Wednesday, November 11, 2009
கடும் ஆக்கிரமிப்பு!
கடந்த பத்து நாட்களாக என்னோட கணினி கடுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இது எந்த நாட்டுச் சதி என ஆராய்ந்ததில் யு.எஸ்ஸில் இருந்து வந்திருக்கும் சிலரின் ஆக்கிரமிப்பு எனத் தெரிய வருகிறது. இதைத் தடுக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போய்விட்டது. இதுக்காக டாடா கம்யூனிகேஷன்ஸ்காரங்க இணையத்தை இணைப்புக் கொடுக்காமல் செர்வரை டவுன், டவுன் என்றே ஒரு மூணு நாள் ஓட்டினாங்க. அப்புறமா வேறே வழியில்லாம நேத்திக்கு இணைப்பைக் கொடுத்துட்டாங்க. ஆனால் நமக்கு கணினியே கிடைக்கலையே! ஆண்டவா, இந்த சோகக்கதையை யார் கிட்டே போய்ச்சொல்றது?? நாளைக்குக் கணினி கிடைச்சாத் தான் கஞ்சி வரதப்பர் வருவார். மெதுவா வரேன், அது வரையில் எஞ்சாய் பண்ணுங்க எல்லாரும். சிஷ்யகே(கோ)டிங்க எல்லாம் கொஞ்சம் பொறுத்துக்குங்கப்பா!
Subscribe to:
Post Comments (Atom)
ஆக்கிரமிப்பாளர்கள் யாருன்னு தெரிஞ்சா தாங்க்ஸ் சொல்ல வசதியா இருக்கும்!
ReplyDeleteநீங்களுமா? யூ எஸ் க்கு எதிரி? :-))
ReplyDelete@திவா, உங்க ஆசையைப் பூர்த்தி செய்யறாப்போல் தான் நடக்குது எல்லாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteவாங்க வடுவூராரே, யுஎஸ்ஸுக்கு எதிரி எல்லாம் இல்லை, அங்கேருந்து வந்தவங்கதான் என்னை வேலை செய்யவே விடறதில்லை,
ReplyDeleteஅதுசரி, ரவா உருண்டை அடுத்தமுறை எப்போ கொண்டு வருவீங்க??? சொன்னா வர வசதி!