Wednesday, March 18, 2009

பாகற்காய் பிட்லையும், மோடியும்!

மூஞ்சியைச் சுளிச்சுக்கிறவங்களுக்கு. எனக்கும் சின்ன வயசிலே பாகற்காய் சாப்பிடப் பிடிக்காது. எங்க அப்பாவுக்கு உயிரே அதிலே தான் இருந்தது. அதனால் வீட்டில் அடிக்கடி பாகற்காய் இடம் பெறும். அப்பாவோட சாப்பிட உட்கார்ந்தா பாகற்காய் சாப்பிடணும் என்பதற்காகவே நழுவிடுவேன். ஆனால் இதெல்லாம் என்னோட சித்தப்பா கிட்டே பலிக்கலை. இது வேறே சித்தப்பா. இவரும் அம்மாவோட தங்கை கணவர் தான். மதுரைக்கருகே இருக்கும் சின்னமனூர் என்னும் ஊரில் பிரசித்தி பெற்ற மருத்துவராய் இருந்தார். இன்னிக்கு நான் உட்கார்ந்து எழுதற அளவுக்கு நடமாடுவது இவரோட வைத்தியத்தில்னு சொல்லலாம். கல்யாணத்துக்கு முன்னாடி அங்கே போகும்போதெல்லாம் பாகற்காய் கறி, கூட்டு, பிட்லை பண்ணும்போதெல்லாம் சாப்பிடமாட்டேன்னு நழுவ முடியாது இவர் கிட்டே. தட்டு நிறையப் போடச் சொல்லிட்டு சாப்பிடற வரைக்கும் கிட்டேயே இருப்பார். இல்லைனா ஊசி போடுவேன்னு பயமுறுத்துவார். ஊசின்னா கொஞ்சம் பயம் தான் இப்போவும். ஆனாலும் இந்த மருத்துவர்கள் விடாமல் என்னைக் குத்தறது வேறே விஷயம். அதைத் தனியா வச்சுக்குவோம்.

பரோடா போயிருந்தப்போ மாமியார் எனக்குப் பாகற்காய் பிடிக்கும்னு வாங்கி வச்சிருந்தாங்க. நாங்க ஒருநாள் அங்கே உள்ள கடைத்தெருவிலே வேலை இருந்ததுனு போனோம். அப்போ இன்னிக்கு பாகற்காய் பிட்லை செய்து வைக்கிறேன்னு சொல்லி இருந்தாங்களா? நானும் ரொம்ப ஆவலோட என் கண் முன்னே பிட்லை வெள்ளமாய் ஓட, அதிலே குளிக்கறாப்போல் கனவெல்லாம் கண்டு கொண்டு கடைத் தெருவுக்குப் போயிட்டு பிட்லை சாப்பிடற ஆசையோட வீட்டுக்கு வந்தோம். அன்னிக்கு என்னோட விரதநாள் என்பதாலே காலையிலே இருந்து எதுவும் சாப்பிடலை. நல்ல பசி வேறே. வீட்டுக்கு வந்தால் என்ன ஒரு அநியாயம்?? இந்த மோடி மின்சாரத்தைத் தடை செய்திருந்தார். நாங்க கிளம்பினதும் போன மின்சாரம் 12 மணி ஆகியும் வரவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு மாமியார் வேறே வழியே இல்லாமல் பாகற்காயைப் பிட்லை பண்ணாமல் சும்ம்ம்மா சாம்பாராய்ப் பண்ணிட்டாங்க. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. சாப்பாட்டைத் தியாகம் பண்ணிடுவேனோனு ம.பா. நினைக்க, நான் தட்டை எடுத்துப் போட்டுட்டு, சாம்பாரில் உள்ள பாகற்காயை மட்டும் போடச் சொல்லிச் சாப்பிட்டுவிட்டு மனமார, நெஞ்சார மோடியைத் திட்டினேன். சாப்பிட்டு முடிஞ்சது. மின்சாரமும் வந்தது.

சென்னை வந்து ஆசை தீர பாகற்காய் பிட்லை செஞ்சு சாப்பிட்டதும் தான் மனசே சமாதானம் ஆச்சு போங்க. பிட்லை செய்யும் விதம் தனியாக் கொடுக்கிறேன். 2,3 விதங்களில் செய்யலாம். அங்கே போய்ப் பார்த்துக்குங்க. இங்கே இல்லை.

டிஸ்கி: அந்த வலைப்பக்கத்துக்கு இது ஒரு சின்ன விளம்பரம் தான்! :))))))))))))
இங்கே

4 comments:

  1. பாகற்காய் எனக்கும் பிடிக்கும். பாகற்காய் சிப்ஸ் தான் ரொம்ப பிடிக்கும். :)

    அது என்ன பிட்லை.. சொல்லுங்க அதையும் செய்து சாப்பிடுவோம் :)

    ReplyDelete
  2. அது சரி, குஜராத்தில் பவர் கட் பிரச்சனையே இல்லனு படிச்ச ஞாபகம். அப்புறம் மின்சாரம் போச்சுனு சொல்லுறீங்க... அடிக்கடி போகுமா?

    ReplyDelete
  3. வாங்க புலி, கரெக்டா சாப்பாடு பத்தி எழுதினதும் வந்துட்டீங்க! :P

    பிட்லை இங்கே எழுத மாட்டேன், அதுக்குத் தனி வலைப்பக்கம் ஒதுக்கி லிங்கும் கொடுத்திருக்கேனில்லை, அங்கே பின்னூட்டம் அப்புறமா எப்படி வருமாம்? அங்கே தான் போடப் போறேன். வெயிட் பண்ணுங்க.

    ReplyDelete
  4. குஜராத்தில் பவர்கட் பிரச்னை இல்லைதான். ஆனால் பராமரிப்புக்காக வாரம் ஒரு முறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பவர் விநியோகம் நிறுத்தப்படுகிறதுனும் எழுதின ஞாபகம் இருக்கே! :P:P:P

    க்ர்ர்ர்ர்ர்ர் போய் ரிவிஷன் பண்ணுங்க! பரிட்சை உண்டு!

    ReplyDelete