Monday, November 2, 2009

ஒண்ட வந்த பிடாரியா, ஊர்ப்பிடாரியா??

ரிமோட்டைக் குடு,

மாட்டேன், எனக்கு விஸ்வரூபம் சீரியல் பார்க்கணும்.

அது ஒம்போது மணிக்குத் தானே, இப்போக் கொடு,

இப்போ ஆரம்பிச்சுடும், ராஜ் டிவியிலே சீக்கிரம் ஆரம்பிக்கும்.

க்ர்ர்ர்ர்ர்ர் கொடுன்னா, நான் இந்த சீரியல் பார்த்துட்டு இருக்கேனில்லை?

பாருங்க, யார் வேண்டாம்னது?? நீங்கதானே இப்போ விளம்பர இடைவேளைனு சானல் மாத்தினீங்க? அது மட்டும் பரவாயில்லையா?

விளம்பர இடைவேளைம்போது இந்த சானலில் வர சீரியல் பார்ப்பேன்.

எத்தனை சீரியல் பார்ப்பீங்க?

ஏன்? உனக்கு ஒண்ணும் கம்ப்யூட்டரில் வேலை இல்லை? யாரும் மாட்டிக்கலையா சாட்டிங்குக்கு?

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏன், நான் இருந்தா உங்களுக்குக் கஷ்டமா இருக்கோ?

நீ போய் உன்னோட எழுத்து வேலை ஏதும் இருந்தாப் பாரு, அது சரி, ராஜகோபாலன் போன் பண்ணினார் போலிருக்கே? அவருக்கு அனுப்ப மறந்துட்டியா?

அவர் ஒண்ணும் அதுக்கு போன் பண்ணலை. வேறே சந்தேகம் கேட்டுட்டு இருந்தார், அதான் நீங்க தான் கேட்டுண்டு இருந்தீங்களே?

எங்கே? நீ பேசிண்டிருந்ததிலே சீரியல்லே என்ன பேசிண்டாங்கங்கறதே புரியலை, நீ பேசினதும் என்னனு புரியலை. உள்ளே போய்ப் பேச மாட்டியோ??

நான் டிவி பார்க்க வந்தாலே உங்களுக்குப் பிடிக்கலை..

நான் உன்னோட கம்ப்யூட்டர் கிட்டே வரேனா?

நான் வேண்டாம்னு சொல்லலையே?

எங்கே? கொஞ்சம் தூசி தட்டிக் கொடுப்போம்னா, குய்யோ, முறையோனு அலறுகிறே??

ஆமாம், முன்னாடி தூசி தட்டறேன்னு எல்லா கனெக்ஷனையும் எடுத்துட்டுத் திரும்பப் போடறதுக்குள்ளே போறும் போறும்னு ஆயிடுத்து. போன தடவை லோகல் ஏரியா கனெக்ஷனே வரலை. அப்புறம் எந்த வயர் விட்டுப் போயிருக்குனு ஆராய்ச்சி பண்ணிண்டிருந்தீங்க??

கண்டு பிடிச்சேனா இல்லையா? அதுக்குள்ளே டாடா கம்யூனிகேஷன்ஸ் ஃபீல்டு இஞ்சினியரைக் கூப்பிட்டு, ஒரே அமர்க்களம் பண்ணிட்டே.

அது சரி, விஸ்வரூபம் இன்னும் ஆரம்பிக்கலை??

ஆரம்பிக்கலையா?? முடிஞ்சுடுத்தே? இத்தனை நாழி என்ன நடந்ததுனு நினைக்கறே??

சரியாப் போச்சு போங்க, நான் சரியாவே பார்க்கலை! அந்த ருக்குவுக்குக் கல்யாணம் ஆயிடுத்தா?

ருக்குவுக்கும், வெங்குட்டுவுக்கும் கல்யாணம் ஆகி ஆலத்தி எடுத்து உள்ளே அழைச்சாங்களே? பார்க்கலையா?

ம்ஹும் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை, எப்போவோ சீரியல் பார்க்க வரேன், அதுவும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு, அதுவும் சரியாப் பார்க்க முடியாம.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அதான் முன்னாடி வந்தது தானே, இது ஒண்ணும் புதுசா வரலையே??

எங்கே?? அப்போவும் சரியாப் பார்க்கமுடியலை, அதோட முடிவும் சொல்லாம பட்டுனு நிறுத்திட்டாங்க, இப்போவாவது முடிவு சொல்றாங்களானு பார்க்கவேண்டாமா? இப்போவும் பார்க்கமுடியலைனா??? ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்!

என்ன பார்க்க முடியலை, நீ பார்க்கலைனா நான் என்ன பண்றது?? நான் கோலங்கள் பார்க்கிறதைக் கூட விட்டுட்டேன் உனக்காக. இந்த நேரத்தில் நான் கோலங்கள் தான் பார்ப்பேன். ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரியை விரட்டின கதையா!!!!!!...............

என்னது நான் பிடாரியா??? எங்கே, என்னைப் பார்த்துச் சொல்லுங்க!

பதிலே வரலை, இதுக்கு மட்டும் காதே கேட்கலை போலிருக்கு. ஊர்ப் பிடாரி யாரு, ஒண்ட வந்த பிடாரி யாருனு புரிஞ்சிருக்குமே! இன்னிக்கு இதான்! ஒரு வாரம் முன்னாலே நடந்தது இது! இரண்டு நாளா இணையமும் இல்லை, இணையம் பக்கம் வரவும் முடியலையா, எதுவுமே அப்லோட் பண்ணலை. நாளைக்குப் பார்க்கலாம்.

6 comments:

  1. கீதாஜி, என்ன உங்க வீட்லே தலை கீழா இருக்கு?

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  2. Wow!!insightful Mr Shivam!! He seems to know how it is like , to let a camel's nose in!! :)))) Doen't he Mrs shivam.?Othai vaangaraththukku munnadi odidaraen swami!!

    ReplyDelete
  3. வாங்க ஜவஹர், அதை ஏன் கேட்கிறீங்க?? சோகத்திலே நொந்து போயிட்டாராக்கும், நம்ம ரங்ஸ்! :)))))))))

    ReplyDelete
  4. கோபி, எப்போ பின்னூட்டம் கொடுக்க ஆரம்பிக்கப் போறீங்க?? :P:P:P

    ReplyDelete
  5. வாங்க ஜெயஸ்ரீ, ஹிஹிஹி, நேத்திக்கு ராத்திரி பார்த்திருக்கணுமே! பையர் வேறே வந்துட்டாரா? அவர் மாட்ச் பார்க்கணும்னு 78வது சானலோ 79வது சானலோ மாத்த, நம்ம ரங்ஸ் சன்னுக்கு மாத்த, அதுக்கு மாமியாரும், மச்சினரும் ஒத்து ஊத, பிடிவாதமா ராஜ் தான் வேணும்னு நான் கேட்க, என்ன அமர்க்களம் போங்க! இந்த ஜாலி எல்லாம், தனியா இருந்தா வருமா! நாங்க ரெண்டு பேருமே இதுக்காகவே தனியா இருக்கும்போதும் சண்டை போட்டுப்போம்! அப்புறம் என்ன இருக்கு ரசிக்க??? :))))))))))))))))))))))))

    ReplyDelete
  6. //Doen't he Mrs shivam.?Othai vaangaraththukku munnadi odidaraen swami!!//

    ஹிஹிஹி, நான் கண்டுக்கலை! :D

    ReplyDelete