர்த்துக்கொண்டார். அப்போது அந்தத் தேசத்தின் அரசன் வாரிசில்லாமல் இறக்க, மந்திரி பட்டத்து யானையை அலங்கரித்து அதன் கையில் மாலையைக் கொடுத்து நாட்டை வலம் வர வீரர்கள் பாதுகாப்போடு அனுப்பி வைக்கிறான். நாட்டை எல்லாம் விடுத்துக் காட்டில் நுழைந்த பட்டத்து யானை வித்யாரண்யர் கழுத்தில் மாலையைப் போட சந்நியாசியான அவர் தான் அரசாள முடியாது என்பதைத் தெளிவாக்கித் தனக்கு அத்தனை வருடங்களாக உணவு அளித்துப் பாதுகாத்த ஹரிஹர, புக்கர்களை அரசராக்கும்படி கூறுகிறார். அவரின் வித்யையினால் விளைந்த தேஜஸைக் கண்ட மந்திரி, பிரதானிகள் அவர் வார்த்தைக்கு மறுப்புச் சொல்லாமல் புக்கனை அரசனாக்குகின்றனர். ஹரிஹரன் சுற்று வட்டாரங்களில் போர் புரிந்து அந்நியர் படையை அழித்துத் தன் சகோதரனுக்கு உதவி புரிகிறான்.
வாராஹியின் சின்னம் கொண்ட மோதிரத்தை புக்கனுக்கு அளித்து ஆசீர்வதிக்கிறார் வித்யாரண்யர். பின்னர் புதியதாய்த் தலைநகரம் நிர்மாணிக்கச் சொல்கின்றார். தலைநகரம் நிர்மாணிக்கும் முன்னர் தேவியின் வழிபாட்டில் இறங்கிய வித்யாரண்யர் பின்னர் எழுந்து தன் சீடர்களான ஹரிஹர, புக்கர்களிடம், நகர் நிர்மாணத்திற்கான நாளைக் குறித்துத் தருகிறார். இந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் நிர்மாண வேலையை ஆரம்பிக்கும்படியும், அப்போது ஆரம்பிக்கும் வேலையால் நிர்மாணிக்கப் படும் நகரமும், அதைச் சார்ந்த சாம்ராஜ்யமும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும் என்றும் சநாதன தர்மம் செழித்து ஓங்கும் என்றும் கூறுகிறார்.//
இப்படியும் ஒரு கதை விளங்கி வருகிறது. எது எப்படியோ ஹரிஹர, புக்கர்களை அரசனாக்கி அழகு பார்த்தவர் வித்யாரண்யரே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
சென்ற அத்தியாயத்தில் கூறியபடி போர் வீரன் போல் வாட்டம் சாட்டமாய் இருந்த புக்கனைக் கூப்பிட்டுப்போர்ப் பயிற்சி அளித்து வீரனாக்கியதாயும், தன்னைத் தேடி வந்த சாம்ராஜ்யத்தை அவனை ஆளச் சொன்னதாகவும் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கும் நம் கலாசாரமும் சரி, சநாதன தர்மமும் சரி ஓரளவுக்காவது நீடித்திருக்கிறது என்றால் அது வித்யாரண்யராலேயே.

Thursday, June 24, 2010
ஒரு மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! வித்யாரண்யர்
இந்த வித்யாரண்யரைப் பற்றிய பல கதைகள் இருக்கின்றன. என்றாலும் அவர் ஒரு ஸ்ரீவித்யா உபாசகர் என்பதிலும் தேவியை ஆராதனை செய்தவர் என்பதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்தே இல்லை. இவர் பூர்வாசிரமப் பெயர் மாதவர் என்றும், சிலர் இவருடன் படித்த சீடர்களில் ஒருவரே மாதவர் என்றும் சொல்கின்றனர். என்றாலும் எவரும் இவருடைய தவத்தையும், சீலத்தையும், உறுதியையும், மறுக்கவில்லை. முதலில் காஞ்சி மடத்தின் மூலம் தெரிந்து கொண்ட வரலாற்றைப் பார்க்கலாம். மற்றவற்றில் சிறிதே மாற்றம் இருக்கும். வித்யாரண்யர் பற்றிய கதைகள் பலவிதமாய்க் கூறப் படுகின்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தண குலத்தவர் எனவும், திருமணம் ஆனவர் எனவும் சிலர் கூற்று. வறுமையில் வாடிய அவர் காஞ்சி மடத்தில் வேத, வேதாந்தங்களைப் படித்து வந்ததாகவும் கூறுவார்கள். தன்னுடைய வறுமையைப் போக ஸ்ரீவித்யா வழிபாடு செய்து வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு இப்பிறவியில் செல்வம் கிட்டாது எனவும், அடுத்த பிறவியில் தான் செல்வம் கிட்டும் எனவும் அன்னை கூறியதாகவும், சொல்கின்றனர். ஆனால் செல்வம் வேண்டும் என ஆசைப்பட்ட அவரோ அன்னையைக் குறித்துத் தவம் இருந்தார். இந்தப் பிறவியிலேயே தனக்குச் செல்வம் வேண்டுமெனப் பிரார்த்தித்து வந்தார். தேவியோ முன் பிறவியில் வித்யாரண்யர் செய்த பெரும்பாவத்தினால் இப்பிறவியில் அவருக்குச் செல்வம் கிடைக்காது, தானம் என்பதே செய்ததில்லை முன் பிறவியில், அதன் பலனை அநுபவித்தே ஆகவேண்டும் என்கிறாள். கோபம் கொண்ட மாதவர் தான் வழிபட்டு வந்த ஸ்ரீசக்கரத்தை எரித்ததாயும், பாதி உடை எரிந்த நிலையில் அவர் முன் தேவி தோன்றியதாகவும் கூறுகின்றனர். அப்போதும் தேவி அடுத்த பிறவியில் தான் கேட்டது கிடைக்கும் எனக் கூறி மறைகின்றாள். ஆனால் வித்யாரண்யருக்கோ இந்தப் பிறவியிலேயே எப்படியேனும் வாங்கிவிடவேண்டும் என்ற ஆவல். என்ன செய்யலாம்????
நாட்டில் அப்போது ஒரு கஷ்டமான கால கட்டம் கடந்து கொண்டிருந்தது. முகலாயர் கண்களில் பட்ட கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி அதன் செல்வத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தனர். அப்போது வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கு முகலாயர் கூட்டம் கூட்டமாய்ப் படை எடுத்து வந்து கொண்டிருந்தனர். இதனாலும் கிட்டத் தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கும் மேல் சிருங்கேரியில் மடாதிபதிகள் எவரும் சரியாக இல்லாமலும் சநாதன தர்மம் கொஞ்சம் கொஞ்சமாய் க்ஷீணித்துக்கொண்டிருந்தது. காஞ்சி மடாதிபதியாக அப்போது இருந்தவர் வித்யாதீர்த்தேந்திர சரஸ்வதி என்பவர்,. அவரிடமே மாதவன் என்ற பூர்வாசிரமப் பெயர் பெற்றிருந்த வித்யாரண்யரும், சாயனர் என்பவரும் படித்துக் கொண்டிருந்தார்கள். சிருங்கேரி மடத்தின் நிலைமையையும், அந்நியர் படை எடுப்பையும் உணர்ந்த காஞ்சி மடாதிபதி மாதவனுக்கு வித்யாரண்யர் என்ற பெயரை அளித்து சிருங்கேரிக்கு அனுப்புகிறார். இங்கே வந்த வித்யாரண்யரோ தவம் செய்வதில் ஈடுபட்டுக் கலைமகளிடமும், அலைமகளிடமும் செல்வம் வேண்டிப் பிரார்த்திக்கிறார். சந்நியாசம் என்பது மறுபிறவிக்குச் சமானம் என்பதால் அலைமகளும் அவருக்கு அளப்பரிய செல்வத்தை அளித்துச் செல்கிறாள்.
திடீரென ஏற்பட்ட இத்தனை செல்வத்தையும் கண்ட வித்யாரண்யர் திகைத்துப் போய் என்ன செய்வது என்று யோசிக்கிறார். பின்னர் சநாதன தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டவேண்டி இந்தச் செல்வத்தைப் பயன்படுத்த எண்ணிக் கலைமகளிடம் அநுமதி வேண்ட, அவளோ இப்போது அவசரம் வேண்டாம், இப்போது நிர்மாணிக்கும் அரசு வெகுகாலம் நிலைத்து நிற்காது. ஆகவே அடுத்த பிறவியில் முயலவும் என்கிறாள். ஆனால் வித்யாரண்யரோ பிடிவாதமாகத் தன் விருப்பம் நிறைவேறப் பிரார்த்தனையும் தவமும் செய்ய அவ்வாறே ஆசி அளித்து மறைகிறாள் கலைமகள். செல்வமும், வித்யையும் சேர்ந்திருக்கிறது. ஆனாலும் வித்யாரண்யரால் நாட்டை ஏற்படுத்தி ஆள முடியாதே? அவரோ துறவறம் மேற்கொண்டிருக்கிறாரே? என்ன செய்யலாம்? யாரிடம் போய்க் கேட்பது?
ஒரு நாள் அந்தக் காட்டில் மாடு, ஆடுகளை மேய்த்து வந்தான் ஒருவன். பார்க்க என்னமோ வாட்டம் சாட்டமாய்ப் போர்வீரன் போல் இருந்தான். ஆனால் மாடு மேய்க்கிறானே?
Friday, June 11, 2010
ஒரு மறந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை!

ராமாயணத்தின் கிஷ்கிந்தாவான இங்கே துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள ஒரு குகையில் சீதையின் நகைகளைக் கண்டெடுத்த சுக்ரீவன் பாதுகாத்து வைத்ததாய்ச் சொல்லப் படுகிறது. இலங்கைக்குச் செல்லத் திட்டம் வகுக்கும்போது ஸ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணனுடன் தங்கி இருந்ததாய்ச் சொல்லப் படும் குகையும் இங்கே உள்ளது. அருமையான குகை. குளிரூட்டப் பட்ட இடம் போல் இயற்கையின் குளுமை அங்கே தனி ஆட்சி செலுத்துகிறது. இரு பக்கமும் துங்க-பத்ரா ஓட நடுவே உள்ள குகையில் இருந்து எதிரே பார்த்தால் வாலி ஒளிந்திருந்ததாய்ச் சொல்லப் படும் குகை தென்படும். இங்கே இருந்து அம்பு போட்டால் விழும் தூரம் அது எனவும் ராமர் எங்கே இருந்து அம்பை எய்திருக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். எதிரே உள்ள வாலி குகைக்குச் செல்லக் கீழே இறங்கி ஆற்றைப் படகில் கடந்து செல்லவேண்டும். அந்தப் பக்கம் எதிரே தென்படும் மலைகளை ரிஷ்யமுகம் எனவும், மதங்க பர்வதம் என்ற பெயராலும் அழைக்கின்றனர். இப்போது சாம்ராஜ்யம் எப்படி யாரால் ஏற்படுத்தப் பட்டது என்பதைப் பார்ப்போமா?
முஹமது பின் துக்ளக்கின் ஆட்சி நடந்த காலம். ஹொய்சளர்களின் ஆட்சி நடந்த காலம். .மூன்றாம் வல்லாளனுடைய படையின் ஒரு பகுதிக்குத் தலைவனாக சங்கமன் என்னும் (குறும்பர் இனத்தைச் சேர்ந்தவன் எனச் சிலரால் கூறப்படுகிறது.) வீரன் இருந்தான். அப்போது நாட்டில் நடந்து கொண்டிருந்த அந்நியர் ஆதிக்கத்தை ஹொய்சளமும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தது. அவ்வளவு ஏன் தத்தளித்துக்கொண்டிருந்தது என்றும் சொல்லலாம். வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தாலும் அந்நியர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு முன்னால் ஹொய்சள வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சங்கமனின் இரு வீரர்களும் படையில் இருந்தனர். அவர்களும் முழு உத்வேகத்துடன் தென்னாட்டை ஆக்கிரமிக்க வரும் அந்நியர்களை எதிர்த்தனர். தக்ஷிண பீடபூமியில் துக்ளக்கின் அதிகாரத்தை எவ்வாறேனும் குறைக்கவேண்டும் என்பதே அவ்விரு இளைஞர்களின் நோக்கம். ஆனால், அந்தோ! என்ன பரிதாபம்! இரு இளைஞர்களும் சிறை பிடிக்கப் பட்டனர்.

சிறை பிடிக்கப் பட்ட இளைஞர்கள் டில்லிக்குக் கொண்டு செல்லப் பட்டு கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டு அடிமைகளாக நடத்தப் பட்டனர். ஆனால் இளைஞர்களின் வீரத்தையும், விவேகத்தையும் கண்ட டில்லி சுல்தான் அவர்களைத் தென்னாட்டைக் காக்கவேண்டி தெற்கே அனுப்பினான். தென்னாட்டுக்கு வந்த இரு இளைஞர்களும் அப்போது சுல்தான்களை எதிர்த்துப் புரட்சி செய்து கொண்டிருந்த வல்லாளனால் தோற்கடிக்கப் பட்டனர். இளைஞர்கள் அதற்கு முன்னரே தங்கள் மதம் மாற்ற அடையாளங்களைத் துறந்திருந்தனர். எனினும் வல்லாளனால் தோற்கடிக்கப் பட்டதில் மனம் வெறுத்துக் காட்டில் சுற்றித் திரிந்தனர். ஒரு நாள் ஹரிஹரன் கனவில் ரவணசித்தர் தோன்றி மதங்க மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் வித்யாரண்யரின் உதவியையும் வழிகாட்டுதலையும் கேட்குமாறு கூறி மறைந்தார்.
Wednesday, June 9, 2010
ஒரு மறந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை!

ஹம்பி! அடிக்கடி கேட்டிருக்கும் ஒரு பெயர் இல்லையா?? சரித்திரப் பாடங்களிலும் படிச்சிருக்கோம். இதைப் பற்றி ஆராயப் போனால் ராமாயண காலத்துக்கே போகணும். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆம், ராமாயணத்தில் பம்பா நதிக்கரையில் கிஷ்கிந்தாவில் ராமர் சுக்ரீவனுடனான நட்பை ஏற்படுத்திக்கொண்டதாய்ப் படிச்சிருக்கோம். அந்தப் பம்பா நதி தான் இன்றைய துங்க பத்திரா நதி. கிஷ்கிந்தை என அழைக்கப் படும் இடமும் மலைகளுக்கு இடையே துங்க பத்திரை நதிக்கரையில் காணக்கிடைக்கும். அங்கே வாலியை வதம் செய்த இடமும், ராமர் கிஷ்கிந்தையின் மழைக்காலத்தில் தங்கி இருந்த குகையும் காணலாம். வாலி மறைந்துவிட்டான் என எண்ணி சுக்ரீவன் மூடி விட்டு வந்த குகையும் அங்கே உள்ளது. அந்தக் குகைக்கு நாங்க போகமுடியலை. ஆனாலும் ராமர் தங்கின குகையைப் பார்த்தோம். எந்த இடத்தில் இருந்து ராமர் அம்பை எய்திருப்பார் என்பதையும் பார்த்தோம். இப்போ ஹம்பியும், கிஷ்கிந்தையும் ஒன்றாகவே கருதப் படுகின்றன என்றே சொல்லலாம். ஹம்பியின் சரித்திர ஆதாரங்கள் கி.,மு. முதல் நூற்றாண்டுக்கும் முன்னால் செல்கிறது.
பெரும்பாலோர் இதை விஜயநகரத்துடன் சம்பந்தப்படுத்திக்கொண்டு இதுதான் விஜயநகரம் எனவும் நினைக்கின்றனர். அல்ல. விஜயநகரம் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டது. விஜயநகரத்தின் ஒரு சிறு கிராமமே ஹம்பி எனலாம். ஹம்பியில் விஜயநகரக் கட்டிடக் கலையின் சான்றுகளும், அதன் அழிவுகளும் காணக்கிடைப்பதால் இதை விஜயநகரம் என்றே நினைக்கின்றனர்.
ஏன் ஹம்பியைச் சுற்றி நகரை நிர்மாணித்தார்கள் என்றால் துங்கபத்திரை கொடுத்த பாதுகாப்பு எனலாம். ஒரு பக்கம் துங்கபத்திரை நதி பாதுகாத்தாள் எனில் மற்ற மூன்று பக்கங்களிலும் மலைத் தொடர்கள் பாதுகாப்பு அளித்து இயற்கை அரணாகச் செயல்பட்டன. ஹம்பியின் தற்போதைய இடிபாடுகளிலும் ஒவ்வொரு பர்லாங்குக்கும் ஹிந்துக் கடவுளரின் எதேனும் உருவச் சிற்பங்களை இடிபாடுகளுடன், அல்லது சில சிற்பங்கள் அதிசயமாய்த் தப்பி இடிபாடு இல்லாமலும் காணப் படுகிறது. இதை ஐநாவின் உலகப் பாரம்பரியக் கலைச்சின்னங்களில் ஒன்றாகச் சேர்த்திருக்கின்றனர்.இனி ஹம்பியைச் சுற்றித் தோன்றிய விஜயநகரத்தையும், அதன் சாம்ராஜ்யத்தையும் பற்றி அறிவோமா??
Tuesday, June 1, 2010
என்ன பேருனு சொல்றீங்களா இல்லையா???
பெயரிலே என்ன இருக்குனு சிலர் சொல்றாங்க. ஆனால் பெயரிலே தான் எல்லாமே இருக்கு இல்லையா? எங்க வீட்டிலே பாருங்க எந்தப் பெயரைச் சொன்னாலும் அந்தப் பெயரிலே யாராவது ஒருத்தர் இருக்காங்க. இப்போப் பாருங்க, அன்னிக்கு ஒருநாள் அம்பி அங்கிள் தொலைபேசிலே கூப்பிட்டு ஸ்டைலா ஸ்ரீராம்னு சொல்லி இருக்கார். ஸ்ரீராம்ங்கற பேரிலே எங்களுக்கு சொந்தங்கள் நாற்பது பேர்னா நண்பர்கள் பத்துப் பேராவது இருப்பாங்க. யாருனு எடுத்துக்கறது? நம்ம ரங்ஸுக்கு அந்தக் கவலையே இல்லை, குழப்புவார். என்னங்கறீங்க?? ஸ்ரீராமை,பொருத்தமே இல்லாத வேறே பெயராலே, கிருஷ்ணன், சேகர்னு ஆக்கிடுவார். அதோட இல்லாமல் அழுத்தம் திருத்தமா நம்மட்டே அடிச்சுச் சொல்லுவார். அவங்க வீட்டிலேயே போய் அவர் புரிஞ்சுட்ட பேராலேதான் கூப்பிடுவார். அவங்களும் பாவம்னு வந்துடுவாங்க. சிலர் மட்டும் அசடு வழிஞ்சுண்டே(நியாயமாப் பார்த்தா இவர் வழியணும், இங்கே எல்லாமே மாறிடும்) ஹிஹிஹி, என் பேர் சேகர் இல்லை ஸ்ரீராம்னு சொல்லுவாங்க. ஓஹோ, அப்படியானு கேட்டுப்பார். ஆனாலும் விடாம இவர் வச்ச பேராலே தான் கூப்பிடுவார்ங்கறது வேறே விஷயம்.
இதைவிடக் கூத்து ஒண்ணு நடந்துச்சே. ஒருநாளைக்கு திராச சார் கூப்பிட்டார். அவர் திராசனு சொல்லி இருந்தாலே இவர் புரிஞ்சுட்டிருக்க மாட்டார்ங்கறது வேறே விஷயம். அவரோ சந்திரசேகர்னு சொல்லிட்டார். சந்திரசேகர்ங்கற பேரிலே எனக்கு அக்காவீட்டுக்காரர் ஒருத்தர் இருக்கார். அதோட இவரோட நெருங்கின நண்பர்கள் இரண்டு பேர் சந்திரசேகர். இவங்க எல்லாரும் அவரை விடப் பெரியவங்க. ஆனாலும் இவர் நண்பர்கள்ங்கற ஹோதாவிலே ரொம்ப உரிமையா, "என்னப்பா, எப்படி இருக்கே??" னு எல்லாம் கேட்டுட்டு இருந்தார். சரிதான் அவரோட நண்பராக்கும்னு நினைச்சேனா?? தொலைபேசியை என் கையிலே கொடுத்து சந்திரசேகர்டி, உன்னோட பேசணுமாம். ஹிஹி அவர் நினைச்சது சந்திரமெளலியைப் போல. சரினு நானும் தொலைபேசியை வாங்கிட்டு ஹலோனு சொன்னால் எதிர்முனையில் திராச சார் பேசறார். இப்போ அசடு வழியவேண்டிய முறை என்னோடதாச்சு. இத்தனைக்கும் நம்மாளு அசரவே இல்லை. ஹிஹிஹி,இது பங்களூரிலே இருக்காரே உன்னோட நண்பர் மெளலி, அவர்னு நினைச்சேனேனு சமாளிப்பு.
நல்லவேளையாக் கொத்தனார் கூப்பிட்டப்போ "கொத்தனார் பேசறேன்னே சொல்லிட்டார். அவர் பேரிலே எங்க வீட்டிலே "என்னடா, டேய்"னு அதட்டற ரேஞ்சுக்குப் பசங்க இருக்காங்களா? பேர் சொல்லி இருந்தா மனுஷன் முழி முழினு முழிச்சிருப்பார். தி.வா.வேறே ஒருநாள் வாசுதேவன்னு சொல்லவே,அன்னிக்குத் தொலைபேசியை நான் தான் எடுத்தேன், இருந்தாலும் அது என்னோட ஓர்ப்படி பையர்னு நினைச்சுட்டேன். டேய் வாசுனு கூப்பிட்டிருக்கணும், (நல்லவேளையா, எனக்குத் தான் நல்லவேளை! :P) அப்புறம் தான் ஏதோ குரலில் மாற்றம் இருக்கேனு நினைச்சுட்டு, "யாரு"னு திரும்பக் கேட்டால் கடலூர்னு பதில் வந்ததோ பிழைச்சேன். இல்லாட்டி அன்னிக்கு ஒரு வழி பண்ணி இருப்பேன் எங்க பையர்னு நினைச்சு.
கணேசன் கேட்கவே வேண்டாம், எக்கச்சக்கமா இருக்காங்க. டேய்னு கூப்பிடறதிலே இருந்து மரியாதையாக் கூப்பிடற வரைக்கும் இருக்காங்க. பாலாங்கற பேரும் ரொம்ப காமன். அந்தப் பேரிலே நல்லவேளையா இணையத்திலே யாரும் அதிகமா இல்லையோ பிழைச்சாங்க. எங்க பால்காரர் பேரு என்னமோ முனுசாமினு. ஆனால் இவர் வச்சிருக்கிற பேரு என்னமோ அன்பழகன். அன்பழகன் இல்லை முனுசாமினு சொன்னாலும், பால்காரரைப் பார்த்தால் அன்பழகன்னு தான் தோணுதாம். ஆனால் என்ன பேரு அவங்க வீட்டிலே வச்சிருந்தாலும் நம்ம ரங்க்ஸ் கூப்பிடறதென்னமோ அவர் தானாய் செலக்ட் பண்ணிண்ட ஒரு பெயரிலே தான். இப்படி எத்தனை பேரைக் குழப்பி இருக்கார்னு நினைச்சீங்க? எல்லார் பேரையும் இஷ்டத்துக்கு மாத்திடுவார். இது வரைக்கும் அவர் மாத்தாத பேர் என்னோடதுதான்னு நினைக்கிறேன். மாத்தினாச் சும்மா விட்டுடுவோமா???
இப்போ எல்கே தாத்தா வேறே கார்த்திக்னு பேரிலே வந்திருக்காரா? கார்த்திக் என்னோட அண்ணா பையர் பேரு. இவர் கார்த்திக்னு சொன்னால் அவ்வளவு தான். என்னடானு கேட்போம். மீனாங்கற பேரிலே எங்க வீட்டிலே தடுக்கி விழுந்தால் ஒருத்தர் இருக்காங்க. அதனாலே ஒவ்வொரு மீனாவுக்கும் ஒரு அடைமொழி உண்டு. யு.எஸ்ஸிலே மட்டும் எங்களுக்குத் தெரிஞ்சு 3,4 மீனா உண்டு எங்க பொண்ணைச் சேர்க்காமல். இதிலே நம்ம கவிநயா தொலைபேசினாங்கன்னா எதிர்ப்பக்கம் சத்தமே வராது. நம்ம பேச்சுத் தான் எதிரொலிக்கும். அப்போப் புரிஞ்சுடும் அவங்கதான்னு. மத்தவங்க யாரானும் மீனானு சொன்னால் எந்த மீனானு கேட்டுக்கணும். அவ்வளவு ஏன்? என்னோட ஒரிஜினல் பேரான சீதாலக்ஷ்மிங்கறதே எங்க அப்பா வீட்டிலே பிறக்கிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் வச்சிருக்காங்களா? ஒரே சீதாலக்ஷ்மி மயம் தான் வீட்டிலே. நல்லவேளையாக் கூப்பிடற பேரு எல்லாருக்கும் மாத்தி மாத்தி வச்சுட்டாங்களோ பிழைச்சோம். இல்லைனா சீதாலக்ஷ்மினு கூப்பிட்டால் குறைந்தது நாங்க ஐந்து, ஆறு பேர் திரும்பிப் பார்ப்போம். இது ஒரு பரம்பரைத் தொடர்கதை! இரண்டு தலைமுறையா வந்துட்டு இருக்கு. :D
ஹிஹிஹி, இந்தப் பயங்கர ஆராய்ச்சிக்கட்டுரை தொடர்ந்தாலும் தொடரும்! எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க!

Subscribe to:
Posts (Atom)