Sunday, March 15, 2009

ஓட்டு சேகரிப்பு மும்முரமாய் நடக்குதே!

இன்னிக்குக் காலையிலே நுங்கம்பாக்கம்/சேத்துப்பட்டு ஏரியாவில் இருக்கும் சங்கராலயம், சங்கர மடத்துக்குப் போகக் கிளம்பினோம். அதிசயமா வண்டி நான் ஏறி உட்கார்ந்ததும் நிக்கலை. உடனேயே கிளம்பிடுச்சு. (ஆனால் பாருங்க, உட்கார இடம் தான் ம.பா. விடவே இல்லை. எப்போவும் இரண்டு பேருக்கும் இந்த விஷயத்தில் ஒத்தே போகாது. ஆனால் வெளியே காட்டிக்க முடியுமா? நாங்க தான் மனமொத்த தம்பதிகளாச்சே! வண்டி சீட்டிலே நடுவிலே உள்ள கம்பியைக் கூடப் பிடிக்க முடியலை, தொங்க வேண்டியதாயிருக்கு! சொன்னால் நின்னுட்டே வண்டியை ஓட்டிக்கிறேன்னு சொல்லுவார்! அதான் வாயே திறக்கலை!) வண்டி கிளம்பினதே நல்ல சகுனம் தான்னு நினைச்சேன். அதுவும் வரப் போகும் தேர்தலுக்குக் கூட்டணிப் பேச்சு வார்த்தைக்காகப் போறப்போ, வண்டி தடங்கல் இல்லாமல் கிளம்பித்துன்னா நல்லது தானே. அம்பிக்கு வேறே தெரியக் கூடாதே! நான் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு சேகரிப்பது. ஹிஹிஹி, அந்த வண்டியிலே சேத்துப் பட்டு வரைக்கும் எல்லாம் போகலை, அம்பத்தூர் பஸ் ஸ்டாண்டு வரைதான். அதுக்கே தான் இப்படி! :))))))

இப்போதான் மெளலி கொஞ்சம் கொஞ்சமாய் தாய்க் கழகம் பக்கமாய் வந்திருக்கார். அதிலும் அன்னிக்குச் சாட்டிங்கிலே "மொக்கை உங்கள் பிறப்புரிமை!" னு உணர்ச்சி வசப்பட்டுப் பேசி மூடி இருந்த என் கண்களைத் திறந்துவிட்டார். (ஒண்ணும் இல்லை, கொஞ்சம் கண்ணுக்கு ஓய்வு கொடுக்கிறதுக்காக அப்போ அப்போ கண்ணை மூடிப்பேன், மெளலிக்கு இது தெரியவேண்டாம்.)மொக்கை தான் உங்களுக்கு எழுத வரும்னு சொல்றார்னு ம.சா. அடிச்சுக்குது. அது மண்டையிலே ஓங்கி ஒரு தட்டுத் தட்டி அடக்கி வச்சிருக்கேன். மொக்கைக்குப் புது வீடு கட்டி, இடம் மாத்திட்டேனேனு கூடச் சொல்லிப் பார்த்தாச்சு. வழக்கமான ரூட்டிலே இருந்து மாறிடுச்சா, ரொம்ப தூரமா இருக்கு, எங்கே இருக்குனு புரியலைனு சொல்றார். இந்தத் தலைமைக் கழகத்தை இங்கே மாத்தினதிலே இருந்து கொஞ்சம் தொண்டர்கள், குண்டர்கள் வரவு குறைஞ்சு போச்சு. நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்துட்டேன். மொக்கை இடம் மாற்றம்னு அறிவிச்சு ஒரு பதிவு போடணுமோ என்னமோ! :P எனக்கும் இங்கே அதிகமாய் வரமுடியலையா? வேறே வேலைகள் இருக்கே? செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை இங்கே கூட்டிட்டு, நானே தனியாப் பேசிட்டு முடிவு எடுக்க வேண்டி இருக்கு. புலி அப்போ அப்போ கொஞ்சம் எட்டிப் பார்க்குது. எப்போவாவது திவா வந்து எட்டிப் பார்த்துட்டு அப்புறம் காணாமல் போயிடறார். தொண்டர்கள் எல்லாம் இப்படி வராமல் வச்சால் என்ன ஆகிறது. இதுவே உபிச இருந்தால் இப்படி நடக்க விடுவாங்களா?? என்ன பண்ணினால் இங்கே தொண்டர் படையை இழுக்கிறதுனு யோசிச்சு, யோசிச்சு மண்டை காய ஆரம்பிச்சுப் போய், ஒரு வழியா கபீரன்பனோட ஆசையையும் கெடுக்க வேண்டாம், நமக்கும் வசதினு, ஒரு கல்லில் இரண்டு, மூன்று மாங்காய் அடிச்சுடலாம்னு அடிச்சேன். அதான் நேத்திக்கு நாள் நல்லா இருந்ததுனு தேன்சிட்டுலே இணைச்சுட்டேன்.

இனிமேலே இலவச விளம்பரம் கொடுக்க வேண்டாமே, தானே தெரிஞ்சுடும் எல்லாருக்கும். ஓட்டு சேகரிக்கப் போன இடத்திலே நல்லபடியா வேலை முடிஞ்சது. கைலைப் பயணத்திலே (கைலையா, கயிலையானு கவிநயா கேட்டிருக்காங்க, எது தப்பு? எது சரி? யாரானும் சொல்லுங்களேன்) காபி கிடைக்கலைனு எழுதினது மடத்துக்காரங்களுக்கு தெரிஞ்சு போச்சு போலிருக்கு, இங்கே காஃபி கொடுத்தாங்க, (அம்பி, நோட் தி பாயிண்ட்!) அப்புறம் கூட்டமோ, கூட்டம். எல்லாரும் என்னைப் பார்க்கத் தான் வந்திருக்காங்கனு தெரிஞ்சுட்டு இருப்பீங்க இல்லையா? அதான் வெற்றிகரமாய்க் கூட்டம் முடிஞ்சதுனு வச்சுக்குவோமே! தேர்தல் வரைக்கும் இப்படித் தான் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஓட்டு சேகரிக்கணுமே. யார் கவலைப் படறாங்க? எல்லாம் நான் தான் கவலைப் பட வேண்டி இருக்கு! நேரம்!

6 comments:

 1. சங்கர மடத்துக்கு விஜயமா, அது சரி...

  ஆமாம், ப்ரொபைல் மூலமா பார்த்தக்கூட இந்த வலைப்பூ தெரியமாட்டேங்குது...பேசாம, எண்ணங்கள் வலைப்பூல ஒரு லிங்க் குடுத்துடுங்க...

  ReplyDelete
 2. யாரோட ப்ரொஃபைலிலே போய்ப் பார்த்தீங்க?? உங்க் ப்ரொஃபைலிலே உங்க வ்லைப்பூ தான் தெரியும், இல்லாட்டி பேசாம follow - up கொடுத்துடுங்களேன், யாருமே இல்லைனு சொல்லுது. ஒருத்தரானாலும் என் பின்னாடி வராங்கப்பானு பெருமை அடிச்சுக்கலாம்! :P:P:P

  ReplyDelete
 3. //ஒரு கல்லில் இரண்டு, மூன்று மாங்காய் அடிச்சுடலாம்னு அடிச்சேன். அதான் நேத்திக்கு நாள் நல்லா இருந்ததுனு தேன்சிட்டுலே இணைச்சுட்டேன்.//

  வெல்கம்!

  //ஓட்டு சேகரிக்கணுமே. யார் கவலைப் படறாங்க?//
  ஓட்டுக்கு எவ்வளோ கொடுப்பீங்க?
  பூத் ஏஜென்டா இருந்தா என்ன வருமானம் கிடைக்கும்?
  ஒரு நாள் பிரசாரத்துக்கு? ரேட் எல்லாம் சகாயமா இருந்த நான் வரத்தயார்!

  ReplyDelete
 4. //ஓட்டுக்கு எவ்வளோ கொடுப்பீங்க?
  பூத் ஏஜென்டா இருந்தா என்ன வருமானம் கிடைக்கும்?
  ஒரு நாள் பிரசாரத்துக்கு? ரேட் எல்லாம் சகாயமா இருந்த நான் வரத்தயார்!//

  இங்கே எல்லாம் ஒன் சைட் தான். வரவு நமக்கு மட்டுமே, இலவசமாய் வந்து சேவை புரிய மட்டுமே தொண்டர்கள்! :P:P:P:P மெளலி அப்படித் தான் ஒத்துட்டிருக்கார்! :)))))

  ReplyDelete
 5. //இலவசமாய் வந்து சேவை புரிய மட்டுமே தொண்டர்கள்! :P:P:P:P மெளலி அப்படித் தான் ஒத்துட்டிருக்கார்! :)))))//

  மௌலி மார்கெட்டை கெடுக்காதேப்பா!

  ReplyDelete
 6. @திவா, அதெல்லாம் நடக்காது, சொன்னா சொன்னது தான். இலவசத்திலேயே ஊறிப் போயிருக்கோம் நாங்க, இப்போ மாத்திக்க முடியுமா? :P:P:P

  ReplyDelete